தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 18 January 2014

ஜீவா நினைவு நாள் - அவருடைய சிந்தனையை நினைவு கொள்வோம்!




ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத
ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன்.
அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று,
இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன்.
எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல்,
அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும்
இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு,
மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும்
இன்றியமையாத பெளதிகச் சூழ்நிலைகளையும்,
சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன்.
மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும்
எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிரிடையான இந்த அறப்போரில்
எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும்
மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன.
நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்.
. . . தோழர். ஜீவா

No comments:

Post a Comment