தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 28 November 2013

Forum of BSNL Unions & Associations27.11.2013 அன்று புதுடில்லியில் ஃபோரத்தினுடைய கூட்டம் நடைபெற்றது.
தோழர். சுரேஷ்குமார், பொதுச்செயலர், BSNLMS தலைமை தாங்கினார்.
முடிவுகள்
30.11.2013 அன்று நிர்வாகத்துடன் நடைபெற உள்ள அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டத்தில், நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்கும் வழிவகைகளுக்கும் மொபைல் மற்றும் இதர சேவைகளுக்கான உபகரணங்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கும் முக்கியத்துவம் தந்து வலியுறுத்த வேண்டும்.
நிறுவனத்தின் நிதி நிலை சீரமைப்புக்காக புது டில்லியில் நடத்திய தேசீயக் கருத்தரங்கு மாநாட்டைப் போல், மாநில அளவிலும் தாமதமின்றி கருத்தரங்குகள் நடத்தப் படவேண்டும்.
புதுடில்லி கருத்தரங்கக் கூட்டத்தின் பற்றாக்குறை செலவினங்களை ஃபோரத்தின் உறுப்புச் சங்கங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment