தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 14 March 2014

அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் பிறந்த தினம் - மார்ச் 14



இரண்டாவது உலக மகாயுத்தம் ஆரம்பமாவதற்குரிய அறிகுறிகள் தெரிந்த நேரம்.. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அந்த விஞ்ஞானியை அழைத்து,
அணுகுண்டு தயாரிக்க வேண்டும். அது உங்களால்தான் முடியும்.
நீங்கள் அணுகுண்டு தாயரித்துக் கொடுத்தால்
அதற்குத் தேவையான உதவிகளையும் பணமும்
தரத் தயாராக இருக்கிறேன்என்றார்.
ரூஸ்வெல்ட் சொன்னதைக் கேட்ட அந்த விஞ்ஞானி சிரித்தார்.
அவருடைய சிரிப்பின் அர்த்தம் புரியாமல் ரூஸ்வெல்ட் விழித்தார்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டுமே தவிர
 மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்தக்கூடாது
என்று உறுதியாக அந்த விஞ்ஞானி ரூஸ்வெல்டுக்குப் பதில் கூறினார்.
 ரூஸ்வெல்ட் வியப்போடு அந்த விஞ்ஞானியைப் பார்த்தார். மீண்டும்,
எனது அறிவாற்றலை ஒரு போதும் மனித குலத்தை
அழிப்பதறகுப் பயன்படுத்த மாட்டேன்;
பணத்திற்காக எனது மூளையை அடகு வைக்க மாட்டேன்
என்று கூறிவிட்டு அந்த விஞ்ஞானி வெளியேறினார்.
அவர்தான் ஐன்ஸ்டின் என்ற விஞ்ஞான மேதை.
 இவருடைய பொருள் சக்தி மாற்றக் கோட்பாட்டின் அடிப்படையில்தான்
அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டின் ஆணைக்கு மறுப்பு தெரிவித்த ஐன்ஸ்டின்,
இன்று உலகப் புகழ்வாய்ந்த மேதைகளில் ஒருவராக உருவாக்கியது.
விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள்
ஆகியோர் மத்தியில் ஐன்ஸ்டினின் தத்துவமும் புகழ்ந்து பேசப்பட்டது.
1921-ஆம் ஆண்டு ஐன்ஸ்டினை நோபல் பரிசு தேடி வந்தது.

No comments:

Post a Comment