தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 23 November 2013

மாவட்டச் செயற்குழுக் கூட்டம்



21.11.2013 அன்று நமது மாவட்டச் செயற்குழுக்கூட்டம்
தோழர்.கேசவன் தலைமையில் காரைக்குடியில் நடைபெற்றது.
தவிர்க்க முடியாத காரணங்களால் மாநில உதவிச் செயலர்
தோழர். பழநிச்சாமி கலந்து கொள்ள முடியவில்லை.
தோழர். மஹாலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்டச் செயலர் தனது உரையில்
அனைத்துப் பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டினார்.
அனைத்துத் தோழர்களின் பங்களிப்போடு
செயற்குழுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தோழர். சுப்ரமணியன் மாவட்டச் செயலர் AIBDPA,
வாழ்த்துரையோடு கருத்துரையும் ஆற்றினார்.
டிசம்பர் 12 டில்லி பேரணியில் மாவட்டச் செயலர் கலந்து கொள்வது.
அகில இந்திய சங்கத்திற்கும் மாநிலச் சங்கத்திற்கும் நன்கொடையை உடனடியாக செலுத்துவது.
மாற்றல்களை முறைப்படுத்துவது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதிகளில் ஊதியம் வழங்குவது,
ஊதியப் பட்டியல் வழங்குவது,
EPF செலுத்தப்படுவதை உத்தரவாதம் செய்வது,
தேவைப்பட்டால், இவைகளுக்காகப் போராட்டம் நடத்துவது.
ஆகிய முடிவுகள் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப் பட்டன.

தோழர். ஆல்பர்ட் நன்றியுரையோடு செயற்குழுக் கூட்டம் முடிவடைந்தது.



No comments:

Post a Comment