தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 16 January 2014

செய்தித் துளிகள்



IOC ல் 10 சத பங்கு விற்பனை
16.1.2014 அன்று நிதி அமைச்சர் திரு.ப. சிதம்பரம் அவர்கள் தலைமையில் அதிகாரமூட்டப்பட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில், இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (INDIAN OIL CORPORATION) 10% பங்குகளை விற்பனை செய்து ரூ.4800 கோடி திரட்ட முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த பங்கு விற்பனைக்குப் பின் அந்த நிறுவனத்தில் அரசின் பங்கு 68.92% ஆகக் குறையும்.
அயராது, கண் உறங்காது 24 மணி நேரமும் பொதுத்துறை பங்கு விற்பனை ஒன்றையே லட்சியமாகக் கொண்டு செயல் படும் மத்திய அரசுக்கு எதிராக அனைத்துத் துறை ஊழியர்களும் ஓரணியாய் திரளும் காலம் நெருங்கி விட்டது.

அலைக்கற்றை ஏலத்திற்கு 8 நிறுவனங்கள் விண்ணப்பம்
பிப்ரவரி 8 அன்று நடைபெற உள்ள அலைக்கற்றை ஏலத்தில் பங்கு பெற வோடபோன், ஏர்டெல், ஏர்செல், டாடா டெலி சர்வீசெச், ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த அலைக்கற்றை ஏலத்தின் மூலம் ரூ.11343 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

ITI ல் இருந்து 30% உபகரணங்களை வாங்குவதற்கான ஒதுக்கீடு
ஐ டி ஐ நிறுவனத்திற்கான கொள்முதல் ஒதுக்கீட்டைத் தொடர வேண்டும் என்ற தொலைத்தொடர்புத் துறையின் பரிந்துரைக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் படி,
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் வாங்கும் உபகரணங்களில் 30 சத உபகரணங்களையும் மொபைல் நெட்வொர்க் திட்டங்களில் 20 சத உபகரணங்களையும் ITIல் இருந்து வாங்குவது தொடரும்.
விலை நிர்ணயம் செய்யப்பட்டு அந்த விலை கட்டுபடியாகும் பட்சத்தில் ITI அந்த விநியோக உத்தரவை ஏற்றுக் கொள்ளலாம்.
உத்தரவுகளுக்கான 10% அட்வான்ஸ் தொகையை BSNL, MTNL நிறுவனங்கள் ITIக்கு வழங்க வேண்டும்.
இந்த நடைமுறை ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும்.

BSNL ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் மத்தியச் செயற்குழுக் கூட்டம்
ஜனவரி 18 மற்றும் 19 தேதிகளில் புவனேஷ்வரில் BSNL ஒப்பந்த ஊழியர்களின் மத்தியச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும். கலந்து கொள்ளும் தோழர்கள் முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.

நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து 16485 கோடியை அபகரிக்க அரசு திட்டம்
இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் (Coal India Ltd) இருந்து சிறப்பு ஈவுத்தொகையாக ரூ.16485 கோடியை வற்புறுத்திப் பெற அரசு முனைப்புடன் செயல் படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை எந்த நிறுவனமும் இது வரை ஈவுத்தொகையாக வழங்கியது இல்லை. சென்ற ஆண்டு இந்த நிறுவனம் ரூ.8842.91 கோடியை ஈவுத்தொகையாக அரசுக்குக் கட்டியுள்ளது குறிப்பிடத் தகுந்தது.
லாபகரமாக செயல்படும் பொதுத்துறைகளை எப்படியும் பொருளாதாரச் சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என்பதே, மத்திய அரசின் ஒரே நோக்கமாக இருக்கிறது.  

No comments:

Post a Comment