டில்லி அரசின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள்
பணி நிரந்தரம் செய்யப்படுகிறார்கள்
டில்லி அரசின் கீழ் பணிபுரியும் ஒரு
லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான
13 உறுப்பினர்களைக் கொண்ட
உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஒரு மாத காலத்திற்குள் தனது பரிந்துரையை
வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள்
யாரும் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள்.
BSNL உட்பட நாடெங்கும் பணி புரியும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த முடிவு ஒரு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
மும்பை,
டில்லி MTNL ரோமிங்
கட்டணம் ரத்து
டில்லி, மும்பை நகரங்களின்
தொலைத் தொடர்பு வசதியை MTNL நிறுவனம் நிர்வகித்து வருகிறது. டில்லி மற்றும் மும்பை
நகரங்களுக்கு இடையேயான உள் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணம் 26.01.2014 முதல் ரத்து
செய்யப்படுகிறது.
தபால் துறை
ATM சேவையை துவக்குகிறது
தபால் துறை வங்கிச் சேவைக்கான
அனுமதிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து இருக்கிறது. 5.2.2014 முதல் அடிம் சேவையை தபால் துறை துவக்க உள்ளதாக
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், திரு.கபில் சிபல் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு 1000 ATMகளும் அடுத்த ஆண்டு 2000 ATMகளும் திறக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள்
வேலை நிறுத்தம்
மகா சம்மேளனம் கோரிய ஊதியக்குழுவுக்கான குறிப்புகளை ஏற்க வேண்டும்,
தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய மாற்றம் மற்றும் பணி நிரந்தரம், பரிவு
அடிப்படையாலான பணிநியமனத்தில் உள்ள தடைகளை அகற்றுதல், 5கட்ட பதவி உயர்வு போன்ற
கோரிக்களுக்காக, பிப்ரவரி 12,
13 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மத்திய
அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது.
போராட்டம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்!