தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday, 1 March 2014

பெட்ரோல், டீசல் விலை உயர்வு



பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்ளூர் விற்பனை வரி, மதிப்புக் கூட்டு (வாட்) வரிகளுடன் சேர்த்து சென்னையில் பெட்ரோல் விலை 77 பைசாவும், டீசல் விலை 61 பைசாவும் அதிரிக்கிறது.

உள்ளூர் விற்பனை வரிகளுக்கேற்ப பிற நகரங்களிலும் சிறிய மாறுபாடுகளுடன் இந்த விலையேற்றம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடைசி முறையாக கடந்த ஜனவரி 4-ஆம் தேதிதான் பெட்ரோல் விலை 91 பைசா அதிகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பெட்ரோலிய நிறுவனங்களின் மானிய இழப்புகளை சரிக்கட்டுவதற்காக மாதந்தோறும் டீசல் விலையில் 50 பைசா அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவின்படி, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டீசலின் விலையில் 50 பைசா உயர்த்தப்பட்டது. ஆனால் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

எனினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதன் காரணமாக தற்போது பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.