தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 3 December 2013

நாளெல்லாம் நமது செல்வம் கொள்ளை போமோ?



பொருளாதார நெருக்கடி என்ற காரணத்தைக் காட்டி தேசீய வளங்களை தனியாருக்குத் தொடர்ந்து விற்பனை செய்யும் போக்கை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. தனியார் நிறுவனங்களின் செல்வத்தைப் பெருக்க தேசத்தின் செல்வத்தை அவர்களுக்கு விற்பனை செய்கின்றது.
ரூ.40000 கோடியை 2013 – 14 ஆம் ஆண்டிற்கான பொதுத்துறைப் பங்குகளின் விற்பனை இலக்காக அரசு நிர்ணயித்திருக்கிறது. அதில் ரூ.1325 கோடி மட்டுமே இது வரை விற்க முடிந்திருப்பதால் மிகவும் கவலையோடு இருக்கின்றது, மத்திய அரசு. அதனால், 3.12.2013 அன்று விற்பனை நடவடிக்கைகளை மேலும் விரைவு படுத்துவதற்காக உயர்மட்ட அமைச்சர் குழு கூடவிருக்கின்றது.
Coal India Ltd. நிறுவனத்தின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு முயன்றது. ஆனால், அங்குள்ள தொழிற்சங்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இயலவில்லை. மீண்டும் தற்போது 5% விற்பனைக்கு முயற்சிக்கிறது.  
BALCO நிறுவனத்தின் மீதமுள்ள 49% பங்குகளையும், Hindustan Zinc Ltd. நிறுவனத்தின் 29.5% பங்குகளையும் விற்றுவிடத் துடிக்கிறது, மத்திய அரசு. இப்படியாக வரிசையாக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்று அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் கார்ப்பொரேட் நிறுவனங்களாக மாற்ற முனைப்புடன் செயல் படுகிறது, மத்திய அரசு.
இவற்றிற்கெதிராக பொதுத்துறை ஊழியர்கள் நடத்துகின்ற போராட்டம் மேலும் வலுப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
நாமும் அதில் நமது உற்ற பங்கினை ஆற்றுவோம்.

No comments:

Post a Comment