தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday, 29 November 2014

"நூறு ரூபாயாகக் கொடுத்தால் எப்படிப்பா"



இன்று ( நவம்பர் 29) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் 
அது ஆகஸ்ட், 1957 ஆம் ஆண்டு. தனது மரணப் படுக்கையில் கிடந்தார் அந்தக் கலைஞர். ராயப்பேட்டை மருத்துவமனை எப்போதுமில்லாத பரபரப்புக் கோலம் பூண்டிருந்தது. அன்றைய ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதான பக்கங்களில் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தினசரி கட்டம்போட்டு வந்துகொண்டிருந்தன. தமிழக மக்களின் மனங்களிலெல்லாம் குடிகொண்டிருந்து வாட்டியது கவலை. அவர் உயிர் பிழைக்கவேண்டுமே... அவருக்கு ஒன்றுமாகிவிடாதிருக்க வேண்டுமே என்பதே மக்களின் சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தது.
மக்களையெல்லாம் மனங்கலங்கச் செய்துகொண்டிருந்த அந்தக் கலைஞன்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் நகைச்சுவை நடிகர்தான். ஆனால் மக்களின் மனங்களில் நாயக அந்தஸ்தில் இருந்தவர். ரசிகர்களின் அன்பை அந்தளவுக்குப் பெற்றிருந்த இன்னொரு நகைச்சுவைக் கலைஞன் அந்நாளில் இல்லை. இந்நாளில் மட்டும் என்னவாம்? தனது 49வது வயதிலேயே மரித்துப்போன அந்த மகாகலைஞன் பதித்த தடமென்பது தமிழ்க் கலையுலகில் மட்டுமல்ல, இந்தியாவெங்கிலுமே இணையில்லாதது. இத்தனைக்கும் அவரது கல்வியறிவு என்பது வெறும் நான்காம் வகுப்போடு நின்றுபோன ஒன்றுதான்.
ஆனால் அந்தக் கலை உள்ளம், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கியவர்க்குக்கூட வழிகாட்டுமளவுக்கு உயர்ந்து விளங்கியது. நாடகத்தைப் பார்க்கும் ஆசையில் அந்நாளில் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் முகாமிட்டிருந்த டி.கே.எஸ். சகோதரர்களின் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்தா சபாவில் சோடா விற்கக் கிளம்பினான் சிறுவனான கிருஷ்ணன். நாடகத்தையும் அதன் பாடல்களையும் கவனித்தான். தினசரி இதே வேலையாக இருந்தான். அதே சமயத்தில் சோடா வியாபாரமும் கனஜோராக நடந்துகொண்டிருந்தது.ஒருநாள் கிருஷ்ணனின் தந்தையார் சுடலைமுத்து அச்சிறுவனை டி.கே.எஸ். சகோதரர்களிடம் கொண்டுபோய் நிறுத்தி, “இவன் நாடகத்தின்பேரில் பெரும் பைத்தியமாக இருக்கிறான்.
இவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள் ஐயா...” என்றார். புதிதாகச் சேர்ந்த சிறுவர்களுக்குப் பாடம் நடந்துகொண்டிருந்தது. சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தவர் டி.கே. சண்முகம். சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகள்தான் அன்றைய பாடம். இடையில் சண்முகம் எழுந்துசென்று தண்ணீர் அருந்தப் போனார். திரும்ப வந்தவருக்கு வியப்பு. மகரக்கட்டு சாரீரம் கொண்ட ஒரு சிறுவன், தான் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தான். கேட்டார் சண்முகம் : “உனக்கெப்படித் தெரியும் இந்தப் பாட்டு?” சொன்னான் அந்தச் சிறுவன் இப்படி: “நாகர்கோவிலில் உங்கள் நாடகம் நடந்தபோது அங்கே நான் சோடா விற்றுக் கொண்டே பாடம் பண்ணிக்கொண்டேன்!”சண்முகத்துக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சி. “பலே... இனி நீயே வகுப்பை நடத்து” - சொல்லிவிட்டுச் சென்றார். நாடகக் குழுவில் மாணவனாகச் சேர்ந்த அன்றைக்கே ஆசிரியனாக உயர்ந்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் கலைவாணர் என்று கம்பீரம் பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் நடித்தால்தான் நாடகமே ஓடும் என்ற அளவுக்கு அவரது புகழ் ஓங்கியது. அன்றைக்கு சினிமா இருந்தது. ஆனால், அது பேசவில்லை.
அதனால் நாடகக் கலைஞர்களுக்கு அதன்பால் ஈர்ப்பு இல்லை. காலம் ஒருநாள் சினிமாவுக்கும் குரலை வழங்கியது. பேசாப் படத்தின் மீதிருந்த வெறுப்பு மாறி நாடகக் கலைஞர்களை சினிமா ஈர்க்கத்தொடங்கியது. எல்லிஸ் ஆர். டங்கன் எனும் அமெரிக்க சினிமா கலைஞன் தமிழ் மண்ணில் தனது கலை முயற்சியைத் தொடங்க எண்ணி ‘சதி லீலாவதி’ எனும் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். கதை விவாதம் நடந்தது. புதிய கலைஞர்களை நாடக அரங்கிலிருந்து தேர்வு செய்கிற முகாம். அங்கே சினிமா வாய்ப்பு வேண்டி ஏராளமான நாடகக் கலைஞர்கள் குழுமியிருந்தனர். அதில் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற பின்னாளின் நட்சத்திரங்களும் அடக்கம். விவாதம் நகைச்சுவை காட்சிகள் குறித்து நகர்ந்தது. நகைச்சுவை நடிகர்கள் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்த என்.எஸ்.கிருஷ்ணன் ஏதோ சொல்ல எழுந்தார். எல்லோரும் பதறினார்கள். கிடைக்கப்போகிற சினிமா வாய்ப்பை இவன் ஏதாவது சொல்லப்போய்க் கெடுத்துவிடுவானோ? கிருஷ்ணனின் சட்டையைப் பின்பக்கமிருந்தவர் பிடித்து இழுத்தார். கிருஷ்ணன் முண்டினார். “நகைச்சுவைக் காட்சி பற்றி விவாதிக்கிறபோது என் மனதில் பட்டதை நான் சொல்ல வேண்டாமா?” - வினா தொடுத்தார். தமிழறியாத இயக்குநர் டங்கன் அருகிலிருந்தவரிடம் விசாரித்தார். “அவர் என்ன சொல்ல வருகிறார்? அவரைப் பேச விடுங்கள்...” கிருஷ்ணன் கம்பீரமாகச் சொன்னார்: “நான் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளை நான் சொல்கிறபடிதான் எடுக்க வேண்டும்..!” வியந்துபோனார் டங்கன். துணிச்சலான அந்தப் பேச்சு அவரிடம் திறமையிருப்பதை டங்கனுக்கு உணர்த்தியது. டங்கன் பதில் சொன்னார், “சரி, நீங்கள் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளை நீங்கள் சொல்கிற விதத்திலேயே எடுப்போம்“.நாடகத்தில் எப்படி மாணவனாகச் சேர்ந்த முதல்நாளே ஆசிரியரானாரோ அதேபோல சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தபோதே துணிவோடு குரலெழுப்பி, தனது நகைச்சுவைக் காட்சிக்கு தானேபொறுப்பென்ற உரிமையைப் பெற்றார்.
இப்படியொரு தனித்துவக் கலைஞனாக அவர் விளங்கியதாலேயே தனது நகைச்சுவைக் காட்சிகளிலாகட்டும், பாடல்களிலாகட்டும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை அவரால் தாராளமாக முன்வைக்க முடிந்தது. உலகத்துக்கு ஒரு சாப்ளின் என்றால் தமிழுக்கு, இந்தியாவுக்கு ஒரு கலைவாணர் என்று ஆனார். எண்ணற்ற கலைஞர்கள் அவருக்கு நிழல்போல இருந்தனர். அவரது காதல் மனைவி டி.ஏ. மதுரம் கலையுலகிலும் அவரது இணையாக ஈடுகொடுத்துச் சாதனை புரிந்தார். அவரது உள்ளமறிந்த கவிவாணராக உடுமலை நாராயண கவி அவருக்கேயான தனித்துவமிக்க பாடல்களை இயற்றித் தந்துகொண்டேயிருந்தார். இந்த இணையற்ற கூட்டணி சினிமாவின் நகைச்சுவைக்கு ஒரு பண்பாட்டு ஞான அறச்சாலையின் அந்தஸ்தை வழங்கியது. கலைவாணர் சிரிக்க வைத்து நாட்டைச் செழிக்க வைத்தார்.
அன்றைக்கு சினிமாக்காரர்களுக்கு இருந்த ‘கூத்தாடிகள்’ என்ற இழிச்சொல்லை மாற்றி, ‘கலைஞர்கள்’ என்ற கௌரவத்தைப் பெற்றுத்தந்தது அவரது உன்னதக் கலை. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையை, பொதுவுடைமை இயக்கத்தின் சமுதாய சமத்துவக் கருத்துக்களை, காந்தி மகாத்மாவின் தனி மனித ஒழுக்க விழுமியங்களை ஒருசேர உள்வாங்கிக்கொண்ட கலைவாணர் அந்தக் கருத்துக்களையெல்லாம் தனது கலையின் வாயிலாக மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். “நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் சொல்கிறார். நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலிகளையும் வீசி எறிகிற ஜனங்கள் கிருஷ்ணன் சொன்னால் காசு கொடுத்துக் கேட்டு கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டுப் போகிறார்கள். அந்த வகையில் என்னைவிட அவர் ஒசந்துட்டார்” இப்படியொரு பிள்ளையுள்ளத்தோடு கலைவாணரைப் பாராட்டியவர் தந்தை பெரியார்.
அத்தோடு நின்றுவிடவில்லை கலைவாணர். தான் ஈட்டிய பொருளையெல்லாம் இல்லையென்று வந்தவருக்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்தார். தன் வீட்டில் திருட வந்தவனுக்கும்கூட அவரது கருணைப் பார்வை கிடைத்தது. அவனுக்கும் அள்ளித்தந்துவிட்டே மனந்திருந்த அறிவுறுத்தினார். “உனக்கு எவன் கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது? உனக்குக் கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்“ - என்று வருமானவரி அதிகாரியொருவரே நெகிழ்ந்து அவரைப் புகழ்ந்தார். தனது 49 ஆம் வயதில் மரணத்தைத் தழுவுகிற வரையிலும் இந்தக் கொடைகுணம் அவரிடம் தொடர்ந்தது. அப்போது அவருக்கு வறுமை. கொடுத்தால் வாங்கமாட்டார் எனத் தெரிந்து, மருத்துவமனைப் படுக்கையுள் தனக்கே தெரியாமல் எம்.ஜி.ஆர். வைத்துவிட்டுப்போன நூறு ரூபாய்க் கத்தையினை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடமே சண்டை பிடித்தார் இப்படி: “நூறு ரூபாயாகக் கொடுத்தால் எப்படிப்பா... கொஞ்சம் சில்லரையாக மாற்றித்தந்தால் வருகிறவர்களுக்கெல்லாம் தருவேனே...” தனக்காகத் தரப்பட்ட பணத்தையும் அவர் இப்படித்தான் பயன்படுத்த நினைத்தார், வறுமையின் பிடியிலிருந்தபோதிலும். எல்லோரையும் சிரிக்க வைத்தார், மூடத்தனங்களுக்கு எதிராக சிந்திக்க வைத்தார், அதனால் கிட்டிய பொருளையெல்லாம் இல்லாதவர்க்குக் கொடுத்து தானும் மகிழ்ந்து சிரித்தார். அதனால்தான் அவர் நூறாண்டுகளைக் கடந்தும் தமிழ் ரசிகர்களின் மனங்களிலெல்லாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

கலைவாணருக்கு நிகர் கலைவாணரே என்றுதான் சொல்ல வேண்டும். சக மனிதனை இழிவு செய்யாத, ஊனத்தைக் கிண்டலடிக்காத, பெண்ணைக் கீழ்த்தரமாகக் கொச்சைப் படுத்தாத, இரட்டை அர்த்த வசனத்தை நம்பிக் கடை விரிக்காத அதி உன்னத நகைச்சுவை அவருடையது. கலைவாணரின் இந்த அளவுகோலை வைத்து இன்றைய நகைச்சுவைக் காட்சிகளை எடை போட்டால் எதுதான் அந்தத் தரத்தோடு நமக்கு மிஞ்சும் சொல்லுங்கள்? கலைவாணர் கலைவாணர்தான்

Monday, 24 November 2014


பொதுத்துறையை சூறையாடத் 

திட்டம்


புதுதில்லி, நவ. 23-
இரண்டாம் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களாக பொதுத்துறை மேலும் பெரிய அளவில் திறந்துவிடப்படும், காப்பீடு மற்றும் நிலச்சட்டங்கள் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தில்லியில் ஞாயிறன்று பத்திரிகையாளர்களிடம் அருண் ஜெட்லி பேசியபோது கூறியதாவது:நாட்டின் முன்னேற்றத்திற்கு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எப்போதும் தடை படக்கூடாது என்பதில் பாஜக அரசு தெளிவுடன் இருக்கிறது. இதற்காக இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப்படும். இரண்டாம் கட்டபொருளாதாரச் சீர்திருத்தங்க ளாக நாட்டின் பொதுத்துறைகள் இன்னும் பெரியதாக திறந்து விடப்பட வேண்டும்.
காப்பீடு,ரயில்வேத்துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றில் அந்நிய முதலீடுகள் தாராளமாக வரவேற்கப் படுகின்றன. இவ்வளவு பெரியஅளவில் திறந்துவிடப்படும்போது தொழில் தொடங்க தடையாக நிலம் கையகப்படுத்துதல் சட்டடங்கள் மற்றும் எதிர்ப்புகள் இருக்கக்கூடாது. கார்ப்பரேட்டுகள் தொழில் தொடங்கவும் பல்வேறு கம்பெனிகள் தொழிற்சாலை தொடங்கவும் தடையாக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவது குறித்த சட்டம்வரிச்சட்டம், காப்பீடு சட்டம் போன்றவை உள்ளன. இவை வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காலாவதியாகிப்போன சட்டங்கள் என்பதால் இவை ஒவ்வொன் றாக நீக்கப்பட வேண்டும் என்றார். முதலீட்டாளர்கள் இங்கு தொழில் தொடங்க நிலையான அரசியல், கொள்கை மற்றும் வரி விதிப்பு முறை இருக்க வேண்டும்இங்கு அப்படி இல்லாத நிலையைவிரைவில் மாற்றுவோம். பொதுத் துறையை பெரிய அளவில் திறந்துவிட்டு முதலீடுகள் மலிவாக இல்லாவிட்டால் எந்தப் பயனும்இல்லை. பட்ஜெட் போட்டுத் தான் பொருளாதாரச் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. பட்ஜெட் என்பது ஒரு வாய்ப்புதான். நிலம் கையகப்படுத்தப்படும் போது அதிக அளவில் நட்ட ஈடுஅளிப்பது பிரச்சனையில்லை. ஆனால் நிலம் கையகப்படுத்த வில்லை எனில் கட்டுமானம், நகரங்கள், வீடுகள் கட்டுவது மற்றும் வேலை வாய்ப்புகள் போன்றவை பிரச்சனையாகி விடும்.
சிலிண்டர்களுக்கான மானியங்கள் அளிப்பதைப் பொறுத்தவரை இரு நாட்களுக்கு முன்னதாக கூறியதையே உறுதிப்படுத்து கிறேன். வசதியுள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் அளிப்பதை ரத்து செய்வதற்கு சில எதிர்ப்புகளை நாங்கள் எதிர்கொள்வோம் என்று எங்களுக்கு தெரியும்.பொது விநியோக முறையைரத்து செய்வதைப் பொறுத்த வரை இதற்காக பிமல் ஜெயின் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட செலவினங்கள் மேலாண்மை கமிஷன் இப்பிரச்சனையை ஆராய்ந்து வருகிறது. பொது விநியோக முறையில் வழங்கப்படும் உணவு, உரங்கள் மற்றும் எண்ணெய்க்காக அளிக்கப்படும் மானியங்களை குறைப்பதற்கும் இதனால் பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையை சரி செய்யவும் அந்த கமிஷன் ஆராய்ந்து வருகிறது.
விரைவில் அந்த கமிஷனின் பரிந்துரையின்படி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். அருண் ஜெட்லி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகவும் உள்ளார்.
எப்.எம்.வானொலி
இத்துறையை விரிவுபடுத்து வது தொடர்பாக பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மத்திய அரசு800 எப்.எம்.வானொலி சேவை களுக்கு அனுமதி அளிக்கும் என்றுகூறியுள்ளார்.

Thursday, 20 November 2014

Wednesday, 19 November 2014

17.11.2014 அன்று சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு முடிவுகள்

நவ-27 போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு, அனைவரையும் கலந்துகொள்ளவைத்து நூறு சதம் வெற்றி அடையச்செய்வது
---------------------------------------------------------
18ந் தேதி மாலை காரைக்குடியில் பொ.மே அலுவலக வளாகத்தில் JAC சார்பில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்பது
---------------------------------------------------------
இருபதாம் தேதி முதல் நடைபெற இருக்கிற வாயில் கூட்டங்களை அனைத்து ஊர்களிலும் சிறப்பாக நடத்துவது
---------------------------------------------------------
மாவட்டதிற்குள் விருப்ப மாறுதலுக்காக நீண்ட காலமாக காத்திருப்போர்களின் மாறுதல்களை, வரிசைப்பட்டியலின்படி, உத்திரவிட நிர்வாகத்தை வலியுறுத்துவது
-----------------------------------------------------
இன்னமும் NEPP வழங்கப்படாமல் உள்ள தோழர்களுக்கு அதனை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வது
---------------------------------------------------------

தரம் குறைந்த பேட்டரிகளினால் மாவட்டத்தில் பல தொலைபேசி நிலையங்கள் மணிக்கணக்கில், நாட்கணக்கில் செயல் இழக்க நேரிடுகிறது. இது நமது கம்பெனிக்கு மாபெரும் இழப்பு. தரமான பேட்டரிகள் வாங்கும்படி நிர்வாகத்தை நிர்ப்பந்தம் செய்வது

Tuesday, 18 November 2014

சட்டங்களை ஒழிப்பேன்


சிட்னி, நவ.17-
இந்தியாவுக்குள் அந்நியர்கள் தாராள மாக நுழைவதற்கு தடையாக இருக்கும் சட்டங் கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுவேன் என பிரதமர் நரேந்திரமோடி கொக்கரித்தார். மேலும், ரயில்வேத் துறையில் 100 சதவீதம் அந்நிய பெருமுதலாளிகளை அனுமதிக்க காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.ஜி20 உச்சி மாநாட்டையொட்டி ஆஸ் திரேலியா பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டின் தலைநகர் சிட்னியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புக் கூட்டத் தில் பேசினார்.இந்தக் கூட்டத்தை பற்றி ஏற்கெனவே திட்டமிட்டப்படி இந்திய ஊடகங்கள் வானளாவ புகழ்ந்து ஊதித் தள்ளியுள்ளன. அக்கூட்டத்தில் மோடி பேசிய விதம் குறித் தும், கிடைத்த வரவேற்பு குறித்தும் பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. அதே நேரத்தில் அக்கூட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய மக்க ளுக்கும் எதிரான பல அறிவிப்புகளை மோடிவெளியிட்டது குறித்து ஒருவரி செய்தியாக வெளியிட்டுள்ளன.
சிட்னி கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியாவில் ‘ஜன்தன்’ என்ற திட்டத்தை தான் துவக்கியது பற்றி பெருமிதத்துடன் குறிப்பிட்டுக் கொண்டார். இந்திய ரிசர்வ்வங்கியுடன் இதுபற்றி முதலில் ஆலோசித்த போது, இத்திட்டத்தை நிறைவேற்ற 3 ஆண்டுகள் ஆகும் எனக் கூறியதாக தெரி வித்தார். ஆனால், வெறும் 150 நாட்களில் தனது முன்முயற்சியால் திட்டம் நிறைவேற் றப்பட்டுவிட்டதாகவும், கடந்த 10 வாரங் களில் மட்டும் சுமார் 7 கோடி வங்கிக் கணக்கு கள் துவக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
ஆனால் இந்த திட்டம், படிப்படியாக இந்திய ஏழைகளுக்கான மானியங்களை அவர்களுக்கே தெரியாமல் மொத்தமாக பறிப்பதற்கான திட்டம் என்பதை அவர் குறிப்பிடவில்லை.ரயில்வேத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க தமது அரசு தயாராக இருப்பதாக மோடி பகிரங்கமாக அறிவித்தார். இந்திய ரயில்வேத் துறை என்பது அந்நிய பெருமுதலாளிகளுக்கு ஒரு பிரம்மாண்டமான ஒரு சந்தை என்றும், அதை மிகப் பெரிய அளவிற்கு பயன்படுத்திக் கொண்டால் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்றும் மோடி குறிப்பிட்டார்.
அந்நிய பெருமுதலாளிகளுக்காக உழைப்பதற்கு இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தொழி லாளர் சந்தை இருக்கிறது என்று கூறிய மோடி, எனினும் அவர்களது திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்றும் கூறினார்.மேலும், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு புதிது புதிதாக சட்டங்களை உருவாக்கு வதில் மகிழ்ச்சியடைந்தது எனக் குறிப்பிட்ட மோடி, “ஆனால் என்னை பொறுத்தவரை சட்டங்களை ஒழிப்பதில்தான் மகிழ்ச்சி யடைகிறேன். ஏராளமான சட்டங்களை ரத்துசெய்வேன்; அதன்மூலம் சுத்தமான காற்று உள்ளே வரட்டும்” என்று கூறினார். அவர் சுத்தமான காற்று என்று குறிப்பிட்டது இந்திய சட்ட விதிகளால் உள்ளே வர முடியாமல் தடைப்பட்டு நிற்கும் அந்நிய பெருமுதலாளிகளே என்பது கவனிக்கத்தக்கது.

Saturday, 15 November 2014


நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி கொச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினராயி விஜயன்பூச்செண்டு அளித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.


நீதிமானுக்கு வயது 100
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் 100வது பிறந்த நாள் விழா கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.1915ம் ஆண்டு பாலக்காட்டில் உள்ள வைத்தியநாதபுரத்தில் ஒரு எளிய தமிழர் குடும்பத்தில் பிறந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இளமைப்பருவத்தின் தொடக்கத்திலிருந்தே சமூக ஆர்வலராகவும் அடித்தள மக்களிடம் அன்புள்ளம் கொண்டவராகவும் இருந்தார்.
வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய கிருஷ்ணய்யர் சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினர் மற்றும் தொழிலாளர்களுக்காக வழக்குகளை நடத்தினார்.1957ம் ஆண்டு கேரள மாநிலத்தில் தோழர் இஎம்எஸ் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் அமைச்சரவையில் சட்டம், மின்சாரம், சிறைத்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார். 1968ல் கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தார்.

இதனைத் தொடர்ந்து 1973ல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார். 7 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்த அவர் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். பத்மபூஷன் விருது உள்ளிட்டு 20ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.நீதிபதியாக இவர் அளித்த தீர்ப்புகள் இன்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Thursday, 13 November 2014

காரைக்குடி B S N L E U மாவட்ட சங்கம் தோழர் செல்லப்பா A G S அவர்களின் அகில இந்திய அளவிலான பணிகள் சிறக்க வாழ்த்துக்கிறோம்

Tuesday, 11 November 2014

Patron : Com. V.A.N. Namboodiri 
P r e s i d e n t : C o m . B a l b i r S i n g h , P u n j a b
Vice Presidents : (1) Com. P. Asokababu, Andhra Pradesh 
 (2) Com. Animesh Mitra, West Bengal 
 (3) Com. K.R. Yadav, Uttar Pradesh (East) 
 (4) Com. B. Narayan, Jharkhand 
 (5) Com. Jagdish Singh, Madhya Pradesh 
 (6) Com. Om Prakash Singh, TF, Kolkata. 
Ge n e r a l S e c r e t a r y : C o m . P . A b h i m a n y u , T  N 
D y . Ge n e r a l S e c r e t a r y : C o m . S w a p a n C h a k r a b o r t y , N E - 1
Asst. General Secretary : (1) Com. J. Sampathrao, Andhra Pradesh 
 (2) Com. John Verghese, Maharashtra 
 (3) Com. S. Pratap Kumar, Kerala 
 (4) Com. M.C. Balakrishna, Karnataka 
 (5) Com. S. Chellapa, Tamil Nadu 
T r e a s u r e r : C o m . S a i b a l S e n g u p t a , K o l k a t a
Asst. Treasurer : Com. Kuldeep Singh, Haryana 
Org. Secretaries : (1) Com. R.S. Chouhan, NTR 
 (2) Com. Sunithi Choudhary, Bihar 
 (3) Com. Sukhvir Singh, Uttar Pradesh (West) 
 (4) Com. Vijay singh, Rajasthan 
 (5) Com. D.K. Bakutra, Gujarat 
 (6) Com. Sandya Gadgil, Maharashtra 
 (7) Com. M. Vijayakumar, Kerala 
 (8) Com. Gokul Bora, Assam 
 (9) Com. G.Q. Dandroo, J&K

Monday, 10 November 2014



B S N L E U அகில இந்திய மாநாடு கொல்கத்தா  






Friday, 7 November 2014

நவம்பர் புரட்சி நவயுகத்திலும் 

வழிகாட்டும்!


1991ஆம் ஆண்டு ஆகஸ்டில் சோவியத் சோசலிசக் குடியரசு தகர்ந்த பின், உலக அளவில் சமூக மாண்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தரம் தாழ்ந்து செல்லத் தொடங்கிவிட்டன. கோர்பசேவ் கூட மிகவும் பட்டவர்த்தனமாகச் செய்யத் தயங்கிய வேலைகளை, அவரதுஅக்கிரம நடவடிக்கைகள் அனைத் திற்கும் துணையாக இருந்த எல்ட்சின் மேற்கொண்டு,“என் குறிக்கோள் நிறைவேறிவிட்டது,’’ என்று கொக்கரித் தார். சோவியத் யூனியனைத் தகர்க் கும் இவர்களின் நயவஞ்சகத் திட்டம்முழுமையாக நிறைவேறியது. தன்னு டைய சொந்த நாடான போலந்திலும் மற்ற நாடுகளிலும் கம்யூனிசத்தை முற்றிலுமாக வேரறுத்திட உறுதி பூண்டிருந்த போப் ஜான் பால் 2 என்ப வர்கூட, “கம்யூனிசம் தீமைகள் நிறைந்த ஒன்றாக இருந்தபோதிலும், மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அதிலும் சில அடிப்படைக்கூறுகள் இருந்தன,’’ என்றும் “எனவே அது முடிவுற்றுவிட்டதென்று அதீதமாக `சந்தோ ஷம்’ அடைய வேண்டாம்,’’ என்று பதிவு செய்திருக்கிறார். சோவியத் யூனியன் தகர்ந்தபோது காழ்ப்புடன் மிகவும் குதூகலம் அடைந்த பிரிட்டிஷ் முதலாளிகளின் ஊதுகுழலான `லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையே இத னைப் பதிவு செய்திருக்கிறது.
அப்போது அந்த ஏடு தன் தலையங்கத்தில் “கட்சி முடிவுக்கு வந்துவிட்டது,’’ என்று எழுதி விட்டு, “ரஷ்யர்கள் தற்போது ஏழை லெனினை கிறித்துவமத அடிப்படையில் கல்லறையில் வைத்திடுங்கள்,’’ என்று அறிவுரையும் வழங்கி இருக்கிறது. “உண்மையான, சிறந்து விளங்கிய சோசலிசம்’’ நிலைகுலைந்ததில் ஆச்சர்யம் எதுவும் இருப்பதாக நாம் பார்க்கவில்லை. மாபெரும் நவம்பர் புரட்சியானது மன்னிக் கப்படக்கூடாத விதத்தில் கசிந்து கொண்டிருந்த ஊழல் மற்றும் பேராசை குணங் களை வேருடன் பிடுங்கி எறியத் தவறியதே இதற்குக் காரணங்களாக இருந் திருக்க வேண்டும். உலகின் பல நாடுகளில் சோசலிச அமைப்பு தகர்ந்ததற்குப்பின்னர், பெரும் பணம் படைத்தவர்களால் ஆட்சி செய்யப்படும் இன்றைய உலகில், அநேகமாக அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் பொது வாழ்க்கை என்பது இருளார்ந்த முறையில் சீர்கேடு அடைந்து கொண்டிருப்பது குறித்து,
இவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அமெரிக்கா புரிந்திட்ட `போர்க் குற்றங்கள்’ தொடர் பாக அமெரிக்க அரசாங்கத்தின் முன் னாள் அட்டார்னி ஜெனரல் தன் சொந்தஅரசாங்கத்தின்மீதே குற்றம் சுமத்தி யதைத் தவிர, அமெரிக்கா இராக் மீது 1991க்கு முன்பு மிகவும் கொடூரமான முறையில் தொடுத்த தாக்குதல்கள் குறித்து, எவரும் கண்டனம் எழுப் பிடவில்லை. அமெரிக்காவின் தாக்கு தலால் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைக்கப்பட்டனர், இரண்டாயிரம் இராக்கியர்கள் சரணடைந் தனர். சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா இவ்வாறு அட்டூழி யம் புரிந்திருந்தபோதிலும், அட்டூழியத் தில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஆரவாரத்துடன் வரவேற்கப் பட்டார்களேதவிர, அவர்களது அட்டூ ழியங்களுக்கு எதிராக உலகமோ, ஐ.நா. ஸ்தாபனமோ கண்டித்திடவில்லை. வெளிப்படையாக இல்லை என்றபோதிலும் நடைமுறையில் ஸ்.நா.ஸ்தாபனம், அமெரிக்காவின் கைப்பாவையாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது.
ஒரு காலத்தில் அணிசேரா நாடு களின் காவலனாகத் திகழ்ந்த இந்தியா, தற்போது அமெரிக்காவின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. சர்வதேச அளவில் அறநெறி என்பது எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவ்வரலாற்றுப் பதிவுகள் சான்றுகளாக விளங்குகின்றன. ஐரோப் பாவில் சோசலிச நாடுகள் வீழ்ச்சி அடைந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.1985-87களில் மிகயீல் கோர்பசேவ் சோசலிசம் என்ற பெயருடனேயே சோசலிசத்திற்கு எதிராக மிகவும் நேர்த்தியாக முகமூடி அணிந்துகொண்டு நடவடிக்கை கள்மேற்கொண்டதானது உலகின் பல நாடுகளில் இருந்த அறிவுஜீவிகள் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்தது மிகவும் கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
கோர்பசேவின் சதி வேலைகள் நீண்டகாலமாக மிகவும் நன்கு திட்டமிடப் பட்டவைகளாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் கோர்பசேவ் பெயர் புகழ் பெற்றிருந்த அளவிற்கு வேறெவர் பெயரும் புகழடையவில்லை. `கோர்பி’ என்றும் ` தற்போதைய பத்தாண்டுகளின் மனிதர்’ என்றும் பெரும் புள்ளிகளின் ஊடகங்களால் புகழப்பெற்றது மட்டு மல்ல, நோபல் அமைதிப் பரிசை அளித்தும் அவர் முடிசூடப்பட்டார். (அந்தக்காலத்தில் அரபு உலகில் நாசரின் கொள் கைகளுக்குத் துரோகம் இழைத்ததற்காக ஹென்றி கிசிஞ்சருடன் அன்வர் சதாத்திற்கும் பரிசளிக்கப்பட்டதை நினைவு கூர்க) `கோர்பி’ ஜூரம் மறைந்துவிட்டது.
சோசலிசத்தின் எதிரிகளின் பகடைக் காயாக இருந்த நபர் நவீன காலனிய சுரண்டலுக்கு ஒரு வளமான பொருளாகக் கருதப்பட்டார். எனவே, அவர் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படும் வரை ஒட்ட உறிஞ்சப்பட்டார். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கணிசமான அளவிற்கு கோர்பசேவ் போன்ற மோசடி பேர்வழிகள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். இவர்களைக் கண்டுபிடித்து கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து களை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.நவம்பர் புரட்சிக்குப் பிந்தைய காலம் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாபெரும் நவம்பர் புரட்சிக்குப் பிந்தைய காலம் முழுவதையுமே ஏன் ஆய்வுக்கு உட்படுத்திட வேண் டும்? இதனை கோர்பசேவின் பெரெஸ்த் ரோய்கா கொள்கையால் ஈர்க்கப்பட்ட நபர்கள் அலட்சியம் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். லெனின் மற்றும் ஸ்டாலின் காலத்தில் சோவியத் யூனியன் புரிந்திட்டஅளப்பரிய சாதனைகள் எல் லாம் கூறப்படுவதையோ, இவர்களுடைய விசித்திரமான தில்லுமுல்லு களையெல்லாம் கடந்து, சோவியத் கம்யூனிசம் வரலாற்றில் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியதையோ மீண்டும் நினைவுகூரப்படுவதை இவர்கள் விரும்பவில்லை.
ரவீந்திரநாத் தாகூர், ரொமைன் ரோலண்டு, பெர்னார்ட் ஷா, ஐன்ஸ்டீன், சார்லி சாப்ளின் மற்றும் பலராலும் போற்றிப் பாராட்டப்பட்ட சோவியத் யூனியனை மீண்டும் நினைவு கூர்வதை இவர்கள் விரும்பவில்லை. உலகில் நம்மைப்போன்று செயல்பட் டுக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் கோர்பசேவின் திட்டம் வெற்றி பெற்றது குறித்து அதிர்ச்சி அடைந்தார்கள். நம்மைப் போன்றவர்கள் இத்தகைய துரோகிகளின் நடவடிக்கைகளால் பெருமை அடைய முடியாது.
மிகவும் வருத்தம் அடைந்தோம். மார்க்ஸ் போன்றவர்கள் கூட வரலாற்று ரீதியாக முன்னேறிய நாடுகள் தான், ஜனநாயகத்தில் தங்களுக்குள்ள அனுபவத்தின் காரணமாக, புரட்சி யை நோக்கி நகர்ந்து வரும் என்று நினைத்தார்கள் என்பதை நாம் ஒருவேளை மறந்துவிட்டோம். ஆனால் அவ்வாறு நடந்திட வில்லை. இது குறித்து ஏராளமான ஆய்வு நூல்கள் வெளிவந்துவிட்டன. பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் புரட்சி முதலில், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் மிகப் பிரம்மாண்டமான பகுதிகளை உள்ளடக்கிய ரஷ்யாவில்தான் வர முடிந்தது, அதற்குமுன் அப்பகுதிகளில் அநேகமாக ஜனநாயகமே இல்லாதிருந்த நிலைதான். புரட்சி இங்கிலாந்து அல் லது ஹாலந்து போன்ற முன்னேறிய நாடுகளில்தான் வரும் என்றும் அப்போதுதான் அங்கே உண்மையான ஜனநாயகம் எளிதாகவும் வேகமாகவும் வரும் என்றும் மார்க்ஸ், ஒரு சமயத்தில் எதிர்பார்த்தார். ஜனநாயகம் வழியே சோசலிசத்தை நோக்கி எளிதாக அதிக விலை கொடுக் காது முன்னேற முடியும் என்று அப் போது நினைக்கப்பட்டது.
மேலும், லெனின் போன்ற தீர்மானகரமான புரட்சியாளர்கள் (சோசலிசத்திற்கு முக்கியமான மூலக்கூறாக விளங்கும்) ஜனநாயகத்தை நோக்கி ரஷ்யாவைக் கொண்டு செல்லும்போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று கருதப்பட்டது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கமும், `மாபெரும் நவம்பர் புரட்சி’யும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டன. அத னைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வரலாற்றில் புதிய அத்தியாயங்களை அவைதோற்றுவித்தன. 1917 அக்டோபரில் மனித குல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய விதத்தில் புரட்சியை நடத்தி, மகத்தான சாதனை படைத் தனர். அதனைத் தொடர்ந்து முப்பதாண்டு காலம் லெனின் மற்றும், ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக்குகள் உலகை யை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை களில் ஈடுபட்டார்கள். இங்கே ஒரு விஷயத்தைக்குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.
சோவியத் ரஷ்யா, கோர்பசேவின் துரோகத்தனமான நடவடிக்கைகளால் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கம்யூனிஸ்ட் சீனா கோர்பசேவின் நடவடிக்கைகளை உதறித்தள்ளி எறிந்துவிட்டு, தங்கள் நாட்டிற்கேற்ப மார்க்சிய லெனினியப் பாதையில் முன்னேறியது.கோர்பசே விசத்திற்கு இரையாகி உலகில் பல கம்யூனிஸ்ட் நாடுகளில் தலைவர்கள் “வர்க்கப் போராட்டத்தை’’ கைவிட்டு விட்டபோதிலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியான நிலை எடுத்தது. “வர்க்கப் போராட்டத்தை எப்போதும் மறக்கக்கூடாது’’ என்கிற மாவோவின் பொன்மொழி நிவாரணத்தை அளிக்கிறது. சிறிய நாடாக இருந்தாலும் செங்கொடியை உயர்த்திப்பிடித்து அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு இன்றளவும் சிம்ம சொப்பனமாகத் திகழும் கியூபாவை பெருமை யுடன் நினைவுகூர்வோம். “சோசலிசம் இல்லையேல் மரணம். நிச்சயம் நாங்கள் வெல்வோம்’’ என்று பிடல் காஸ்ட்ரோ வீர முழக்கமிட்டார். இன்றைக்கு உலகில் நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகள் வர்க்கப் போராட்டத்திற்கும், சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் இன்றைக்கும் பொருந் தக்கூடியதாகவே இருக்கின்றன. ஸ்டாலினுக்குப்பின் பொறுப்பேற்ற மாலங்கோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரசில் ஸ்தாபனம் தொடர்பாக பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
ஆனால் அவற்றை சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற கட்சிகளும் கண்டுகொள்ள வில்லை.ஸ்டாலின் நடவடிக்கைகள் அனைத்தையும் சரி என்று நாமும்கூறிடவில்லை. ஆயினும், சோசலிசத்திற் கான போராட்டத்திற்கு, மனித குலம் உண்மையான முறையில் விடுதலை பெறுவதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எவரும் மறுதலித்திட முடியாது. நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கைகள் உலக அளவில் அறநெறி ஒழுங்கை சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ள நிலையில், கம்யூனிஸ்ட்டுகளும் முற்போக் காளர்களும் புத்துயிர் பெற்று, இவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடித்திட வேண்டும். சோவியத் வரலாற்றை ஸ்டாலின் மற்றும் இதர தலைவர் களின் பங்களிப்புகளுடன் முறையாக ஆய்வு செய்வது என்பது முற்போக்கு சக்திகளுக்கும், தாங்கள் தலைமை ஏற்க வேண்டிய மக்களுக்கும் துணிவையும், நெஞ்சுரத்தையும் கொடுத்திடும். எனவே, 1917 நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியின் பங்களிப்பு இன்றும் முக்கியத் துவம் உடையதேயாகும்.-
தமிழில்: ச.வீரமணி

Monday, 3 November 2014

நோக்கியா என்ற அன்னிய மூலதனக் கம்பெனி (பின்லாந்து ) சுமார் 10000 கோடி வரி எய்ப்பு  செய்துவிட்டு கொள்ளை லாபம் அடித்துவிட்டு பலஆயிரம்  தொழிலாளர்களை  நடுத்தெருவில் 
விட்டது .

இது தான் அன்னிய மூலதனத தின்  லாபவெறி  கொள்கை இதுதான் மோடி அரசின் கொள்கை
இதை  தொழிலாளர்கள்  புரிந்துகொள்ளவெண்டும் 


நோக்கியா ஆலை மூடப்பட்டது


ஸ்ரீபெரும்புதூர், நவ. 1-சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவந்த நோக்கியா செல்போன் உற்பத்தி ஆலை, நவம்பர் 1 சனிக்கிழமை மூடப்பட்டது. சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு,2004ல் இந்தியாவில் நோக்கியா நிறுவனம் தனது உற்பத்திப் பிரிவை துவக்க இருப்பதாக அறிவித்தபோது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, எப்படியேனும் நோக்கியாவை தமிழகத்திற்கு கொண்டுவருவதில் குறியாக இருந்தார்; பத்து ஆண்டுகளில் கோடி கோடியாக கொள்ளை லாபம் அடித்துவிட்டு அதே நிறுவனம் ஆலையை தற்போதுமூடியுள்ளது.

ஆனால் இப்போதும் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையும் வாழ்வும் பறிக்கப்பட்டுள்ள போதிலும் வாய்மூடி மவுனம் காக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக போன்ற ஓரிரு கட்சிகளும், சிஐடியு போன்ற தொழிற்சங்கங்களும் மட்டுமே இத்தொழிலாளர்களுக்காக ஆவேசமாக குரல் கொடுத்தன. தமிழகத்தின் வேறு எந்தக்கட்சியும் இதற்காக கண்டன அறிக்கை கூட விடுக்கவில்லை. ஊடகங்களுக்கு இந்த ஆலை மூடல் ஒரு முக்கிய செய்தியே அல்ல. வேலையைப் பறிப்பது என கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவெடுத்தால் மத்திய,மாநில அரசுகள் ஒருபோதும் தலையிடப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக நோக்கியா ஆலை மூடப்பட்டுள்ளது.