கனரா வங்கியுடனான கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே
காலாவதி ஆகிவிட்டது. அதை புதுப்பிக்க வேண்டும் என்று நமது அகில இந்தியச் சங்கம் தொடர்ந்து
முயற்சி எடுத்தது. ஆனால் கனரா வங்கி போதிய ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தது. தற்போது
காலதாமதமாக, ஏற்கனவே இருந்த வட்டி விகிதங்களை உயர்த்தி ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை
ஏற்படுத்த சம்மதித்துள்ளது. இது ஊழியர்களை வெகுவாகப் பாதிக்கும் என்றும் எனவே வங்கியுடன்
மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்றும் நமது
பொதுச் செயலர் நிர்வாகத்திடம் விவாதித்துள்ளார்.