உலகில் முதல் சோசலிச சமூகத்தைப் படைப்பதில் பெரும் பங்காற்றிய லெனின் மறைந்து 90 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எனினும் உழைக்கும் மக்களுக்கும் அவர்களின் விடுதலைக்கு போராடும் பொதுவுடமை போராளிகளுக்கும் லெனின் வாழ்வும் பணியும் கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகிறது. பொதுவுடமைக் கோட்பாடுகளின் பல முக்கிய அம்சங்களை லெனின் செழுமைப்படுத்தினார். காலத்திற்கேற்ப புதிய கோட்பாடுகளையும் உருவாக்கினார். அவற்றில் ஒன்று தொழிலாளி வர்க்கத்தின் கட்சி பற்றிய கோட்பாடுகள் ஆகும்.
கட்சி உறுப்பினர் ஆவதற்குதகுதி என்ன?
“கட்சி உறுப்பினராக ஆவதற்கு எவருக்கு உரிமை உள்ளது?” இது ஒரு மிகப்பெரிய கோட்பாடு அடிப்படையிலான கருத்து போராட்டமாக ருஷ்ய கட்சியில் (அன்று சுளுனுடுஞ எனும் பெயரில் இருந்தது) உருவானது. “வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு தொழிலாளியும் கட்சி உறுப்பினர்தான்!” என வாதிட்டார் மார்ட்டோவ். இதனை மறுத்தார் லெனின். ஒவ் வொரு வேலை நிறுத்தத்தையும் கட்சி ஆதரிக்க வேண்டும். ஆனால் வேலை நிறுத்தத் தில் பங்கேற்பது மட்டுமே கட்சி உறுப்பினர் ஆவதற்கு தகுதி அல்ல. கீழ்கண்ட தகுதிகளும் இருத்தல் வேண்டும் என்றார் லெனின்:ஞீ கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும்.ஞீ கட்சியின் கூட்டு முடிவுகளுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
சமூக மாற்றத்திற்காக இடை விடாது பணியாற்ற வேண்டும்.போன்ற பல தகுதிகளும் உடையவர்தான் கட்சி உறுப்பினராக முடியும் என வாதிட்டார் லெனின்.தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படைதான் கட்சி. தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வுள்ள ஊழியர்கள் சமூக மாற்றத்தின் மீது நம்பிக்கை கொண்டு கட்சியில் இணைகின்றனர். எனவே ஒட்டு மொத்த வர்க்கத்தையும், வர்க்கத்தின் முன்னணிப் படையையும் ஒன்றாக போட்டு குழப்பக்கூடாது என்பது லெனின் அவர்களின் வாதம்.கட்சி உறுப்பினர்களின் தரம் குறித்து அன்று லெனின் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும். கட்சி உறுப்பினர்களின் தரம் உயர்வது என்பது ஒட்டுமொத்த கட்சியின் தர உயர்வுக்கு இட்டுச்செல்லும். அத்தகைய தர உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. கட்சி உறுப்பினர்களின் தரம் குறித்து லெனின் முன்வைத்த கோட்பாடு கட்சியின் தரத்தை உயர்த்துவதற்கு செயல்படும் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் அய்யமில்லை.
புகழ் பெற்ற தனது படைப்பான “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” எனும் ஆவணத்தில் லெனின் ஒரு தொழிலாளி வர்க்க கட்சி எத்தகைய கோட்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என விளக்குகிறார். அவர் முன்வைக்கும் சில முக்கிய கோட்பாடுகள்:எ கட்சியின் அமைப்பு விதிகளை இடைவிடாது கடைப்பிடிப்பதுஎ எவருக்கும் விதிவிலக்கு இன்றி கட்சிக் கட்டுப்பாடை அமலாக்குவதுஎ உயர்ந்தபட்ச உட்கட்சி ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதுஎ ஜனநாயக மத்தியத்துவத்தை அமலாக்குவதுஎ விமர்சனம்- சுய விமர்சனம் செய்வதுஎ அனைத்து மட்டங்களிலும் கூட்டு செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்துவது.லெனின் உருவாக்கிய இந்த முக்கிய கோட்பாடுகளை கட்சி உதாசீனப்படுத்தும் பொழுது அதன் முன்னேற்றம் தடைபடுகிறது. சோவியத்தில் சோசலிசம் சிதைவதற்கு முன்னோடியாக கட்சியினுள் லெனின் வகுத்த கோட்பாடுகள் சிதைவிற்கு உள் ளாயின என்பதே அனுபவம்.“தொழிலாளி வர்க்கம் வெல்ல முடியாத சக்தியாக உருவாக வேண்டுமெனில் மார்க்சிய அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை ஸ்தாபன ஒற்றுமை மூலம் செழுமைப்பட வேண்டும்” ஏனெனில் “மூலதனத்தை எதிர்த்து போராடும் உழைக்கும் மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் ஸ்தாபனம் தான்” என அழுத்தம் திருத்தமாக கூறினார் லெனின். லெனின் உருவாக்கிய மகத்தான இந்த கோட்பாடுகள் இன்றும் வழிகாட்டியாக உள்ளன எனில் மிகை அல்ல.
லெனின் அவர்களின் படைப்பாக்கத் திறன்
“மார்க்சியம் ஒரு வறட்டுச் சூத்திரமல்ல. அது புரட்சிகர நடைமுறைக்கு ஒரு வழிகாட்டி” இந்த மகத்தான உண்மையை திரும்பத்திரும்ப லெனின் பொதுவுடமைப் போராளிகளுக்கு நினைவுபடுத்தினார். மார்க்சியத்தை படைப்பாற்றல் திறமையோடு ருஷ்ய சூழலுக்கு பொருத்துவதில் அவர் மகத்தான வெற்றி பெற்றார்.முதலாளித்துவம் குறித்து காரல் மார்க்ஸ்ஆழ்ந்த ஆய்வு செய்தார். அதன் அடிப் படையில் லெனின் தனது சமகாலத்து முதலாளித்துவத்தின் பரிணாமத்தை ஆய்வுசெய்தார். அதன் விளைவாக உரு வான பல முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங் களில் ஒன்று “ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம்” என்பது ஆகும். முதலாளித்துவம் தனது புதிய வடிவத்தை அடைந்துவிட்டது.
இது முதலாளித்துவத்தின் வளர்ச்சி மட்டுமல்ல; சோசலிசப் புரட்சி யின் எழுச்சிக்காலம் என்பதையும் சுட்டிக் காட்டினார்.வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில்தான் சோசலிச புரட்சி முதலில் உருவாகும் என மார்க்சும் ஏங்க்கெல்சும் மதிப்பிட்டனர். அப்பொழுது ஏகாதிபத்தியம் எனும் வடி வத்தை முதலாளித்துவம் அடையவில்லை. ஏகாதிபத்திய கால கட்டத்தில் புரட்சி “முத லாளித்துவத்தின் பலவீனமான கண்ணியில்” கூட உருவாகும் வாய்ப்புள்ளது என்பதை லெனின் முன்வைத்தார். புரட்சியின் அகநிலைத் தேவையான பொதுவுடமை இயக் கம் தயாராக இருப்பின், பொருளாதார அம்சத்தில் பின் தங்கியுள்ள தேசத்தில் கூட புரட்சி சாத்தியம் எனும் லெனின் அவர்களின் ஆய்வு மிக படைப்பாற்றல் திறன் கொண்டதாகும். அதை ரஷ்யப் புரட்சியின் மார்க்சின் கருத்தைமறுதலிப்பது அல்ல இது. மாறாக மார்க்சியத் தின் அடிப்படையில் புதிய சூழலுக்கு ஏற்ப உருவான மகத்தான கோட்பாடு ஆகும்.லெனின் முன்வைத்த ஆய்வு உண் மையே என்பதை சோவியத் புரட்சியின் வெற்றி நிரூபித்தது. அப்புரட்சியின் மகத்தான சிற்பி ருஷ்ய உழைக்கும் மக்கள் எனில், அதற்கு தலைமை தாங்கியது ருஷ்ய பொதுவுடமைக்கட்சி. அக்கட்சிக்கு உந்து சக்தியாக இருந்தது தோழர் லெனின் ஆவார்.
லெனின் அவர்களின் படைப்பாற்றல் திறமையும் மார்க்சியத்தை நாம் வாழும் சமூகத்தின் சூழலுக்குப் பொருத்துவதும் ஒவ் வொரு பொதுவுடமைப் போராளியும் லெனி னிடமிருந்து கற்க வேண்டிய அவசிய அவசர பாடம் ஆகும்.லெனின் மறைந்த 90 ஆண்டுகளில் பல மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. நிதி மூலதனம் எனும் புதிய வடிவத்தை முதலாளித்துவம் எடுத்துள்ளது. இதன் தாக்கங்களை முழுதும் உள்வாங்கிக் கொள்வது இன்றைய தேவையாக முன்வந்துள்ளது. குறிப்பாக தொழிலில் ஏற்பட்டுள்ள முறைசாராத்தன்மை, விவசாயத்தின் வீழ்ச்சி போன்றவற்றை புரிந்து கொள்வது அவசியமாகிறது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அத்தகைய ஆய்வின் அடிப்படையில் தனது செயல்முறைகளை உருவாக்கியுள்ளது.இந்த செயல்முறைகளை அமலாக்கு வதில் லெனின் அவர்களின் வாழ்வும் பணியும் கலங்கரை விளக்காக வெளிச்சம் தரும் என்பதில் அய்யமில்லை.
வெல்க மார்க்சிய- லெனினியம்! நீடூழி வாழ்க லெனின் புகழ் !!
நன்றி: தீக்கதிர்