தலைப்புச் செய்திகள்
Wednesday, 29 April 2015
Thursday, 23 April 2015
Monday, 20 April 2015
Saturday, 18 April 2015
NFTE - BSNLEU - FNTO - SNATTA
AIBSNLEA - SNEA
- AIBSNLOA
காரைக்குடி மாவட்ட சங்கங்கள்
வேலை நிறுத்த ஆயத்த சிறப்புக்கூட்டம்
18/04/2015 - சனிக்கிழமை - மாலை 5 மணி
பொது மேலாளர் அலுவலகம்
காரைக்குடி.
பங்கேற்பு : தோழர்கள்
M.மல்லிகா
மாநில அமைப்புச்செயலர் - BSNLEU
G.முத்துக்குமரன்
மாவட்டச்செயலர் - FNTO
S.ஜெயச்சந்திரன்
அகில இந்திய துணைத்தலைவர் - AIBSNLOA
V .மோகன்தாஸ்
மாவட்டச்செயலர் - AIBSNLEA
V .முத்துமணி
மாநில செயற்குழு உறுப்பினர் - SNEA
P .செல்லப்பா
மாவட்டச்செயலர் - SNATTA
P.மகாலிங்கம்
மாவட்டச்செயலர் - BSNLEU
V .மாரி
மாவட்டச்செயலர் - NFTE
இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் ...
வெற்றியாக்குவோம் !
அனைத்து அதிகாரி ஊழியர் சங்க அறைகூவல்
தோழர்களே... வாரீர்...
Monday, 13 April 2015
Tuesday, 7 April 2015
Monday, 23 March 2015
Tuesday, 17 March 2015
முதல் தனியார் விமான நிலையம் அடுத்த மாதம் திறப்பு . . .
இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளதுர்காபூர் நகரில் வரும் ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்க இருப்பதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.
துர்காபூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில போக்குவரத்து செயலாளர் அலாபன் பண்டோபத்யாய், விமானநிலையத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இறுதிஉரிமம் இன்னும் ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும்தெரிவித்தார்.பெங்கால் ஏரோட்ரோபோலிஸ் ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தால் துவங்கப்படவுள்ள இந்த விமானநிலையத்திற்காண அனைத்து நடைமுறைகளும் குறித்த நேரத்தில் நடந்து முடிந்தால் வங்காள நாட்காட்டியின் முதல்நாளான ஏப்ரல் 14 அன்று இந்த விமான நிலையம் திறக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்Wednesday, 25 February 2015
Monday, 23 February 2015
TTA DIST.CADRE
நடக்கவிருக்கிற இலாகா
ஊழியர்களுக்கான TTA போட்டித் தேர்வில் தேர்ச்சி
பெறும் TTA க்கள் மாநிலக் கேடர்களாக மாறிவிடுவார்கள் என்கிறது நிர்வாகம்.அவ்வாறு மாற்றக்கூடாது,
மாவட்ட கேடர்களாகவே நீடிக்கவேண்டும். அதற்கான உத்தரவு வெளியான பிறகே தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட
வேண்டும் என நமது சங்கம் கோரியுள்ளது.
Wednesday, 18 February 2015
Monday, 16 February 2015
செயற்குழுவும் சிறப்புக்கூட்டமும்
-------------------------------
தோழர்களே !
பிப்ரவரி 13ந்தேதி ராமநாதபுரம் தொலைபேசி
நிலையத்தில் செயற்குழுவும் மாலையில் சிறப்புக்கூட்டமும் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் தோழர். மு.பூமிநாதன் அவர்கள்
தலைமை வகித்தார். மாநிலச் செயலர் தோழர்.அ. பாபுராதாகிருஷ்ணன் அவர்களின்
வழிகாட்டுதல், செயற்குழுவை செழுமை அடையச் செய்தது.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
ü மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மாற்றல்கள் மற்றும் சில
உறுப்பினர்களின் சம்பள முரண்பாடு ஆகியவற்றை நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட
கால கட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்துவது. நிறைவேற வில்லை எனில் போராட்ட திட்டம் வகுப்பது
கால கட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்துவது. நிறைவேற வில்லை எனில் போராட்ட திட்டம் வகுப்பது
ü மாவட்ட செயலர், தலைவர் மற்றும் பொருளாளர் ஆகிய மூவரும் கிளைகளுக்குச் சென்று
கிளைக் கூட்டங்களை தவறாமல் நடத்தச் செய்வது
ü மார்ச் 17 முதல் நடைபெற உள்ள காலவரை
அற்ற போராட்டத்தில் அனைவரும்
பங்குபெற்று முழுமையாக வெற்றி அடையச் செய்வது
உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
தோழமையுடன்
பொ.
