தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday, 9 December 2013

பாராளுமன்றத்தை நோக்கி பேரணி



பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெற்ற
பொது வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியாக
12.12.2013 அன்று 
‘பாராளுமன்றத்தை நோக்கி பேரணி’ நடத்த
11 மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன.
கோரிக்கைகள்
1.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை வேண்டும்
2.தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக கராறாக அமலாக்க வேண்டும்
3.அமைப்புசாராத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய ‘தேசீய சமூக பாதுகாப்பு நிதி’யை கட்டமைக்க வேண்டும்
4.நிரந்தரமாக இருக்கக் கூடிய வேலைகளை ஒப்பந்த முறையில் வழங்குவதை நிறுத்த வேண்டும். சம வேலைகளைச் செய்யும் நிரந்தரத் தொழிலாளிக்கும் ஒப்பந்தத் தொழிலாளிக்கும் வேறுபாடின்றி சம ஊதியம் மற்றும் சம பலன்களை வழங்க வேண்டும்.
5.குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 10000 வழங்க வேண்டும்.
6.பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை நிறுத்த வேண்டும்.
7.புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
8.அனைவருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வேண்டும்.
9.போனஸ், கிராஜுடி, வைப்புநிதி ஆகிய பலன்களுக்கு உள்ள உச்சவரம்பை நீக்க வேண்டும்.
10.அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ILO வழிகாட்டுதலின்படி 45 நாட்களுக்குள் பதிவு செய்யவேண்டும்.
நமது சங்கமும் இந்தப் பேரணியில் கலந்து கொள்கிறது.
போராட்டம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment