BSNL நிறுவனத்தின் வளர்ச்சிக்கான
திட்டங்களை ஆய்வு செய்வதற்காக
31.12.2013 அன்று அனைத்துத் தொழிற்சங்கங்கள்
கூட்டத்தை நடத்த
CMD அழைப்பு விடுத்துள்ளார்.
அந்தக் கூட்டத்தில்
ஆய்வு செய்வதற்காக
கீழ்க்கண்ட சில குறிப்புகளையும்
விளக்கங்களையும் கேட்டு
நமது பொதுச் செயலர்
CMDக்கு
கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த
ஆறு ஆண்டுகளாக மொபைல் சேவை விரிவாக்கத்திற்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்படவில்லை.
இதனால் மொபைல் அழைப்புப் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டு சேவை பாதிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
சமீபத்திய ஆய்வின்படி, 50% மொபைல் வாடிக்கையாளர்கள் இணைய சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
3G சேவையை விரிவுபடுத்தி மொபைல் இணையசேவை
வருவாயைப் பெருக்குவதற்கு நிர்வாகம் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பதை விளக்க
வேண்டும்.
தேவையான உபகரணங்களின்றி லேண்ட்லைன் மற்றும்
ப்ராட்பேண்ட் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை சரி செய்வதற்கு நிர்வாகம்
என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
ஆயுள்காலம் முடிந்த காரணத்தினால் உபயோகமற்ற
நிலையில் பேட்டரிகள் இருப்பதால் பெரும்பாலான BTS நிலையங்களில்
பேட்டரி பேக் அப் இல்லை. இந்தப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்ற ஆலோசனை நிர்வாகத்திடம்
இருக்கிறதா?
No comments:
Post a Comment