தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday, 26 July 2014

காசுவல் மற்றும் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்

புவனேஷ்வரில் பி எஸ் என் எல் காசுவல் மற்றும்
காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்
18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில் நடைபெற்றது.
அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின்
ராஜ்கோட் மத்திய  செயற்குழு
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் அறைகூவலை வெற்றிகரமாக்க கேட்டு கொண்டது.
அந்த அடிப்படையில் தற்போது போராட்ட  அறைகூவல்   விடப்பட்டுள்ளது.
26-08-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் 
தர்ணா போராட்டம்
25-09-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி
15-10-2014 அன்று CMD அலுவலகம் நோக்கி பேரணி
பிரச்சனைகள் தீராவிட்டால்
ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
கோரிக்கைகள் :-
விடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  அனைத்திந்திய மகாநாட்டை தமிழ் மாநில சங்கம் வரும் டிசம்பர் மாதம் நடத்த உள்ளது.

07.08.2014 அன்று கோரிக்கை தினம்

30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 
கூட்டு நடவடிக்கைக் குழு அறைகூவலான   
“கோரிக்கை தினத்தை” 
சக்தியாக நடத்தும்படி
அகில இந்தியச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.


Wednesday, 23 July 2014

BSNLEU ITEMS IN THE NATIONAL JCM


மத்தியச் செயலக முடிவுகள் - சுற்றறிக்கை

M/s Deloittee பரிந்துரை

BSNL நிறுவன சீரமைப்பு (ORGANISATIONAL RESTRUCTURING) மற்றும்
மனித வளத்திட்டத்தின் (HR PLAN) மீதான
“M/s Deloittee Consultants” பரிந்துரைகளின் சாராம்சம்

விற்பனையையும் வாடிக்கையாளர் சேவையையும்
முன்னிலைப்படுத்தும் நோக்கில்
SSAக்களை பகுதிவாரி அலுவலகங்களாக (AREA OFFICES)
சீரமைக்க வேண்டும்.
பூகோள அளவு, தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை
மற்றும் வருமான வாய்ப்பு அடிப்படையில்
சிறிய SSAக்களை பகுதி வாரி அலுவலகங்களுடன் 
இணைக்க வேண்டும்.
இதன் படி தற்போது அகில இந்திய அளவில் இருக்கும்
329 SSAக்களை 167 பகுதி அலுவலகங்களாக
மாற்றியமைக்க வேண்டும்.
தமிழகத்தில் இருக்கும் 17 SSAக்கள்
10 பகுதி அலுவலகங்களாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
விருதுநகர், மதுரையுடனும்
தஞ்சை மற்றும் குடந்தை, திருச்சியுடனும்
ஈரோடு, கோவையுடனும்
தர்மபுரி மற்றும் நாகர் கோவில், வேலூருடனும்
இணைக்கப்பட வேண்டும்.
Transmission, Network Planning போன்ற வேலைகளை
மாநில அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும்.

விற்பனை(SALES),
சந்தைப்படுத்துதல்(MARKETING),
வாடிக்கையாளர் சேவை(CUSTOMER SERVICE DELIVERY),
தகவல் தொழில்நுட்பம்(IT) போன்ற முக்கியமான பகுதிகளில்
BSNL பின் தங்கியுள்ளது.
அந்த துறைகளில் திறனை அதிகரிப்பதற்காக,
தொலைத்தொடர்பு விற்பனை பின்புலத்திறன் கொண்ட
8000 அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு சந்தைப்படுத்துதல் பின்புலத்திறன் கொண்ட
1300 அதிகாரிகளை பணி நியமனம் செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர் மேலாண்மையில் திறன் கொண்ட
4000 அதிகாரிகளை பணி நியமனம் செய்ய வேண்டும்.
அப்படி நியமிக்கப்படும் ஊழியர்களில் பெரும்பகுதியினர்
நிறுவனத்தின் ஊதியப் பட்டியலில்
ஊதியம் வாங்குபவராக இருக்கக் கூடாது.

வருமானத்திற்கும் ஊழியர் ஊதியத்திற்கும் உள்ள விகிதாச்சாரம்
51% என்ற அதிக அளவில் உள்ளது.
போட்டி நிறைந்த இன்றைய சூழலில் 
இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சந்தை மதிப்பீட்டில் கண்டறியப்படும் 
உபரி ஊழியர்களின் ஊதியத்தில் 
50% த்தை அரசு ஏற்க வேண்டும்.
செயல்திறன் நிர்வாகத் திட்டத்தை(PERFORMANCE MANAGEMENT SYSTEM) அறிமுகப்படுத்தி ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

சந்தையில் உள்ள மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களில்
NON EXECUTIVE ஊழியர்கள் கிடையாது.
6500 இணைப்புகளுக்கு ஒரு நிர்வாகி இருக்கிறார்.
15000 இணைப்புகளுக்கு ஒரு விற்பனை நிர்வாகி,
ஒரு லட்சம் இணைப்புகளுக்கு ஒரு சந்தை நிர்வாகி
30000 இணைப்புகளுக்கு ஒரு வாடிக்கையாளர் சேவை நிர்வாகி,
31250 இணைப்புகளுக்கு ஒரு நெட் ஒர்க் பராமரிப்பு நிர்வாகி,
சந்தை, விற்பனை வாடிக்கையாளர் சேவை, பராமரிப்பு நிர்வாகிகள் ஆகிய அனைத்து நிர்வாகிகளின் மொத்த எண்ணிக்கையில் 
7% நிதி, தகவல் தொழில் நுட்பம், வியாபாரத்திட்டம் 
தொடர்பான நிர்வாகிகளும்
3% மனித வள நிர்வாகிகளும் இருக்கின்றனர்.
சிவில், எலெக்ட்ரிகல் போன்ற நிர்வாகிகள் கிடையாது.

பகுதி அலுவலகங்களுக்கு 
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊழியர் எண்ணிக்கை
ஒரு பொது மேலாளருக்கு 2 துணைப்பொது மேலாளர்கள்
2705 தரைவழி இணைப்புகளுக்கு ஒரு JTO/SDE/AGM
விற்பனை, சந்தைப்பிரிவு, வாடிக்கையாளர் சேவைப்பிரிவுகளுக்கு
சந்தையில் உள்ள நிலவரப்படி 
ஊழியர் எண்ணிக்கையை முடிவு செய்யலாம்.
பகுதி அலுவலகங்களில் உள்ள மொத்த ஊழியர் எண்ணிக்கையில்
20% நிதி/கணக்குப் பிரிவு ஊழியர்கள்.
7% மனித வள நிர்வாகப் பிரிவு ஊழியர்கள்.
409 இணைப்புகளுக்கு ஒரு TM/RM
2991 தரைவழி இணைப்புகளுக்கு ஒரு TTA
தற்போது இருக்கும் Sr.TOAக்கள்
ERP நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடரலாம்.
மற்ற பிரிவு NON EXECUTIVE ஊழியர்கள் தேவையில்லை;
அவர்கள் ஓய்வு பெறும் வரை தொடரலாம்.

தற்போது தொழில்நுட்பம், நிதி ஆகிய இரு பிரிவுகளில் மட்டுமே
நிர்வாகிகள் இருக்கிறார்கள்.
இது போதாது.
மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப
விற்பனை, சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை விநியோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பகுதிகளில்
புதிய திறனைப் புகுத்த வேண்டும்.
பொறியியல் பட்டத்தோடு மேலாண்மைப் பட்டமும் பெற்று
விற்பனை, சந்தைப்படுத்துதலில் அனுபவம் பெற்ற
14234 புதிய நிர்வாகிகளை
JTO/SDE/AGM/DGM/GM பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டும்.
இதில் DGM/GM பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் மட்டும் நிறுவனத்திலிருந்து ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.
மற்றவர்கள் நிறுவன ஊழியர்களாக இல்லாது
OFF ROLL ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ் மாநிலத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட
நிர்வாகிகள் எண்ணிக்கை(EXECUTIVES STRENGTH)
DESIGNATION
EXISTING
RECOMMENDED
CGM/PGM
1
4
GM/Sr.GM
24
29
DGM
107
90
JTO/SDE/AGM/CAO
3527
2589
TOTAL
3659
2712
  
காரைக்குடி பகுதி அலுவலகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட
NON EXECUTIVES எண்ணிக்கை
TM/RM
189
TTA
26
Sr.TOA
62
TOTAL
277
     
தோழர்களே,
சாம் பிட்ரோடாவில் இருந்து Deloittee வரை
எத்தனை குழுக்கள் மதிப்பீடு செய்தாலும்
அவை அனைத்தின் சாராம்சம் ஒன்று தான்.
ஊழியர் ஊதியச் செலவு அதிகம்,
ஏனென்றால், தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருக்கிறார்கள்”,
என்பது தான்.

நிறுவனத்தின் நிலையை சீரமைக்க வேண்டும் என்றால்,
ஊழியர்களின் வாழ்வைச் சீரழிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளையே தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.
போட்டி என்ற பெயரில்
சுரண்டல் முறைகளை ஊக்குவிக்கும் பரிந்துரைகளையே
கேட்டு வருகிறோம்.

ஏனென்றால்,
பரிந்துரைக்காக நியமிக்கப்பட்ட அத்தனை மதிப்பீட்டாளர்களும்
முதலாளித்துவ கார்ப்பொரேட் நிறுவனங்களும்
அதன் பிரதிநிதிகளுமே ஆவர்.
  
BSNL நிறுவனமும்
தொழிற்சங்கங்களிடம் தகவல் இருட்டடிப்பு வேலையைத்
தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.
பரிந்துரைக்காக இப்படி ஒரு நிறுவனத்தை
நியமிக்கப் போவது தொடர்பாக
எந்த சங்கத்திடமும் ஆலோசிக்கவில்லை; அறிவிப்பு கூட இல்லை.
வந்த பரிந்துரையை எந்தச் சங்கத்திற்கும் வழங்கவில்லை,
அதுபற்றி ஆலோசிக்க அழைக்கவில்லை.
ஆனால், நிர்வாக ரீதியாக பொதுமேலாளர்கள் மட்டத்தில்
இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வதற்கு துவங்கி விட்டது.

இந்த பரிந்துரைகளின் மீது
உற்ற அக்கறையும் ஆழ்ந்த ஆய்வும் 
நமக்குத் தேவைப்படுகிறது.