வாங்கும் ஊதியத்தில் ஓய்வூதியப் பங்குத் தொகை கட்டப் படவேண்டும்
BSNL ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பங்குத் தொகையை
(PENSION CONTRIBUTION) அரசுக்கு BSNL நிறுவனம் மாதந்தோறும் கட்டி வருகிறது. ஊழியர்களின்
ஊதிய விகிதத்தில் உச்ச பட்ச ஊதியத்திற்கான பங்குத் தொகையை தற்போது BSNL கட்டி வருகிறது.
ஓய்வூதியப் பங்குத் தொகையாக
2011 – 12 ஆம் ஆண்டு ரூ.1179.65 கோடியும்
2012 -13 ஆம் ஆண்டு ரூ.916.41 கோடியும்
அரசுக்கு BSNL நிறுவனம் கட்டியுள்ளது.
இது சரியல்ல, ஊழியர்கள் அவ்வப்போது வாங்குகின்ற ஊதியத்தின்
அடிப்படையில் கட்டப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக நமது சங்கமும் ஃபோரமும் போராடி
வருகிறது.
ஹரியானா மாநில அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஹரியானா மாநிலத்தில் போக்குவரத்துத் துறையில் தனியார்
மயத்தை எதிர்த்தும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரியும் அம்மாநில அரசு ஊழியர்கள்
ஜனவரி 21ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கினர். அரசின் அடக்குமுறைகளையும்
மீறி தொடர்ந்து 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!
தாவோஸில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் கூட்டம்
உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் நான்கு நாட்கள்
கூட்டம் தாவோஸில் இன்று துவங்குகிறது. நூறு தேசங்களின் வர்த்தகப் புள்ளிகளும் அரசுப்
பிரதிநிதிகளுமாக 2500 பேர் கலந்து கொள்கின்றனர். இது, உலகவங்கி மற்றும் சர்வதேச நிதி
மையம் போன்ற முதலாளித்துவ பிரதிநிதித்துவ அமைப்பு ஆகும். வளர்ச்சி அடையாத, வளர்கின்ற
நாடுகளைக் குறிவைத்தே இதன் முடிவுகள் இருக்கும்.
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள், 31.3.2014 வரை மட்டுமே செல்லும்
2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்
31.03.2014க்குப் பிறகு செல்லத்தக்கதல்ல என்றும் 01.04.2014க்குப் பிறகு அந்த நோட்டுகளை
வங்கிகளில் ஒப்படைத்து புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி
முடிவு எடுத்துள்ளது.