சட்டங்களை ஒழிப்பேன்
சிட்னி, நவ.17-
இந்தியாவுக்குள் அந்நியர்கள் தாராள மாக நுழைவதற்கு தடையாக இருக்கும் சட்டங் கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுவேன் என பிரதமர் நரேந்திரமோடி கொக்கரித்தார். மேலும், ரயில்வேத் துறையில் 100 சதவீதம் அந்நிய பெருமுதலாளிகளை அனுமதிக்க காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.ஜி20 உச்சி மாநாட்டையொட்டி ஆஸ் திரேலியா பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டின் தலைநகர் சிட்னியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புக் கூட்டத் தில் பேசினார்.இந்தக் கூட்டத்தை பற்றி ஏற்கெனவே திட்டமிட்டப்படி இந்திய ஊடகங்கள் வானளாவ புகழ்ந்து ஊதித் தள்ளியுள்ளன. அக்கூட்டத்தில் மோடி பேசிய விதம் குறித் தும், கிடைத்த வரவேற்பு குறித்தும் பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. அதே நேரத்தில் அக்கூட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய மக்க ளுக்கும் எதிரான பல அறிவிப்புகளை மோடிவெளியிட்டது குறித்து ஒருவரி செய்தியாக வெளியிட்டுள்ளன.
சிட்னி கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியாவில் ‘ஜன்தன்’ என்ற திட்டத்தை தான் துவக்கியது பற்றி பெருமிதத்துடன் குறிப்பிட்டுக் கொண்டார். இந்திய ரிசர்வ்வங்கியுடன் இதுபற்றி முதலில் ஆலோசித்த போது, இத்திட்டத்தை நிறைவேற்ற 3 ஆண்டுகள் ஆகும் எனக் கூறியதாக தெரி வித்தார். ஆனால், வெறும் 150 நாட்களில் தனது முன்முயற்சியால் திட்டம் நிறைவேற் றப்பட்டுவிட்டதாகவும், கடந்த 10 வாரங் களில் மட்டும் சுமார் 7 கோடி வங்கிக் கணக்கு கள் துவக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
ஆனால் இந்த திட்டம், படிப்படியாக இந்திய ஏழைகளுக்கான மானியங்களை அவர்களுக்கே தெரியாமல் மொத்தமாக பறிப்பதற்கான திட்டம் என்பதை அவர் குறிப்பிடவில்லை.ரயில்வேத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க தமது அரசு தயாராக இருப்பதாக மோடி பகிரங்கமாக அறிவித்தார். இந்திய ரயில்வேத் துறை என்பது அந்நிய பெருமுதலாளிகளுக்கு ஒரு பிரம்மாண்டமான ஒரு சந்தை என்றும், அதை மிகப் பெரிய அளவிற்கு பயன்படுத்திக் கொண்டால் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்றும் மோடி குறிப்பிட்டார்.
அந்நிய பெருமுதலாளிகளுக்காக உழைப்பதற்கு இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தொழி லாளர் சந்தை இருக்கிறது என்று கூறிய மோடி, எனினும் அவர்களது திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்றும் கூறினார்.மேலும், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு புதிது புதிதாக சட்டங்களை உருவாக்கு வதில் மகிழ்ச்சியடைந்தது எனக் குறிப்பிட்ட மோடி, “ஆனால் என்னை பொறுத்தவரை சட்டங்களை ஒழிப்பதில்தான் மகிழ்ச்சி யடைகிறேன். ஏராளமான சட்டங்களை ரத்துசெய்வேன்; அதன்மூலம் சுத்தமான காற்று உள்ளே வரட்டும்” என்று கூறினார். அவர் சுத்தமான காற்று என்று குறிப்பிட்டது இந்திய சட்ட விதிகளால் உள்ளே வர முடியாமல் தடைப்பட்டு நிற்கும் அந்நிய பெருமுதலாளிகளே என்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment