தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 10 January 2014

செய்தித் துளிகள்



மேற்கு வங்க BSNL ஒப்பந்த ஊழியர் மாநில மாநாடு
ஜனவரி 11, 12 தேதிகளில் மேற்கு வங்க BSNL ஒப்பந்த ஊழியர்கள் மாநாடு நடைபெற உள்ளது. ஒப்பந்த ஊழியர்களை அமைப்புரீதியாகத் திரட்டி ஒரு வலுவான சங்கமாகச் செயல்படுவதில் மேற்கு வங்கம் முன்னணியில் இருக்கிறது.
மாநாடு வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்!

ஸ்பெக்ட்ரம் கட்டணத்தைத் திருப்பித் தர
அமைச்சரவைக்குழுக் கூட்டம் முடிவு
9.1.2014 அன்று நிதிஅமைச்சர் திரு. ப. சிதமபரம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில், BSNL மற்றும் MTSNL நிறுவனங்களின் புத்தாக்கத்திற்குப் பயன்படும் என்பதால், BSNLக்கு ரூ.6724.51 கோடியும் MTNLக்கு ரூ. 4533.97 கோடியும் திருப்பித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீடு
அந்நிய நேரடி முதலீட்டை ரயில்வேதுறையில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து முன்மொழிந்துள்ளது. தேசத்தின் மிகப்பெரிய சேவைத்துறையிலும் அந்நிய முதலீடு என்ற மத்திய அரசின் நாசகர முடிவு கண்டனத்திற்குரியது.

 

மத்திய அரசு ஊழியர்கள் தர்ணா
9.1.2014 அன்று புதுடில்லி, ஜந்தர் மந்தரில் மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளன அறைகூவலுக்கிணங்க 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கான குறிப்புகள், 5 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம், இடைக்கால நிவாரணம், 5 கட்ட பதவி உயர்வு போன்ற, 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வலுவான தர்ணா போராட்டம் நடைபெற்றது.
அவர்தம் கோரிக்கைகள் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment