நவம்பர் புரட்சி நவயுகத்திலும்
வழிகாட்டும்!
வழிகாட்டும்!
1991ஆம் ஆண்டு ஆகஸ்டில் சோவியத் சோசலிசக் குடியரசு தகர்ந்த பின், உலக அளவில் சமூக மாண்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தரம் தாழ்ந்து செல்லத் தொடங்கிவிட்டன. கோர்பசேவ் கூட மிகவும் பட்டவர்த்தனமாகச் செய்யத் தயங்கிய வேலைகளை, அவரதுஅக்கிரம நடவடிக்கைகள் அனைத் திற்கும் துணையாக இருந்த எல்ட்சின் மேற்கொண்டு,“என் குறிக்கோள் நிறைவேறிவிட்டது,’’ என்று கொக்கரித் தார். சோவியத் யூனியனைத் தகர்க் கும் இவர்களின் நயவஞ்சகத் திட்டம்முழுமையாக நிறைவேறியது. தன்னு டைய சொந்த நாடான போலந்திலும் மற்ற நாடுகளிலும் கம்யூனிசத்தை முற்றிலுமாக வேரறுத்திட உறுதி பூண்டிருந்த போப் ஜான் பால் 2 என்ப வர்கூட, “கம்யூனிசம் தீமைகள் நிறைந்த ஒன்றாக இருந்தபோதிலும், மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அதிலும் சில அடிப்படைக்கூறுகள் இருந்தன,’’ என்றும் “எனவே அது முடிவுற்றுவிட்டதென்று அதீதமாக `சந்தோ ஷம்’ அடைய வேண்டாம்,’’ என்று பதிவு செய்திருக்கிறார். சோவியத் யூனியன் தகர்ந்தபோது காழ்ப்புடன் மிகவும் குதூகலம் அடைந்த பிரிட்டிஷ் முதலாளிகளின் ஊதுகுழலான `லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையே இத னைப் பதிவு செய்திருக்கிறது.
அப்போது அந்த ஏடு தன் தலையங்கத்தில் “கட்சி முடிவுக்கு வந்துவிட்டது,’’ என்று எழுதி விட்டு, “ரஷ்யர்கள் தற்போது ஏழை லெனினை கிறித்துவமத அடிப்படையில் கல்லறையில் வைத்திடுங்கள்,’’ என்று அறிவுரையும் வழங்கி இருக்கிறது. “உண்மையான, சிறந்து விளங்கிய சோசலிசம்’’ நிலைகுலைந்ததில் ஆச்சர்யம் எதுவும் இருப்பதாக நாம் பார்க்கவில்லை. மாபெரும் நவம்பர் புரட்சியானது மன்னிக் கப்படக்கூடாத விதத்தில் கசிந்து கொண்டிருந்த ஊழல் மற்றும் பேராசை குணங் களை வேருடன் பிடுங்கி எறியத் தவறியதே இதற்குக் காரணங்களாக இருந் திருக்க வேண்டும். உலகின் பல நாடுகளில் சோசலிச அமைப்பு தகர்ந்ததற்குப்பின்னர், பெரும் பணம் படைத்தவர்களால் ஆட்சி செய்யப்படும் இன்றைய உலகில், அநேகமாக அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் பொது வாழ்க்கை என்பது இருளார்ந்த முறையில் சீர்கேடு அடைந்து கொண்டிருப்பது குறித்து,
இவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அமெரிக்கா புரிந்திட்ட `போர்க் குற்றங்கள்’ தொடர் பாக அமெரிக்க அரசாங்கத்தின் முன் னாள் அட்டார்னி ஜெனரல் தன் சொந்தஅரசாங்கத்தின்மீதே குற்றம் சுமத்தி யதைத் தவிர, அமெரிக்கா இராக் மீது 1991க்கு முன்பு மிகவும் கொடூரமான முறையில் தொடுத்த தாக்குதல்கள் குறித்து, எவரும் கண்டனம் எழுப் பிடவில்லை. அமெரிக்காவின் தாக்கு தலால் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைக்கப்பட்டனர், இரண்டாயிரம் இராக்கியர்கள் சரணடைந் தனர். சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா இவ்வாறு அட்டூழி யம் புரிந்திருந்தபோதிலும், அட்டூழியத் தில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஆரவாரத்துடன் வரவேற்கப் பட்டார்களேதவிர, அவர்களது அட்டூ ழியங்களுக்கு எதிராக உலகமோ, ஐ.நா. ஸ்தாபனமோ கண்டித்திடவில்லை. வெளிப்படையாக இல்லை என்றபோதிலும் நடைமுறையில் ஸ்.நா.ஸ்தாபனம், அமெரிக்காவின் கைப்பாவையாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது.
ஒரு காலத்தில் அணிசேரா நாடு களின் காவலனாகத் திகழ்ந்த இந்தியா, தற்போது அமெரிக்காவின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. சர்வதேச அளவில் அறநெறி என்பது எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவ்வரலாற்றுப் பதிவுகள் சான்றுகளாக விளங்குகின்றன. ஐரோப் பாவில் சோசலிச நாடுகள் வீழ்ச்சி அடைந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.1985-87களில் மிகயீல் கோர்பசேவ் சோசலிசம் என்ற பெயருடனேயே சோசலிசத்திற்கு எதிராக மிகவும் நேர்த்தியாக முகமூடி அணிந்துகொண்டு நடவடிக்கை கள்மேற்கொண்டதானது உலகின் பல நாடுகளில் இருந்த அறிவுஜீவிகள் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்தது மிகவும் கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
கோர்பசேவின் சதி வேலைகள் நீண்டகாலமாக மிகவும் நன்கு திட்டமிடப் பட்டவைகளாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் கோர்பசேவ் பெயர் புகழ் பெற்றிருந்த அளவிற்கு வேறெவர் பெயரும் புகழடையவில்லை. `கோர்பி’ என்றும் ` தற்போதைய பத்தாண்டுகளின் மனிதர்’ என்றும் பெரும் புள்ளிகளின் ஊடகங்களால் புகழப்பெற்றது மட்டு மல்ல, நோபல் அமைதிப் பரிசை அளித்தும் அவர் முடிசூடப்பட்டார். (அந்தக்காலத்தில் அரபு உலகில் நாசரின் கொள் கைகளுக்குத் துரோகம் இழைத்ததற்காக ஹென்றி கிசிஞ்சருடன் அன்வர் சதாத்திற்கும் பரிசளிக்கப்பட்டதை நினைவு கூர்க) `கோர்பி’ ஜூரம் மறைந்துவிட்டது.
சோசலிசத்தின் எதிரிகளின் பகடைக் காயாக இருந்த நபர் நவீன காலனிய சுரண்டலுக்கு ஒரு வளமான பொருளாகக் கருதப்பட்டார். எனவே, அவர் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படும் வரை ஒட்ட உறிஞ்சப்பட்டார். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கணிசமான அளவிற்கு கோர்பசேவ் போன்ற மோசடி பேர்வழிகள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். இவர்களைக் கண்டுபிடித்து கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து களை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.நவம்பர் புரட்சிக்குப் பிந்தைய காலம் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாபெரும் நவம்பர் புரட்சிக்குப் பிந்தைய காலம் முழுவதையுமே ஏன் ஆய்வுக்கு உட்படுத்திட வேண் டும்? இதனை கோர்பசேவின் பெரெஸ்த் ரோய்கா கொள்கையால் ஈர்க்கப்பட்ட நபர்கள் அலட்சியம் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். லெனின் மற்றும் ஸ்டாலின் காலத்தில் சோவியத் யூனியன் புரிந்திட்டஅளப்பரிய சாதனைகள் எல் லாம் கூறப்படுவதையோ, இவர்களுடைய விசித்திரமான தில்லுமுல்லு களையெல்லாம் கடந்து, சோவியத் கம்யூனிசம் வரலாற்றில் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியதையோ மீண்டும் நினைவுகூரப்படுவதை இவர்கள் விரும்பவில்லை.
ரவீந்திரநாத் தாகூர், ரொமைன் ரோலண்டு, பெர்னார்ட் ஷா, ஐன்ஸ்டீன், சார்லி சாப்ளின் மற்றும் பலராலும் போற்றிப் பாராட்டப்பட்ட சோவியத் யூனியனை மீண்டும் நினைவு கூர்வதை இவர்கள் விரும்பவில்லை. உலகில் நம்மைப்போன்று செயல்பட் டுக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் கோர்பசேவின் திட்டம் வெற்றி பெற்றது குறித்து அதிர்ச்சி அடைந்தார்கள். நம்மைப் போன்றவர்கள் இத்தகைய துரோகிகளின் நடவடிக்கைகளால் பெருமை அடைய முடியாது.
மிகவும் வருத்தம் அடைந்தோம். மார்க்ஸ் போன்றவர்கள் கூட வரலாற்று ரீதியாக முன்னேறிய நாடுகள் தான், ஜனநாயகத்தில் தங்களுக்குள்ள அனுபவத்தின் காரணமாக, புரட்சி யை நோக்கி நகர்ந்து வரும் என்று நினைத்தார்கள் என்பதை நாம் ஒருவேளை மறந்துவிட்டோம். ஆனால் அவ்வாறு நடந்திட வில்லை. இது குறித்து ஏராளமான ஆய்வு நூல்கள் வெளிவந்துவிட்டன. பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் புரட்சி முதலில், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் மிகப் பிரம்மாண்டமான பகுதிகளை உள்ளடக்கிய ரஷ்யாவில்தான் வர முடிந்தது, அதற்குமுன் அப்பகுதிகளில் அநேகமாக ஜனநாயகமே இல்லாதிருந்த நிலைதான். புரட்சி இங்கிலாந்து அல் லது ஹாலந்து போன்ற முன்னேறிய நாடுகளில்தான் வரும் என்றும் அப்போதுதான் அங்கே உண்மையான ஜனநாயகம் எளிதாகவும் வேகமாகவும் வரும் என்றும் மார்க்ஸ், ஒரு சமயத்தில் எதிர்பார்த்தார். ஜனநாயகம் வழியே சோசலிசத்தை நோக்கி எளிதாக அதிக விலை கொடுக் காது முன்னேற முடியும் என்று அப் போது நினைக்கப்பட்டது.
மேலும், லெனின் போன்ற தீர்மானகரமான புரட்சியாளர்கள் (சோசலிசத்திற்கு முக்கியமான மூலக்கூறாக விளங்கும்) ஜனநாயகத்தை நோக்கி ரஷ்யாவைக் கொண்டு செல்லும்போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கருதப்பட்டது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கமும், `மாபெரும் நவம்பர் புரட்சி’யும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டன. அத னைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வரலாற்றில் புதிய அத்தியாயங்களை அவைதோற்றுவித்தன. 1917 அக்டோபரில் மனித குல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய விதத்தில் புரட்சியை நடத்தி, மகத்தான சாதனை படைத் தனர். அதனைத் தொடர்ந்து முப்பதாண்டு காலம் லெனின் மற்றும், ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக்குகள் உலகை யை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை களில் ஈடுபட்டார்கள். இங்கே ஒரு விஷயத்தைக்குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.
சோவியத் ரஷ்யா, கோர்பசேவின் துரோகத்தனமான நடவடிக்கைகளால் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கம்யூனிஸ்ட் சீனா கோர்பசேவின் நடவடிக்கைகளை உதறித்தள்ளி எறிந்துவிட்டு, தங்கள் நாட்டிற்கேற்ப மார்க்சிய லெனினியப் பாதையில் முன்னேறியது.கோர்பசே விசத்திற்கு இரையாகி உலகில் பல கம்யூனிஸ்ட் நாடுகளில் தலைவர்கள் “வர்க்கப் போராட்டத்தை’’ கைவிட்டு விட்டபோதிலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியான நிலை எடுத்தது. “வர்க்கப் போராட்டத்தை எப்போதும் மறக்கக்கூடாது’’ என்கிற மாவோவின் பொன்மொழி நிவாரணத்தை அளிக்கிறது. சிறிய நாடாக இருந்தாலும் செங்கொடியை உயர்த்திப்பிடித்து அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு இன்றளவும் சிம்ம சொப்பனமாகத் திகழும் கியூபாவை பெருமை யுடன் நினைவுகூர்வோம். “சோசலிசம் இல்லையேல் மரணம். நிச்சயம் நாங்கள் வெல்வோம்’’ என்று பிடல் காஸ்ட்ரோ வீர முழக்கமிட்டார். இன்றைக்கு உலகில் நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகள் வர்க்கப் போராட்டத்திற்கும், சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் இன்றைக்கும் பொருந் தக்கூடியதாகவே இருக்கின்றன. ஸ்டாலினுக்குப்பின் பொறுப்பேற்ற மாலங்கோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரசில் ஸ்தாபனம் தொடர்பாக பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
ஆனால் அவற்றை சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற கட்சிகளும் கண்டுகொள்ள வில்லை.ஸ்டாலின் நடவடிக்கைகள் அனைத்தையும் சரி என்று நாமும்கூறிடவில்லை. ஆயினும், சோசலிசத்திற் கான போராட்டத்திற்கு, மனித குலம் உண்மையான முறையில் விடுதலை பெறுவதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எவரும் மறுதலித்திட முடியாது. நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கைகள் உலக அளவில் அறநெறி ஒழுங்கை சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ள நிலையில், கம்யூனிஸ்ட்டுகளும் முற்போக் காளர்களும் புத்துயிர் பெற்று, இவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடித்திட வேண்டும். சோவியத் வரலாற்றை ஸ்டாலின் மற்றும் இதர தலைவர் களின் பங்களிப்புகளுடன் முறையாக ஆய்வு செய்வது என்பது முற்போக்கு சக்திகளுக்கும், தாங்கள் தலைமை ஏற்க வேண்டிய மக்களுக்கும் துணிவையும், நெஞ்சுரத்தையும் கொடுத்திடும். எனவே, 1917 நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியின் பங்களிப்பு இன்றும் முக்கியத் துவம் உடையதேயாகும்.-
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment