தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 15 November 2014


நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி கொச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினராயி விஜயன்பூச்செண்டு அளித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.


நீதிமானுக்கு வயது 100
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் 100வது பிறந்த நாள் விழா கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.1915ம் ஆண்டு பாலக்காட்டில் உள்ள வைத்தியநாதபுரத்தில் ஒரு எளிய தமிழர் குடும்பத்தில் பிறந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இளமைப்பருவத்தின் தொடக்கத்திலிருந்தே சமூக ஆர்வலராகவும் அடித்தள மக்களிடம் அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார்.
வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய கிருஷ்ணய்யர் சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினர் மற்றும் தொழிலாளர்களுக்காக வழக்குகளை நடத்தினார்.1957ம் ஆண்டு கேரள மாநிலத்தில் தோழர் இஎம்எஸ் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் அமைச்சரவையில் சட்டம், மின்சாரம், சிறைத்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார். 1968ல் கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தார்.

இதனைத் தொடர்ந்து 1973ல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார். 7 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்த அவர் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். பத்மபூஷன் விருது உள்ளிட்டு 20ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.நீதிபதியாக இவர் அளித்த தீர்ப்புகள் இன்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment