போராட்டப் பாதையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த
ஊழியர்கள்!
வாரீர், தோழமை ஆதரவு தருவோம்!
ஜனவரி 18, 19 தேதிகளில் புவனேஸ்வரில்
நடைபெற்ற தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள் சம்மேளனத்தின் மத்தியச் செயற்குழுக்
கூட்டத்தில் சுரண்டலுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் 2014ஆம் ஆண்டை “தற்காலிக
மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஆண்டாக”க் கடைப்பிடிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அலைக்கற்றை
ஒதுக்கீட்டில் அரசுக்கு மேலும் ஒரு இழப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு அலைக்கற்றை ஒதுக்கியதில் அரசுக்கு
ரூ.4800 கோடி இழப்பு என்று தலமைத் தணிக்கை அதிகாரி அறிவிக்கை கூறுகிறது.
உலகத்துச்
செல்வத்தில் பாதி, 85 பெருமுதலாளிகளிடம்
உலகத்தின் மொத்தச் செல்வத்தில் பாதி, 85 பெருமுதலாளிகளிடம்
மட்டும் இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. “Oxfam” என்ற நிறுவனம் நடத்திய
இந்த ஆய்வில் கடந்த 25
ஆண்டுகளாக பெருமுதலாளிகளிடமே, மேலும் மேலும் செல்வம் குவிந்தது
கண்டறியப்பட்டுள்ளது. உலகத்தின் பெரும்பான்மையான அரசுகள், வரிச் சலுகை என்ற
பெயரிலும் மான்யம் என்ற பெயரிலும் பெருமுதலாளிகளுக்கே சலுகைகள் அளித்து
வந்திருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பெருமுதலாளிகளின் செல்வம் 10 மடங்கு பெருகி
இருக்கிறது.புதிய தாராளமயக் கொள்கை மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்கள் மீது அரசுகள்
காட்டும் அதீத அக்கறையின் பிரதிபலிப்பே, இது.