தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 18 September 2013

17.09.2013 பேச்சுவார்த்தை - விவரங்கள்



30 அம்சக் கோரிக்கைகளில் தீர்வு காண 27.09.2013 அன்று வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று UNITED FORUM OF UNIONS அறைகூவல் விட்டிருந்தது. 17.09.2013 அன்று பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் அழைத்திருந்தது. அதன்படி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
FORUM தரப்பில் 
  • தோழர். நம்பூதிரி
  • தோழர். அபிமன்யு
  • தோழர். அனிமேஷ்மித்ரா
  • தோழர். கோஃலி
  • தோழர். தோமர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நடைபெற்றது.
எடுத்த எடுப்பில், நிறுவனத்தின் நிதிநிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக நிர்வாகத் தரப்பு தெரிவித்தது.
நிதிநிலை மேம்பாட்டில் சங்கங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும் நிர்வாகம் அதற்கான உறுதியான உண்மையான திட்டங்களுடன் முன் வர வேண்டும் என்றும் ஃபோரம் தரப்பில் கூறப்பட்டது.

பின்னர் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.
ஆண்டுயர்வுத்தொகை தேக்கநிலை(STAGNATION): NE 1 முதல் NE 5 வரையிலான ஊதிய விகிதங்களை ஒன்றிணைத்தால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்று விவாதிக்கப் பட்டது.

ஊதிய இழப்பு: JTO/JAOக்களுக்கு வழங்கியதைப் போன்று 5 கூடுதல் இன்கிரிமெண்ட் வழங்குவதன் மூலம் TTA போன்ற ஊதிய இழப்பு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

பெயர் மாற்றம்: ஜனவரி 2013 உடன்படிக்கையின் படி TM, RM கேடர்களின் பெயர் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் Sr.TOA, TTA கேடர்களின் பெயர் மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்க வேண்டும் என்றும் அதற்கான குழுவில் 9:5 விகிதாச்சார அடிப்படையில் BSNLEUக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

மேலும் E-1 ஊதியம், 78.2% நிலுவைத்தொகை, வாரிசுக்கு வேலை நடைமுறைகளில் மாற்றம், விடுபட்ட தற்கால ஊழியர்களின் பணி நிரந்தரம் ஆகிய மேலும் பல கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.

தகுந்த முடிவுகள் எடுப்பதாகக் கூறிய நிர்வாகம் வேலைநிறுத்தத்தைக் கைவிடக் கோரியது. மேலும் அக்டோபர் 4ம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதாகக் கூறியது.

கோரிக்கைகளின் தீர்வில் அக்கறை காட்டிய நிர்வாகத்திற்கு நன்றியையும் அதே சமயம், ஊழியர்கள் திட்டமிட்டபடி 27.09.2013 வேலைநிறுத்தத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்தியச் சங்கம் அறிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment