தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 10 March 2016

2013 - கடந்த தேர்தல் முடிவுகள்
============================= 

BSNLEU 99380  ---- 48.6 %

BSNLEU  has INCREASED its vote share from

46.57% to 48.6% ie., an increase of 2.3%

NFTE    61915  -----    30.26 % 

NFTE vote share has DECREASED  
 from 34.96 % to  30.26 %

BSNLEU  MAIN RECOGNISED UNION


NFTE              SECOND RECOGNISED UNION



Image result for cell phone clipart   VOTE FOR CELL PHONE
              
                                 
                 



Monday, 7 March 2016

Sunday, 6 March 2016

Friday, 26 February 2016



                  LOCAL  கவுன்சில் 

காரைக்குடி L C M 23.02.2016 அன்று நடைபெற்றது    
கூட்டாக பிரச்சனைகளை விவாதித்தோம்  குறிப்பாக ஒப்பந்த ஊழியர்களின் மாதம் 26 நாள் கூலி LEO ஆர்டர் அமுல்படுத்தவேண்டும் என கோரினோம் ஜெனரல் மேனேஜர் மாநில நிர்வாகத்தை கேட்க வேண்டும் என பிடிவதமாக
மறுத்துவருகிறார் ஆனால் EPF பிரச்சனையில் இன்றுவரை எந்தமுடிவும் எடுக்காமல்ஒப்பந்த ஊழியர்களை ஏமாற்றூவது சரியில்லை நமது
போரட்டாத்தை கையில் எடுப்பதை தவிர வேறு
வ ழி இல்லை  





Thursday, 25 February 2016




அருமைத் தோழர்களே ! GPF விண்ணப்பித்து பட்டுவாடாவிற்க்காக காத்து இருப்பவர் களுக்கு GPF Payment கிடைக்க வேண்டும் என்பதற்காக, நமது BSNLEU மத்திய சங்கம் டெல்லியில் தொடர் முயற்சியை எடுத்ததால் 24-02-16 GPF FUND ஒதுக்கீடு தமிழகத்திற்கு செய்யப்படும் என நமது அகிலஇந்திய உதவிப்பொதுச் செயலர் தோழர். எஸ். செல்லப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே, GPF விண்ணப் பித்தவர்களுக்கு GPF Payment கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, 22 January 2016

Sunday, 17 January 2016


GPF Advance - what is the real problem?

Employees are facing very big problem in getting GPF Advance. No GPF Advance is paid for the past 2 to 3 months. Employees are taking advance only from the money deducted from their salary. Then why BSNL is not paying GPF Advance? Fact is that, the amount deducted from employees salary is immediately being remitted to the DoT. BSNL cannot keep that money with it even for one day. BSNL is paying GPF advance to employees from it's own pocket, and claims it from DoT. But, this money is not promptly being reimbursed by DoT. This is the whole problem. At any point of time, amount varying from Rs.500 crore to Rs. 1,000 crore remains outstanding, to be reimbursed by DoT, to BSNL. Now BSNL is not having money to pay GPF advance. This matter is continuously being taken up with the Member(Finance) of the DoT, and also with the CMD BSNL and Director(HR). Yesterday also com.P.Abhimanyu GS, discussed this issue with the CMD BSNL. He has assured to make arrangement for funds in the coming week.  

Thursday, 14 January 2016

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 

Wednesday, 30 December 2015

Friday, 25 December 2015

தொழிலாளர் நல அதிகாரியுடன் பேட்டி 


   மதுரையில் 22.12.2015 அன்று தொழிலாளர் நல அதிகாரியுடன் ஒரு பேட்டி  நடைபெற்றது .

      BSNLEU சங்கம்  சார்பாக  தோழர். மகாலிங்கம்,  NFTE(BSNL)  சங்கம்  சார்பாக  தோழர். மாரி,   TNTCWU சங்கம்  சார்பாக தோழர்கள் பழனிச்சாமி மற்றும்  அந்தோணிச்சாமி, TMTCLU சங்கம்  சார்பாக  தோழர்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     வேலையை  வாங்கிக் கொண்டு சம்பளம் தர மறுக்கும் போக்கு, எதற்குப்  பிடிக்கிறோம் என்று சொல்லாமலே சம்பளத்தைப் பிடிக்கும் போக்கு மற்றும் ESI CARD, WAGE SLIP, ID CARD, UAN வழங்குதல் மற்றும் ஒப்பந்த தொழிலாளி சந்திக்கிற அனைத்து பிரச்சனைகளும் வாதிடப்பட்டன.

    உரிய நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர் நல அதிகாரி கூறி யுள்ளார். அவரது அணுகு முறையில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இதிலும் விடியவில்லை என்றால் ...

நமது அடுத்த நடவடிக்கை...

    திருச்சி சென்று நமது G.M அவர்களிடம் கூட்டாக முறையிடுவது. 





Tuesday, 22 December 2015



ஒய்வு பெற்றோருக்காக ஒரு ஆர்ப்பாட்டம்

இன்று  FORUM சார்பில் காரைக்குடி BSNL, G.M அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது . ஐம்பதுக்கும் மேற்கண்ட  தோழர்கள்  கலந்துகொண்டு  சிறப்பித்தனர் 


ஜனவரி -2007 முதல் மே-2013 வரை ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் 78.2 % DA வை  அடிப்படையாக வைத்து நிர்ணயக்கப்பட்ட பென்ஷன் வழங்கவேண்டும் என DOT யை  வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது .




Saturday, 19 December 2015


பென்ஷந்தாரர்களுக்கும்  78.2 சதமானம் கோரி 
                                                   ஆர்ப்பாட்டம் - 22.12.2015


ஜனவரி 31, 2007 லிருந்து மே 31, 2013 வரை உள்ள காலகட்டத்தில் பணி ஒய்வு பெற்ற பென்ஷந்தாரர்களுக்கு 78.2 சதமான அகவிலைப்படியை அடிப்படையாகக் கொண்டு சம்பள நிர்ணயம் செய்யும் பணி இன்னும் முடிந்தபாடில்லை .
BSNL நிர்வாகம், எதாவது ஒரு காரணம் கேட்டு, பதில் வாங்கி...   காரணம் கேட்டு, பதில் வாங்கி  மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் கதையாக இருக்கிறதே தவிர விடிந்தபாடில்லை.
இழுத்தடிக்கும் போக்கைக் கண்டித்து ...
உடனடியாக பண பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி 
FORUM அறைகூவலுக்கு இணங்க 

22.12.2015 அன்று காரைக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மாலை 5.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் 

அனைவரும் வருக!

தோழமையுடன் 
பொ.மகாலிங்கம் 
convenor, FORUM
KARAIKUDI
 

Thursday, 17 December 2015

மகத்தான பணி 




WATERWORLD Scenes from a water-logged Mount Road (above) and Chetpet ...





சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பகுதிகள் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் கூட, சுத்தமும் சுகாதாரமும்   
இயல்பு நிலைக்குத் திரும்ப ஏராளமான மனிதர்களின் உழைப்புத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு நமது மானிலச் சங்கமும் ஒப்பந்த ஊழியர்கள்  சங்கமும் களத்தில் இறங்கி  தூய்மைப்பணியாற்றியது 

மகத்தான பணி  - காலம் 
மறக்காத  பணி - எளிய 
மக்களை நினைக்காத - தனி 
மனிதனோ 
நிறுவனமோ 
சிறக்காது இனி 

Thursday, 26 November 2015

நான் ஒரு பெருமைமிகு இந்தியன் - அமீர்கான் . . .

நாட்டில் சகிப்பற்ற தன்மை பெருகி வருவதாகவும்அதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை அளிப்பதாகவும்,பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கூறியிருந்த நிலையில்அதற்கு எதிர்ப்பு தெரிவித்துசங்-பரிவார் கூட்டம்நாடுமுழுவதும் கூச்சலில் இறங்கியுள்ளது.அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்டமதவெறி அமைப்புக்கள் வெளிப்படையாகவே மிரட்டலும் விடுத்து வருகின்றன.பா..எம்.பி.யும்இந்துத்துவவெறியைக் கிளப்பும் வகையில் தொடர்ந்து பேசி வருபவருமான யோகி ஆதித்ய நாத்,” இந்தியாவை விட்டு அமீர்கான்செல்வதை ஒருவரும் தடுக்கவில்லைமேலும் நாட்டின் மக்கள் தொகையைக் குறைக்க இது உதவும்“ என்றுவிஷத்தைக் கக்கினார்.மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் அமைச்சரும்சிவசேனா தலைவருமான ராம்தாஸ் காதம், “அமீர்கான் இங்குஇருக்க விரும்பவில்லை எனில் பாகிஸ்தான் செல்லட்டும்என்று கூறினார். “இந்தியாவை தன்நாடாக உணராதவர்கள் தேசப்பற்று பற்றியும் ‘சத்யமேவ ஜெயதே’ பற்றியும் பேசக்கூடாது” என்று சிவசேனாவின்பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கம் சாடியது. “மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் புகழையும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை;
அதன்காரணமாகவே அமீர் கானை தூண்டிவிட்டு இவ்வாறு அவர்கள் பேச வைத்துள்ளனர்” என்று பாஜக தலைவர்களில்ஒருவரான ஷாநவாஸ் ஹூசைன் விமர்சித்தார்.இந்நிலையில், ‘நாட்டில் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது’ என்ற தனதுகருத்தில் இப்போதும் உறுதியுடன்இருப்பதாகவும்தற்போது தனக்கு எதிராக கூச்சலிடு பவர்கள்தனது கருத்தைநிரூபித்து இருப்பதாகவும் அமீர்கான் பதிலடி கொடுத்துள்ளார்.மேலும்தான் ஒரு பெருமித இந்தியன் என்றும்,தனக்கோதன் மனைவிக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் அவர்கூறியுள்ளார்.இதுதொடர்பாக அமீர்கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “கடந்த காலத்திலும் சரிதற்போதும்சரி நானும் என் மனைவியும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லைஎனக்குஎதிராகப் பேசுபவர்கள் எனது பேட்டியை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது வேண்டுமென்றே தவறாக பேசுகிறார்கள்என்றுதான் சொல்ல வேண்டும்என்னை தேச எதிர்ப்பாளன் என்று அழைக்கும் அனைவருக்கும் ‘நான் ஒரு பெருமைமிகுஇந்தியன்‘ என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்இதை சொல்வதற்கு யாரின் ஒப்புதலும் தேவையில்லைஏனெனில்நான் இந்தியாவை நேசிக்கிறேன்இங்கு பிறந்தது எனது நல்வாய்ப்புநான் மனம் திறந்துபேசியதற்காகஎன்னைநோக்கி சரமாரியாக கூச்சலிட்டவர்கள் அனைவருமே நான் குறிப்பிட்ட (சகிப்புத் தன்மை குறைகிறதுஎன்ற அந்தகருத்தை தான் நிரூபித்திருக்கிறார்கள்இது என்னை வருத்தமடையச் செய்கிறதுஆனால்நான் ஏற்கெனவே கூறியகருத்துகளில் உறுதியாகஇருக்கிறேன்“ என்று அந்த அறிக்கையில் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.மேலும்இந்தியா என்றஅழகான நாட்டின் ஒருமைப்பாடுபன்முகத்தன்மைமொழிகள்கலாச்சாரங்கள்வரலாறுசகிப்புத்தன்மைஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள அமீர்கான்இவ்விஷயத்தில் தனக்கு ஆதரவாகஇருந்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்இதனிடையேஅமீர்கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும் என்றுவழக்கறிஞர் ஒருவர் கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

Wednesday, 18 November 2015

ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலை

ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலை 


 காரைக்குடி BSNL  ஒப்பந்த தொழிலாளியின் நிலை  மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதுவரை வாங்கிக் கொடிருந்த  கூலியை குறைத்ததோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே வாங்கியகூலியிலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது .  அதனால்,

18.11.2015 அன்று காரைக்குடி BSNL, G.M. அலுவலக  வளாகத்தில் BSNLEU, NFTEBSNL, TNTCWU மற்றும் TMTCLU ஆகிய சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம்  நடத்தின. BSNLEU மற்றும் NFTEBSNL ஆகிய சங்கங்களின் மாவட்டச் செயலர்கள் முறையே P.மகாலிங்கம் மற்றும் V.மாரி ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். 

நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த TNTCWU சங்கங்கத்தின் மாநில உதவிச்செயலர் தோழர் C.பழனிச்சாமி  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் 

1)  சராசரியாக மாதத்தில் 26 தினங்களுக்கு கூலி  2) 2005 ஆம் ஆண்டிலிருந்து  பிடித்து வைக்கப் பட்டுள்ள EPF தொகையை    சம்பந்தப்பட்ட  தொழிலாளியின் கணக்கில் சேர்ப்பது 3) விடுபட்டுப்போன போனஸ் வழங்க ஏற்பாடு செய்வது 4) ESI CARD, ID CARD, WAGE SLIP வழங்குவது 

போன்ற கோரிக்கைகளுக்காக, இடையிடையே கோஷங்களையும் முழக்கினர். 
காரைக்குடி BSNL நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில்,  சராசரியாக மாதத்தில் 26 தினங்களுக்கு கூலி என்கிற கோரிக்கை தவிர மற்றவைகளுக்கு ஆவன செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப்போன போனஸ் வழங்க, ஒப்பந்தக்காரர்களுக்கு கடிதம் கொடுக்கப்படும்  

Monday, 9 November 2015


தீபாவளி  நல்வாழ்த்துக்கள் 

எளிதில் பற்றிக்கொள்ளும் தீ,  சாதி, மதம்  - இவைகள்
எதிலும் பற்றிக் கொள்ளாதீர்
தீப ஒளி  ஏற்றுங்கள்
தீபாவளி போற்றுங்கள்


 Image result for images for diwali in tamil






ஒப்பந்த  ஊழியர்களுக்காக  இணைந்த  போராட்டம் 

இன்று (09.11.2015) காரைக்குடி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மதியம் 01.00 மணிக்கு  BSNLEU மற்றும் NFTEBSNL ஆகிய இரு சங்கங்களின் சார்பில் ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது.
கோரிக்கைகள் 

BSNL நிர்வாகமே !
மத்திய அரசின்  வழிகாட்டுதலின்படி  8.33 சதவீத  போனஸ் வழங்குக 
வாரவிடுமுறை  நாட்களை தொழிலாளர்  நலச்  சட்டத்தில்  குறிப்பிட்டுள்ளதைப்  போல கணக்கிட்டு  மாதத்திற்கு  சராசரியாக  26
தினங்களுக்கு  கூலி  வழங்குக 
E.S.I., EMPLOYMENT CARD, WAGE SLIP , UAN ஆகியவற்றை  வழங்க  ஆவன செய்க 
2005 ஆம்  ஆண்டிலிருந்து  பிடித்து  வைத்துள்ள  EPF தொகையை  கணக்கில்  செலுத்த  உடனடியாக நடவடிக்கை எடு 

Monday, 19 October 2015



                                           தர்ணா 19.10.2015


தற்காலிக  உற்பத்தியுடன்  இணைந்த ஊக்கத்தொகை   வழங்க கோரி இன்று பொது மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தர்ணா நடைபெற்றது . அதிகாரிகளும் ஊழியர்களுமாக முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆக்கப்பூர்வ  நடவடிக்கை வேண்டும் நிறுவனம், அதன்  ஊழியர்களை  ஊக்கப்படுத்தும் .
ஒப்பந்த ஊழியர்களின் வார விடுமுறை மற்றும் போனஸ் ஆகியவை பற்றி 16.10.2015 அன்று காரைக்குடி வந்திருந்த G.M. அவர்களிடம் நாமும் NFTE BSNL ம் கூட்டாகச் சென்று பேசினோம். நாம் சொன்ன விஷயங்களைக் கேட்டுக்கொண்ட G.M அவர்கள் , எல்லா விபரங்களையும் படித்துப் பார்த்து " எது சரியோ அதைச் செய்கிறேன் " என்று சொல்லியுள்ளார் 

Monday, 12 October 2015

Veteran actor Manorama hospitalised

மறைந்தார் மனோரமா:

தான் ஏற்றுக்கொண்ட தொழிலுக்கு
தன்னைத் தந்த தகைமை
ஆணாதிக்கம் மிக்க அந்த நாட்களிலும்
ஆணென்ன பெண்னென்ன
நானும் நிற்பேனென
நின்று நிலைத்து
வென்று காட்டியும்
நீயென்ன போ நிகர் எனக்கு யார்
என்று நடவாத குணவதி – இனி
திரையுலகம் நடக்கும் இவர்வழி – விழித்
திரை மறைக்கும் கண்ணீர் அஞ்சலி !


Monday, 5 October 2015

06.10.2015 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

கொடுபடாத ஊதியமான போனைஸ் 
எங்களின் சட்டபடியான உரிமை 
மத்திய  அரசே  BSNL நிர்வாகமே 
வழ்ங்கிடு  ஏன கோரி 
GM அலுவலகம்  முன்பு  நடைபெறும் 

Thursday, 1 October 2015

1 அக்டோபர் 2015,முதல் 5.3 % சதவீதம் IDA உயர்வு ...


அருமைத் தோழர்களே !

01-10-2015 முதல் IDA 5.3% சதவீதம் உயர்ந்துள்ளது.


இதன்மூலம்மொத்தIDA(102.6%+5.3%)107.9% சதவீதம் 

ஆகும்.என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.