பொதுச்செயலர் தோழர். அபிமன்யு, துணைப்பொதுச்செயலர் தோழர். அனிமேஷ் மித்ரா ஆகியோர் திரு.R.K.கோயல் GM Estt அவர்களுடன் 8.11.13 அன்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
போராட்ட அறிவிப்பினை ஒட்டி ஏற்பட்ட உடன்பாட்டின் படி NEPP, E-1 ஊதிய விகிதம், ஊதிய இழப்பு, ஊதிய முரண்பாடுகள், ஓய்வூதியப் பலன்கள்,
கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகிய பிரச்சனைகளில் நிர்வாகம் தனது நடவடிக்கைகளைத்
துவக்கி இருப்பதை உறுதி செய்தனர். கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பாக திருத்தி
அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிட இருப்பதாக பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment