“புதிய போனஸ் பார்முலா” கமிட்டியின் முதல் கூட்டம் 09.12.2013
அன்று
நடைபெற்றது. ஊழியர் தரப்பிலிருந்து தோழர்.அபிமன்யு (BSNLEU), தோழர்.இஸ்லம் அஹமது (NFTE)
ஆகியோர் கலந்து கொண்டு, நிறுவனத்தின் லாபத்துடன் போனஸை தொடர்பு படுத்தக் கூடாது என்பதை
உறுதிபட எடுத்துரைத்தனர். நிர்வாகத்தரப்பிலிருந்து, ‘GPMS’ எனப்படும் “குழு செயல்பாட்டு
நிர்வாக மதிப்பீட்டு” முறையை அடிப்படையாகக் கொண்டே போனஸ் பற்றி முடிவெடுக்க முடியும்
என்றனர். GPMSல் பல குறைபாடுகள் உள்ளன என்றும் உதாரணத்திற்கு, லாபம் ஈட்டுவதில் முதலிடத்தில்
இருக்கும் கேரள மாநிலம், சத்தீஸ்கர் மாநிலத்தை விட குறைத்துத் தான் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது,
அதனால் இதை ஏற்பதில்லை என்றும் நமது தரப்பில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. எனவே GPMS
தொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் அதற்கான விவரங்களை நிர்வாகம் ஜனவரி
2014ல் நடைபெற இருக்கும் அடுத்த கூட்டத்தில் முன்வைக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment