மங்கள்யான்’ விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா? என்று ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் என்ற விண்கலத்தைச் செலுத்தியுள்ளது.
பி.எஸ்.எல்.வி.–சி-25 எனும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட அந்த விண்கலம், செலுத்தப்பட்ட நவம்பர் 5 அன்று மாலை பூமிக்கு அருகில் 23,566 கி.மீ. நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. தற்போது மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதில் இணைக்கப்பட்டுள்ள அனைத் துக் கருவிகளும் திட்டமிட்டப்படி இயங்குகின்றன.
அவற்றில் இருந்து தொலைத்தொடர்பு மையங்களுக்கு சிக்னல்கள் வந்தபடி உள்ளன. இதையடுத்து மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரத்தை அதிகரிக்கும் பணி வியாழக்கிழமை அதிகாலை தொடங்கியது. அதன்படி மங்கள்யானில் உள்ள திரவ எரி பொருள் பூமியில் இருந்தபடியே இயக்கப்பட்டது. 59 கிலோ எரிபொருள் கொண்ட அந்த உந்து சக்தி 416 வினாடிகளுக்கு எரிந்தது. இதன் மூலம் மங்கள்யான் விண்கலத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் அதிகரித்தது.
புதன் வரை 23,566 கிலோ மீட்டர் கொண்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுழன்று வந்த மங்கள்யான், வியாழனன்று சுமார் 28,700 கி.மீ. நீளம் கொண்ட நீள்வட்ட சுற்றுப்பாதைக்குச் சென்றது.
அதாவது துல்லியமாக 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு நீள் வட்ட சுற்றுப்பாதை அதிகரிக்கப்பட்டுள்ளது. 8-ந்தேதியும் மங்கள்யானின் நீள் வட்ட சுற்றுப்பாதை தூரம்
அதிகரிக்கப் படும். 9, 11, 16-ந்தேதிகளிலும் இந்தப் பணி நடைபெற உள்ளது. டிசம்பர் 1ந்தேதிக்குள் நீள்வட்டப் பாதையின் தொலைவு 2 லட்சம் கிலோ மீட்டர்களாக உயர்ந்து விடும். அதன் பிறகு மங்கள்யான் அங்கிருந்து செவ்வாய்க் கிரகம் நோக்கிப் புறப்படும்.
No comments:
Post a Comment