பென்ஷந்தாரர்களுக்கும் 78.2 சதமானம் கோரி
ஆர்ப்பாட்டம் - 22.12.2015
ஜனவரி 31, 2007 லிருந்து மே 31, 2013 வரை உள்ள காலகட்டத்தில் பணி ஒய்வு பெற்ற பென்ஷந்தாரர்களுக்கு 78.2 சதமான அகவிலைப்படியை அடிப்படையாகக் கொண்டு சம்பள நிர்ணயம் செய்யும் பணி இன்னும் முடிந்தபாடில்லை .
BSNL நிர்வாகம், எதாவது ஒரு காரணம் கேட்டு, பதில் வாங்கி... காரணம் கேட்டு, பதில் வாங்கி மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் கதையாக இருக்கிறதே தவிர விடிந்தபாடில்லை.
இழுத்தடிக்கும் போக்கைக் கண்டித்து ...உடனடியாக பண பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி
FORUM அறைகூவலுக்கு இணங்க
22.12.2015 அன்று காரைக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மாலை 5.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்
அனைவரும் வருக!
தோழமையுடன்
பொ.மகாலிங்கம்
convenor, FORUM
KARAIKUDI
No comments:
Post a Comment