நாக்பூரில் திங்களன்று துவங்கிய
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
23வது மாநாட்டின் பிரதிநிதிகள் அமர்வு
நெல்சன் மண்டேலா அரங்கில்
செவ்வாயன்று துவங்கியது.
ஜனவரி 24ம்தேதி வரை நடைபெறும்
பிரதிநிதிகள் மாநாட்டில்
நாடு முழுவதிலிருந்தும்
பிரதிநிதிகளும் பார்வையாளகளுமாக
சுமார் 2000 பேர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக திங்களன்று பொது மாநாட்டினைத் துவக்கிவைத்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., பேசியதாவது:
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படவேண்டும் என்று கூறியது. பாபர் மசூதி இடிப்பிற்குப்பின் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப்பின் இந்த முயற்சி நின்று போனது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் காப்பீட்டுத்துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க முயற்சித்தபோது, காங்கிரஸ் 26 சதவீதம் போதும் என்று எதிர்த்தது.
எல்ஐசி ஊழியர்கள் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான பொதுமக்களைச் சந்தித்துக் கையெழுத்துப் பெற்றனர். இது பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையைவிட அதிகமாகும். ஆனாலும், பாஜக நிறைவேற்றியது, அதற்கு காங்கிரஸ் உதவியது. தற்போது காங்கிரஸ் 49 சதவீதமாக்க முயற்சிக்கும்போது, பாஜக எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கிறது.
உண்மையில் யார் அந்தப் பெருமையைப் பெறுவது என்பதுதான் போட்டியாகும். எனவே 2014 தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இரண்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காப்பீட்டுத்துறை மேலும் சீரழிக்கப்படும் என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உண்மையில் யார் அந்தப் பெருமையைப் பெறுவது என்பதுதான் போட்டியாகும். எனவே 2014 தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இரண்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காப்பீட்டுத்துறை மேலும் சீரழிக்கப்படும் என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது பிள்ளைகளுக்கு, தாய்மார்களுக்கு உணவளிக்க நிதியில்லாத நாட்டில்தான், சொகுசுக் கார்கள் வாங்க நிதியிருக்கிறது. அனைவருக்கும் கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.1.75 லட்சம் கோடி தேவை. 2ஜி ஊழலில் மட்டும் இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி, எனவே ஒரே ஒரு ஊழலைத் தடுத்தால் அனைவருக்கும் கல்வி வழங்க முடியும்.
வறுமைக்கோடு வரையரையின்றி அனைவருக்குமே பொதுவிநியோகத் திட்டத்தை வழங்க ரூ.0.90 லட்சம் கோடி கூடுதலாகத் தேவை; ஆனால் நிலக்கரி ஊழலில் மட்டும் இழப்பு ரூ.1.86 லட்சம் கோடி, எனவே பாதி ஊழலைத் தடுத்தாலே அனைவருக்கும் உணவும் வழங்கமுடியும். அந்நிய முதலீடு வந்தால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லிக்கொண்டு அரசு கொண்டுவந்த முதலீட்டால் வளர்ச்சி வரவில்லை. கடந்த ஓராண்டில் தொழில்துறை உற்பத்தி 6 சதவீதத்திலிருந்து, 0.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எனவே தேவை அரசின் கொள்கைகளில் மாற்றம். அத்தகைய மாற்றமே விலை வாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் வேதனைகளிலிருந்தும், தனியார்மயம் போ ன்ற நாசகர நடவடிக்கைகளிலிருந் தும் பாதுகாக்கமுடியும். அத்தகைய கொள்கைகளுக்குத் தேவை மாற்று அரசு. பாஜக, காங்கிரசில் இரண்டில் யார் வந்தாலும் ஒரே கொள்கையைத்தான் பின்பற்றப்போகின்றன; இதற்கு மாற்று இல்லை என்று பிரச்சாரம் செய்யப் படுகிறது, உண்மையில் மாற்று என்பது மக்கள் தேர்ந்தெடுப்பதில்தான் உள்ளது.
எனவே 2014ல் மாற்றம் ஏற்படுவதை உறுதி செய்யுங்கள் என்று சீத்தாராம் யெச்சூரி பேசினார்.