தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 20 September 2013

அணு விபத்து பொறுப்புச்சட்டம் -அமெரிக்கக் கம்பெனிகளுக்கு விலக்கா?

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டின் மூலமாக அணுசக்தித் துறையில் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கைப்பாவையாகவே மாறிவிட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தியாவில் அமெரிக்க அணு உலைகளால் விபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பேற்பதிலிருந்து அமெரிக்கக் கம்பெனிகளுக்கு விலக்கு அளிக்கும் விதமாக இந்திய நாட்டின் சட்டத்தையே வளைக்கத் துணிந்திருக்கிறது. எதிர்வரும் செப்டம்பர் 27ம் தேதி  நியூயார்க்கில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைச் சந்திக்கும் போது இதற்கான உத்தரவாதத்தை பிரதமர் மன்மோகன் சிங் அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாட்டில் மன்மோகன் அரசு கையெழுத்திட்டது. இதை மிகக்கடுமையாக எதிர்த்த இடதுசாரிக் கட்சிகள் அந்த சமயத்தில் அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டன. இதனால் அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதி போன்ற கட்சிகளுடன் பேரம் பேசி தனது ஆட்சியை காங்கிரஸ் கூட்டணி தக்க வைத்துக்கொண் டது.


இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டால் இது வரையிலும் சர்வதேச அரங்கில் அணுசக்தித்துறையில் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் தொடர்பான தடைகள் விலக்கப் படும் என்று அமெரிக்கா ஆசை வார்த்தை காட்டியது. அதற்கு மன்மோகன் அரசு இணங்கியது. உடன்பாடு கையெழுத்தான பின்னர் இந்தியாவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போவதாகக் கூறி அமெரிக்க அணு உலை நிறுவனங்கள் சுமார் 10 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களை அளிக்க இந்திய அரசு சம்மதித்தது.

உலகில் இது வரையிலும் வேறெங்கும் சோதிக்கப்படாத இரண்டாம் தர அணு உலைகளை இந்தியாவில் நிறுவி பல்லா யிரம் கோடி டாலர்களை கொள்ளையடிக்க அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டன. இந்நிலையில், அணு உலை விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக கடுமையான முறையில் விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. ‘அணு விபத்து பொறுப்புச்சட்டம்என்ற அந்த சட்டத்தில், இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் சப்ளை செய்யும் அணு உலைகள் நிறுவப்பட்டு அதில் விபத்து ஏற்பட்டால் அந்நிறுவனங்களைப் பொறுப்பாக்கும் சட்டவிதிகள் உறுதி செய்யப்பட்டன. ஆனால், அந்தச்சட்ட விதிகளை நீக்குமாறு கடந்த பல ஆண்டு காலமாக தொடர்ந்து இந்தியாவை அமெரிக்கா நிர்ப்பந்தித்து வருகிறது. இந்த நிர்ப்பந்தத்திற்கு இரையாகியுள்ள மன் மோகன் அரசு, அணு விபத்து பொறுப்புச்சட்டத்தில் மிக முக்கிய அம்சங்களை ரத்து செய்வது அல்லது திருத்துவது என்று தீர்மானித்துள்ளது.

இதற்காக நாடாளு மன்றத்திற்குத் தெரியாமல், மக்களிடம் தெரிவிக்காமல் ரகசியமான முறையில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது தற்போது வெளிச் சத்திற்கு வந்துள்ளது. அணு விபத்து பொறுப்புச்சட்டத்தில் உள்ள முக்கியமான விதிகள் மாற்றத்தக்கவை என்று நாட்டின் தலைமைச் சட்ட முகவர் மூலமாக ஒரு கருத்தை முன் வைக்கச் செய்து, அதன் மூலம் சட்டத்தை திருத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அரசின் விருப்பத்திற்கு ஏற்ப கடந்த செப்டம் பர் 4ம் தேதி அணுசக்தித் துறைக்கு தலைமைச் சட்ட முகவர் (அட்டர்னி ஜெனரல்) கூலம் வாகன்வதி ஒரு குறிப்பை அனுப்பியிருக்கிறார்.

அணு விபத்து பொறுப்புச்சட்டத்தின் 17வது பிரிவை பயன்படுத்துவதா இல்லையா என்பதை இந்தியாவில் ஒரு அணு உலையை செயல்படுத்துகிற பொறுப்பை ஏற்றிருக்கும் நிறுவனம் தீர்மானித்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள் என்ன வென்றால், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்த ஒரு அணு உலையும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்திக் கழகத்தின் மூலமாகவே இயக்கப்படும்; விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அணு உலையை சப்ளை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கோருவதா இல்லையா என்பது குறித்தும், விபத்துக்கு அந்த வெளிநாட்டு நிறுவனத்தை பொறுப் பாக்குவதா இல்லையா என்பது குறித்தும் மேற்படி அணுசக்தி கழகமே முடிவு செய்து கொள்ளலாம் என்பதாகும். இதை ஏற்றுக் கொண்டால், அணு உலையை சப்ளை செய்த வெளி நாட்டு நிறுவனமே பொறுப்பு என உறுதி செய்துள்ள மேற்படி சட்டத்தின் பிரிவு 17(பி) தானாகவே செயலிழந்து விடும். இதையே அமெரிக்காவின் மிகப்பெரும் அணு உலை கம்பெனிகளான வெஸ்டிங் ஹவுஸ் மற்றும் ஜி.. போன்றவை விரும்புகின்றன.

இப்படி ஒரு மாற்றத்தை செய்யுமாறு இந்தியாவை நிர்ப்பந்திக்கும்படி ஒபாமா அரசை மேற்கண்ட நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிர்ப்பந்தத்தை ஏற்று அணு விபத்து பொறுப்புச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஒபாமாவை சந்திக்கும் பொருட்டு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment