தலைப்புச் செய்திகள்
Wednesday, 30 December 2015
Friday, 25 December 2015
தொழிலாளர் நல அதிகாரியுடன் பேட்டி
மதுரையில் 22.12.2015 அன்று தொழிலாளர் நல அதிகாரியுடன் ஒரு பேட்டி நடைபெற்றது .
BSNLEU சங்கம் சார்பாக தோழர். மகாலிங்கம், NFTE(BSNL) சங்கம் சார்பாக தோழர். மாரி, TNTCWU சங்கம் சார்பாக தோழர்கள் பழனிச்சாமி மற்றும் அந்தோணிச்சாமி, TMTCLU சங்கம் சார்பாக தோழர்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலையை வாங்கிக் கொண்டு சம்பளம் தர மறுக்கும் போக்கு, எதற்குப் பிடிக்கிறோம் என்று சொல்லாமலே சம்பளத்தைப் பிடிக்கும் போக்கு மற்றும் ESI CARD, WAGE SLIP, ID CARD, UAN வழங்குதல் மற்றும் ஒப்பந்த தொழிலாளி சந்திக்கிற அனைத்து பிரச்சனைகளும் வாதிடப்பட்டன.
உரிய நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர் நல அதிகாரி கூறி யுள்ளார். அவரது அணுகு முறையில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இதிலும் விடியவில்லை என்றால் ...
நமது அடுத்த நடவடிக்கை...
திருச்சி சென்று நமது G.M அவர்களிடம் கூட்டாக முறையிடுவது.
Tuesday, 22 December 2015
ஒய்வு பெற்றோருக்காக ஒரு ஆர்ப்பாட்டம்
இன்று FORUM சார்பில் காரைக்குடி BSNL, G.M அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஐம்பதுக்கும் மேற்கண்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
ஜனவரி -2007 முதல் மே-2013 வரை ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் 78.2 % DA வை அடிப்படையாக வைத்து நிர்ணயக்கப்பட்ட பென்ஷன் வழங்கவேண்டும் என DOT யை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
Saturday, 19 December 2015
பென்ஷந்தாரர்களுக்கும் 78.2 சதமானம் கோரி
ஆர்ப்பாட்டம் - 22.12.2015
ஜனவரி 31, 2007 லிருந்து மே 31, 2013 வரை உள்ள காலகட்டத்தில் பணி ஒய்வு பெற்ற பென்ஷந்தாரர்களுக்கு 78.2 சதமான அகவிலைப்படியை அடிப்படையாகக் கொண்டு சம்பள நிர்ணயம் செய்யும் பணி இன்னும் முடிந்தபாடில்லை .
BSNL நிர்வாகம், எதாவது ஒரு காரணம் கேட்டு, பதில் வாங்கி... காரணம் கேட்டு, பதில் வாங்கி மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் கதையாக இருக்கிறதே தவிர விடிந்தபாடில்லை.
இழுத்தடிக்கும் போக்கைக் கண்டித்து ...உடனடியாக பண பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி
FORUM அறைகூவலுக்கு இணங்க
22.12.2015 அன்று காரைக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மாலை 5.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்
அனைவரும் வருக!
தோழமையுடன்
பொ.மகாலிங்கம்
convenor, FORUM
KARAIKUDI
Thursday, 17 December 2015
மகத்தான பணி
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் கூட, சுத்தமும் சுகாதாரமும்
இயல்பு நிலைக்குத் திரும்ப ஏராளமான மனிதர்களின் உழைப்புத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு நமது மானிலச் சங்கமும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கமும் களத்தில் இறங்கி தூய்மைப்பணியாற்றியது
மகத்தான பணி - காலம்
மறக்காத பணி - எளிய
மக்களை நினைக்காத - தனி
மனிதனோ
நிறுவனமோ
சிறக்காது இனி
Thursday, 26 November 2015
நான் ஒரு பெருமைமிகு இந்தியன் - அமீர்கான் . . .
நாட்டில் சகிப்பற்ற தன்மை பெருகி வருவதாகவும், அதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை அளிப்பதாகவும்,பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்-பரிவார் கூட்டம், நாடுமுழுவதும் கூச்சலில் இறங்கியுள்ளது.அமீர்கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்டமதவெறி அமைப்புக்கள் வெளிப்படையாகவே மிரட்டலும் விடுத்து வருகின்றன.பா.ஜ.க. எம்.பி.யும், இந்துத்துவவெறியைக் கிளப்பும் வகையில் தொடர்ந்து பேசி வருபவருமான யோகி ஆதித்ய நாத்,” இந்தியாவை விட்டு அமீர்கான்செல்வதை ஒருவரும் தடுக்கவில்லை; மேலும் நாட்டின் மக்கள் தொகையைக் குறைக்க இது உதவும்“ என்றுவிஷத்தைக் கக்கினார்.மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் அமைச்சரும், சிவசேனா தலைவருமான ராம்தாஸ் காதம், “அமீர்கான் இங்குஇருக்க விரும்பவில்லை எனில் பாகிஸ்தான் செல்லட்டும்”என்று கூறினார். “இந்தியாவை தன்நாடாக உணராதவர்கள் தேசப்பற்று பற்றியும் ‘சத்யமேவ ஜெயதே’ பற்றியும் பேசக்கூடாது” என்று சிவசேனாவின்பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கம் சாடியது. “மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் புகழையும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை;
அதன்காரணமாகவே அமீர் கானை தூண்டிவிட்டு இவ்வாறு அவர்கள் பேச வைத்துள்ளனர்” என்று பாஜக தலைவர்களில்ஒருவரான ஷாநவாஸ் ஹூசைன் விமர்சித்தார்.இந்நிலையில், ‘நாட்டில் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது’ என்ற தனதுகருத்தில் இப்போதும் உறுதியுடன்இருப்பதாகவும், தற்போது தனக்கு எதிராக கூச்சலிடு பவர்கள், தனது கருத்தைநிரூபித்து இருப்பதாகவும் அமீர்கான் பதிலடி கொடுத்துள்ளார்.மேலும், தான் ஒரு பெருமித இந்தியன் என்றும்,தனக்கோ, தன் மனைவிக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் அவர்கூறியுள்ளார்.இதுதொடர்பாக அமீர்கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “கடந்த காலத்திலும் சரி, தற்போதும்சரி நானும் என் மனைவியும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை; எனக்குஎதிராகப் பேசுபவர்கள் எனது பேட்டியை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது வேண்டுமென்றே தவறாக பேசுகிறார்கள்என்றுதான் சொல்ல வேண்டும்; என்னை தேச எதிர்ப்பாளன் என்று அழைக்கும் அனைவருக்கும் ‘நான் ஒரு பெருமைமிகுஇந்தியன்‘ என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்; இதை சொல்வதற்கு யாரின் ஒப்புதலும் தேவையில்லை; ஏனெனில்நான் இந்தியாவை நேசிக்கிறேன்; இங்கு பிறந்தது எனது நல்வாய்ப்பு; நான் மனம் திறந்துபேசியதற்காக, என்னைநோக்கி சரமாரியாக கூச்சலிட்டவர்கள் அனைவருமே நான் குறிப்பிட்ட (சகிப்புத் தன்மை குறைகிறது) என்ற அந்தகருத்தை தான் நிரூபித்திருக்கிறார்கள்; இது என்னை வருத்தமடையச் செய்கிறது; ஆனால், நான் ஏற்கெனவே கூறியகருத்துகளில் உறுதியாகஇருக்கிறேன்“ என்று அந்த அறிக்கையில் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்தியா என்றஅழகான நாட்டின் ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை, மொழிகள், கலாச்சாரங்கள், வரலாறு, சகிப்புத்தன்மைஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள அமீர்கான், இவ்விஷயத்தில் தனக்கு ஆதரவாகஇருந்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமீர்கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும் என்று, வழக்கறிஞர் ஒருவர் கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
Wednesday, 18 November 2015
ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலை
ஒப்பந்த ஊழியர்களின் அவல நிலை
18.11.2015 அன்று காரைக்குடி BSNL, G.M. அலுவலக வளாகத்தில் BSNLEU, NFTEBSNL, TNTCWU மற்றும் TMTCLU ஆகிய சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. BSNLEU மற்றும் NFTEBSNL ஆகிய சங்கங்களின் மாவட்டச் செயலர்கள் முறையே P.மகாலிங்கம் மற்றும் V.மாரி ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர்.
நாகர்கோவிலில் இருந்து வந்திருந்த TNTCWU சங்கங்கத்தின் மாநில உதவிச்செயலர் தோழர் C.பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்1) சராசரியாக மாதத்தில் 26 தினங்களுக்கு கூலி 2) 2005 ஆம் ஆண்டிலிருந்து பிடித்து வைக்கப் பட்டுள்ள EPF தொகையை சம்பந்தப்பட்ட தொழிலாளியின் கணக்கில் சேர்ப்பது 3) விடுபட்டுப்போன போனஸ் வழங்க ஏற்பாடு செய்வது 4) ESI CARD, ID CARD, WAGE SLIP வழங்குவது
போன்ற கோரிக்கைகளுக்காக, இடையிடையே கோஷங்களையும் முழக்கினர்.காரைக்குடி BSNL நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில், சராசரியாக மாதத்தில் 26 தினங்களுக்கு கூலி என்கிற கோரிக்கை தவிர மற்றவைகளுக்கு ஆவன செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப்போன போனஸ் வழங்க, ஒப்பந்தக்காரர்களுக்கு கடிதம் கொடுக்கப்படும்
Monday, 9 November 2015
ஒப்பந்த ஊழியர்களுக்காக இணைந்த போராட்டம்
இன்று (09.11.2015) காரைக்குடி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மதியம் 01.00 மணிக்கு BSNLEU மற்றும் NFTEBSNL ஆகிய இரு சங்கங்களின் சார்பில் ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது.
கோரிக்கைகள்
BSNL நிர்வாகமே !
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 8.33 சதவீத போனஸ் வழங்குக
வாரவிடுமுறை நாட்களை தொழிலாளர் நலச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல கணக்கிட்டு மாதத்திற்கு சராசரியாக 26
தினங்களுக்கு கூலி வழங்குக
E.S.I., EMPLOYMENT CARD, WAGE SLIP , UAN ஆகியவற்றை வழங்க ஆவன செய்க
2005 ஆம் ஆண்டிலிருந்து பிடித்து வைத்துள்ள EPF தொகையை கணக்கில் செலுத்த உடனடியாக நடவடிக்கை எடு
Monday, 19 October 2015
தர்ணா 19.10.2015
தற்காலிக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்க கோரி இன்று பொது மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தர்ணா நடைபெற்றது . அதிகாரிகளும் ஊழியர்களுமாக முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆக்கப்பூர்வ நடவடிக்கை வேண்டும் நிறுவனம், அதன் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் .
ஒப்பந்த ஊழியர்களின் வார விடுமுறை மற்றும் போனஸ் ஆகியவை பற்றி 16.10.2015 அன்று காரைக்குடி வந்திருந்த G.M. அவர்களிடம் நாமும் NFTE BSNL ம் கூட்டாகச் சென்று பேசினோம். நாம் சொன்ன விஷயங்களைக் கேட்டுக்கொண்ட G.M அவர்கள் , எல்லா விபரங்களையும் படித்துப் பார்த்து " எது சரியோ அதைச் செய்கிறேன் " என்று சொல்லியுள்ளார்
Monday, 12 October 2015
Monday, 5 October 2015
Thursday, 1 October 2015
Friday, 18 September 2015
நமது நிறுவனத்தின் செல் கோபுரங்களை தனியாகப் பிரித்து அதை ஒரு கம்பெனியாக அமைத்து தனியாருக்கு தாரை வார்க்க தணியாத தாகத்தோடு இருக்கிற மத்திய அரசைக் கண்டித்து காரைக்குடியில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது .
காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை மணிவரை நடைபெற்றது
காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை மணிவரை நடைபெற்றது
சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் 18.09.2015 அன்று நடத்தப்பட்டது
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது
அதிகாரிகளும் ஊழியர்களுமாக நாற்பது பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
விண்ணை முட்டும் கோஷங்கள் வீராவேஷமாக முழங்கப்பட்டது
கலந்துகொண்டு சிறப்பித்த அதிகாரி களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி
Monday, 14 September 2015
Make all out preparations for massive dharna on 16.09.2015 against formation of Subsidiary Tower Company.
The Forum has decided to conduct massive dharna on 16.09.2015 against the decision of the Central Cabinet for formation of Subsidiary Tower Company. The dharnas to be conducted at the Corporate Office, Circle and SSA levels. Only a few days left, therefore, all Circle / District Secretaries are requested to make all out preparations to organise the dharna very effectively, jointly with all affiliates of the Forum at their level.
|
Saturday, 29 August 2015
செப் -2 வேலைநிறுத்த விளக்க கூட்டம்
------------------------------------------------------------------------------------------------------------
ராமநாதபுரத்தில் 31-08-2015 திங்கள் மாலை 4 மணிக்கு தொலைபேசி நிலையத்தில் நடைபெறுகிறது . நமது மாநில அமைப்புச் செயலர் தோழர் மெய்யப்பன் கிறிஸ்டோபர் சிறப்புரை ஆற்றுகிறார் .
Wednesday, 26 August 2015
Friday, 21 August 2015
Tuesday, 18 August 2015
Nationwide Trade Unions Strike:
The 11 central trade unions have called for a nationwide strike on September 2 against the anti-worker policies of the government against the attempt of the government to address the issues of trade unions through an inter-ministerial committee comprising of the five key ministers of the Narendra Modi government.
This is a big blow to the series of labour reforms of the BJP led NDA government as the trade unions have agreed upon more such frequent strikes unless the government takes back it’s decision on the recent labour law amendments, opening up of FDI in key sectors.
This call from trade unions representing 47 crore of the country’s workforce, comes on the first anniversary of the government which claims to be working on the towards welfare of the workers.
Wednesday, 12 August 2015
DEMONSTRATION AT GM OFFICE, KKD
FORUM சார்பில் இன்று ( 12.8.2015) மாலை 05.30 மணிக்கு காரைக்குடி GM அலுவலகம் முன்பாக செல் கோபுரங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் . முருகன் NFTE தலைமை தாங்கினார் . AIBSNLEA வின் மாவட்ட செயலர் தோழர் . மோகன்தாஸ் CAO , SNEA வின் மாவட்ட செயலர் தோழர் .பிரான்சிஸ் AGM, AIBSNLOA வைச் சேர்ந்த தோழர் குமார் DE, BSNLEU வின் தலைவர் தோழர் . பூமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். AITUC யைச் சேர்ந்த தோழர் .P.L. ராமச்சந்திரன் , Sep -2 ல் நடக்கவுள்ள பொது வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார். BSNLEU வின் மாவட்ட செயலர் தோழர். மகாலிங்கம், தோழர். நாகேஸ்வரன் (ஒய்வு)
NFTE ஆகியோர் கோஷங்களை முழக்கினர். தோழர்.ராமனாதன் SDE, AIBSNLOA நன்றி கூறி முடித்து வைத்தார் .
NFTE ஆகியோர் கோஷங்களை முழக்கினர். தோழர்.ராமனாதன் SDE, AIBSNLOA நன்றி கூறி முடித்து வைத்தார் .
Tuesday, 11 August 2015
Subscribe to:
Posts (Atom)