தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 27 November 2013

பொதுமேலாளர்(நிறுவனம்) உடன் பேச்சுவார்த்தைபொதுச்செயலர் தோழர். அபிமன்யு, உதவிப் பொதுச் செயலர் தோழர்.ஸ்வபன் சக்ரபர்தி ஆகியோர் திரு.கோயல், பொதுமேலாளர்(நிறுவனம்) அவர்களோடு கீழ்க்கண்ட பிரச்சனைகளை 26.11.2013 அன்று விவாதித்தனர்.
ஊதியத் தேக்க நிலை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று ஊதியத் தேக்க நிலை அடைந்த ஊழியர்களின் ஊதிய விகிதத்தை அடுத்த உயர் ஊதிய விகிதத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். (இதற்கான விரிவான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.)

JTO போட்டித் தேர்வு முடிவுகள்: ஆந்திரம், பஞ்சாப், தமிழ்நடு, ஜார்கண்ட், வடகிழக்கு ஆகிய மாநிலங்களில் JTO தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டது.
ஊதிய இழப்பு: இதற்கான கமிட்டியின் பரிந்துரை சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலுக்கு வைக்கப் பட்டுள்ளது. அதன் பின் நிர்வாகக் குழுவில் பரிசீலனைக்கு வைக்கப்படும்.

No comments:

Post a Comment