தலைப்புச் செய்திகள்
Saturday, 30 November 2013
Thursday, 28 November 2013
1820 நவம்பர் 28. கம்யூனிச ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸ் (1820 –1895) இன்றுதான் பிறந்தார்.
அவர் கம்யூனிச தத்துவத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர். அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனாலும் சுயமாக கல்வி பயின்று மேதையானார். மார்க்ஸ் இவரை ‘இன்னொரு நான்’ என அழைத்தார்.
எங்கல்ஸ் 20க்கும் மேற்பட்ட மொழிகளை பயின்றவர். அந்த காலகட்டத்தில் வெளியான அறிவியலின் பல பிரிவுகளை அவர் கரைத்துக் குடித்து இருந்தார். அவர் ராணுவத்திலும் பணியாற்றினார். கம்யூனிச தத்துவம் உருவாக காரணமான முக்கியமான கருத்துக்களை மார்க்சுக்கு அறிமுகப்படுத்தியவராக எங்கல்ஸ் இருந்தார். எங்கல்சின் பண உதவி இல்லாமல் இருந்தால் மார்க்ஸ் பட்டினியால் செத்திருப்பார்.
குடும்பம், தனிச்சொத்து , அரசு ஆகியவற்றின் தோற்றம், இயற்கையின் இயக்கவியல் போன்ற நூல்களை எங்கல்ஸ் எழுதியுள்ளார். மார்க்சின் நூல்களுக்கும் எங்கல்ஸ் உதவி உள்ளார்.
மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு மார்க்ஸ் மறைந்து விட்டார். மார்க்ஸ் மறைவுக்கு பிறகு அவரது குறிப்பு நோட்டுகளில் இருந்து மற்ற மூன்று புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட்டார். அவர் இல்லாவிட்டால் நமக்கு இப்போது இருக்கிற மாதிரி முழுமையான வடிவில் கம்யூனிச தத்துவம் கிடைத்து இருக்காது.
நன்றி: தி இந்து
Forum of BSNL Unions & Associations
27.11.2013
அன்று புதுடில்லியில் ஃபோரத்தினுடைய
கூட்டம் நடைபெற்றது.
தோழர். சுரேஷ்குமார், பொதுச்செயலர், BSNLMS தலைமை தாங்கினார்.
முடிவுகள்
30.11.2013 அன்று நிர்வாகத்துடன்
நடைபெற உள்ள அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டத்தில், நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்கும்
வழிவகைகளுக்கும் மொபைல் மற்றும் இதர சேவைகளுக்கான உபகரணங்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கும்
முக்கியத்துவம் தந்து வலியுறுத்த வேண்டும்.
நிறுவனத்தின்
நிதி நிலை சீரமைப்புக்காக புது டில்லியில் நடத்திய தேசீயக் கருத்தரங்கு மாநாட்டைப்
போல், மாநில அளவிலும் தாமதமின்றி கருத்தரங்குகள் நடத்தப் படவேண்டும்.
புதுடில்லி கருத்தரங்கக் கூட்டத்தின்
பற்றாக்குறை செலவினங்களை ஃபோரத்தின் உறுப்புச் சங்கங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
Wednesday, 27 November 2013
வங்கிக் கடன்
கனரா வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி
ஆகியவற்றுடனான கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. இவற்றைப்
புதிப்பதற்கான நடவடிக்கைகளை மத்தியச் சங்கம் துவக்கி விட்டது. விரைவில் ஒப்பந்தங்கள்
புதிப்பிக்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)