தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 6 March 2014

செய்தித் துளிகள்



EPF  வட்டி 8.75%
ஊழியர்கள் வைப்பு நிதிக்கு 9.5% வட்டி வழங்க வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன. ஆனால், வட்டி விகிதத்தை 8.5%ல் இருந்து 8.75% ஆக மட்டுமே அதிகரிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
               
வங்கிகளுக்கான வாராக் கடன் ரூ.2.36 லட்சம் கோடி (236000,0000000)
பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் இரண்டு லட்சத்து முப்பத்தாறாயிரம் கோடியைத் தாண்டி விட்டதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வாராக் கடனில் முதன்மை கார்ப்பொரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைகள் தான் அதிகம். கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் அளித்து வரும் பல்வேறு சலுகைகள் போதாதென்று அவர்களிடம் இருந்து வாரக்கடனை வசூலிப்பதிலும் மெத்தனம் காட்டப்படுகின்றது. ஆனால், சாதாரண மக்களின் சில ஆயிரம் கடன் பாக்கிக்கே ஜப்தி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வர்க்க பேத வேற்றுமையே இதற்கான முழுமுதல் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
 
பணம் கட்டாமல் மருத்துவ வசதி -  நிறுத்தம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு CGHS வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் பணம் கட்டாமல் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஏற்பாடு இருந்தது. மருத்துவச் செலவுக்காக அந்த மருத்துவ மனைகளுக்கு வழங்க வேண்டிய கட்டணம் 200 கோடிக்கும் மேலாக நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் மருத்துவ மனைகள் இந்த ஏற்பாட்டை தொடர முடியாது என்று மறுத்து விட்டன. இதன் காரணமாக 50 லட்சம் ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment