பொதுக் காப்பீட்டு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
காப்பீட்டுத்
துறையில் 26 முதல் 49 சதம் வரையிலான அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து
பொதுக் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய அறைகூவலிட்டுள்ளார்கள். நமது
வாழ்த்துக்கள்!
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 உறுதி செய்யப்பட வேண்டும்
ரூ. 300
அல்லது 400 மட்டுமே ஓய்வூதியமாகப் பெறக்கூடிய ஊழியர்கள் இன்றும்
இருக்கிறார்கள். மத்தியத் தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக இதை எதிர்த்தும் குறைந்த
பட்ச ஓய்வூதியத்தை உயர்த்தவும் போராடி வருகின்றன. தற்போது குறைந்த பட்ச
ஓய்வூதியமாக ரூ.1000 வழங்குவதற்கான
முன்மொழிவை EPF அலுவலகம், அரசுக்கு அனுப்பி
இருக்கிறது.
ரூ.600
கோடிக்கு மொபைல் உபகரணங்கள்
2 G மொபைல் சேவை
விரிவாக்கத்திற்காக ரூ.600 கோடிக்கு GSM
உபகரணங்களை வாங்க, MTNL முடிவு செய்திருப்பதாக அதன் CMD, திரு கார்க் தெரிவித்துள்ளார்.
வங்கி
ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தை
ஜனவரி 20 அன்று வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. அதன் பின்னணியில் 13.1.2014 அன்று CLC நடத்திய
பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், வேலைநிறுத்தத்திற்கு முன்பாக இந்திய வங்கிகள்
அமைப்பும் வங்கிகளின் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் கூடி பேச்சுவார்த்தை நடத்த
சம்மதித்துள்ளன. பேச்சுவார்த்தையில் 1.1.2012 முதலான ஊதிய மாற்றத்தில், ஊதிய உயர்வு சதவீதம் என்பதே முக்கிய
அம்சமாக இருக்கும்.
GoM பரிந்துரைப்படி அரசு நிறுவனங்கள்
கட்டாயமாக
BSNL, MTNL இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
BSNL, MTNL இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
அமைச்சரவைக் குழுக்
கூட்டம், அனைத்து மத்திய, மாநில அரசு நிறுவனங்களும் BSNL, MTNL தொலைபேசி வசதிகளை
மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் பரிந்த்துரைத்தது. இதற்கு தனியார்
செல்லுலார் நிறுவனங்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
அரசிடம் இருந்து வரிச்
சலுகைகள், வருமானப் பகிர்வு, அனுமதிக் கட்டணம் போன்றவற்றில் பல்வேறு சலுகைகளை
நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுபவித்து வருவதோடு பல்வேறு முறைகேடுகள் செய்து
முறையாக அரசுக்குச் சேர வேண்டிய கட்டணங்களை முடக்கி வைத்திருக்கின்ற தனியார்
நிறுவனங்களுக்கு இதை எதிர்க்கின்ற யோக்கியதை சிறிதும் கிடையாது என்பதே உண்மை.
அரசு விரைவில் இது
தொடர்பான முடிவினை எடுத்து அறிவிக்க வேண்டும்.
டில்லியில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய
முதலீடு ரத்து
சில்லறை வர்த்தகத்தில் 100 சதம் அந்நிய முதலீட்டை டில்லியின் முந்தைய காங்கிரஸ் அரசு
அனுமதித்திருந்தது. தற்போதைய ஆம் ஆத்மி அரசு அதை ரத்து செய்து அறிவித்திருக்கிறது.
வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment