தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 5 November 2013

மங்கள்யான்



செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா என்பதை உறுதி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ரூ.450 கோடி செலவில்மங்கள்யான்எனும் விண்கலத்தை தயாரித்துள்ளது.

இந்த விண்கலம் செவ்வாய்க்கிழமை மதியம் 2.38 மணிக்கு விண்ணில் பாயத் தயார் நிலையில் உள்ளது. மங்கள்யானை தயார்படுத்துவதற்கான 56 மணி நேர கவுண்ட்டவுன் ஞாயிறு அதிகாலை 6.08 மணிக்கு தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக மங்கள்யானில் திங்களன்று இறுதிகட்ட இணைப்புப் பணிகள் செய்து முடிக்கப் பட்டன. மங்கள்யானை சுமந்து செல்லும் 45 மீட்டர் நீளமுள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட் டது.

இந்த ராக்கெட் 76 மீட்டர் நீளமுள்ள நகரும் கோபுரம் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. திங்களன்று அந்த நகரும் கோபுரம் ராக்கெட்டை ஏவுதளத்தில் நிலை நிறுத்தியது. இதன் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு முழு அளவில் தயார் நிலையில் உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் செய்தித் தொடர்பாளர், “ஞாயிறன்று துவங்கிய கவுண்ட் டவுன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி முறையாக நடந்து வருகின்றன. எவ்வித பிசிறும் இல்லாமல் வெற்றிகரமாக விண்கலத்தைச் செலுத்த முழு வீச்சில் தயாரிப்புப் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்என்று கூறினார். செவ்வாய் மதியம் 2.38 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பறந்ததும், அது அடுத்த 40-வது நிமிடத்தில் மங்கள்யானை பூமி சுற்றுப் பாதையில் கொண்டு போய்விடும்.

தென் அமெரிக்காவுக்கு மேல் உள்ள சுற்றுப்பாதையில் மங்கள்யான் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.20 முதல் 25 நாட்களுக்கு மங்கள்யான் பூமியை சுற்றி வரும். டிசம்பர் 1–ந் தேதி மங்கள்யான் செவ்வாய் நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கும். 9 மாதங்கள் பயணம் செய்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24–ந்தேதி அது செவ்வாய் கிரகம் அருகில் சென்று அடையும்.

மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டபடி செவ்வாயை ஆய்வு செய்தால், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா எட்டிப்பிடிக்கும். இதுவரை ஐரோப்பிய விண்வெளி கழகம், அமெரிக்காவின் நாசா, ரஷியா ஆகியவையே செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 51 விண்கலங்கள் ஏவப்பட்டன. அதில் 21 விண்கலங்கள்தான் வெற்றி பெற்றன.(பிடிஐ)

No comments:

Post a Comment