மகாலிங்கம்
மாவட்ட
செயலர்
TNTCWU காரைக்குடி மாவட்ட சங்கத்தில் காலியாக இருந்த
பதவிகளில் கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டனர்
மாவட்டத்தலைவர் தோழர் ஆறுமுகம் CLR இராமநாதபுரம்
துணைத்தலைவர் தவசி
செயலர் அந்தோணிசாமி CLR முதுகுளத்தூர்
துணை செயலர் பூமிநாதன் SS (o) காரைக்குடி
பொருளர் பாபு CLR ராமநாதபுரம்
அமைப்பு செயலர் சரவணன் CLR பரமக்குடி
Monday, 9 February 2015
BSNL எம்ப்ளாயீஸ் யூனியன்
காரைக்குடி
மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பிதழ்
வருகிற 13.02.2015 வெள்ளிக்கிழமை
அன்று மதியம் 02.00 மணிக்கு ராமநாதபுரம் தொலைபேசி நிலையத்தில் நமது மாவட்ட தலைவர்
தோழர்.M.பூமிநாதன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு
நடைபெறும்.நமது மாநிலச்செயலர் தோழர்.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் செயற்குழுவைத் துவக்கி வைக்கிறார். மாவட்டச் சங்க நிர்வாகிகள்
மற்றும் கிளைச் செயலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன்.
ஆய்படுபொருள்: 1) கையெழுத்து இயக்கம்
2) அமைப்பு நிலை
3) இன்ன பிற தலைவர்
அனுமதியுடன்
மாலை 5 மணி : மார்ச் – 17, கால வரையற்ற வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்.
தலைமை : தோழர். M. பூமிநாதன்
மாவட்ட
தலைவர்
வரவேற்புரை: தோழர். P.மகாலிங்கம்
மாவட்ட
செயலர்
சிறப்புரை:
தோழர். A.பாபுராதாகிருஷ்ணன்
மாநிலச் செயலர் BSNLEU
நன்றியுரை: தோழர். M. லோகநாதன்,
கிளைச் செயலர்/Ramnad
தோழமையுடன்
P.மகாலிங்கம் மாவட்ட
செயலர்
Wednesday, 4 February 2015
Tuesday, 27 January 2015
Friday, 23 January 2015
இரண்டு மாதங்களாக சம்பளம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள்

சம்பளம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்.
சம்பளம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்.
திருநெல்வேலி, ஜன. 22-பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருநெல்வேலி ஸ்ரீபுரம் பி.எஸ்.என்.எல்.கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடுதொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்யு மாவட்ட உதவிச் செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் கனகமணி, சுவாமிநாதன்,பிச்சுமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுந்தர்ராஜன், சேவியர், திவ்யா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sunday, 18 January 2015
Tuesday, 13 January 2015
Sunday, 11 January 2015
25 ஆயிரம் பேரின் வேலையை பறிக்க டிசிஎஸ் நிறுவனம் முடிவு
சென்னை, ஜன. 10 -
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனம் சுமார் 25 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வது என எடுத்துள்ள முடிவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக எதிர்த்துள்ளது. இதில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்றும், டிசிஎஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை முறைப்படுத்ததனிச்சட்டம் கொண்டுவரவேண் டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு சென்னையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் மாநாட்டு வரவேற்புக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஏற்பாடுகள் குறித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் சட்டமன்றக்குழு தலைவருமான அ.சவுந்தரராசன் கூறியதாவது:-
செயலற்றுக் கிடக்கும் தமிழக அரசு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக கெட்டுவிட்டது. கூலிக்கு கொலை, திருட்டு, கொள்ளை, சங்கிலி பறிப்பு போன்றவை அதிகரித்துவிட்டது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கேட்டால், கடந்த ஆண்டை விட குறைந்துள்ளன. புகார்கள் அனைத்தையும் பதிவு செய்வதால் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என சமாதானம் சொல்கின்றனர்; உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க மறுக்கின்றனர்.அரசு செயலற்று கிடக்கிறது என்பதை போக்குவரத்து ஊழியர்கள், சர்க்கரை ஆலை ஊழியர் போராட்டங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. நோக்கியா, பிஒய்டி, பிளக்ஸ்ட்ரான் போன்ற நிறுவனங்களில் 25ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
19வயதில் வேலைக்கு எடுத்து 25வயதில் வெளியேற்றி விடுகின்றனர். பாக்ஸ்கான் நிறுவனத்தை மூடி உள்ளனர். இதனால்நேரடியாக 1200பேரும், மறைமுகமாக ஆயிரக்கணக்கானோ ரும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.தொழிற்சாலை ஆய்வாளர், தொழிலாளர் ஆய்வாளர் போன்ற பிரிவுகள் தூங்குகின்றன. இந்தத் துறைகளின் மூலம், கடந்த 65 ஆண்டுகளில் எத்தனை முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதிலிருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.
தனிச்சட்டம்
டிசிஎஸ் நிறுவனத்தில் 25ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளனர். 35வயதுக்கு மேற்பட்டவர்களை குறிவைத்து வெளியேற்றுகின்றனர். தொழில்தகராறு சட்டத்தின்படி வேலையிலிருந்து நீக்க வேண்டுமெனில், நியாயமான காரணங்களை கூறி அரசிடம் அனுமதி பெறவேண்டும். புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கக்கூடாது. ஆனால் இங்கு வேலை இல்லை
டிசிஎஸ் ஊழியர்களுக்கு சிஐடியு ஆதரவு
புதுதில்லி : நாடு முழுவதும் ஏராளமான மையங்களில் பல்லாயிரக்கணக்கா
ன ஊழியர்களின் வேலையை பறிக்க நாட்டின் மிகப்பெரும் ஐ.டி. நிறுவனமான டிசிஎஸ் முடிவு செய்திருப்பதை இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன் சென் எம்பி ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இது எந்தவிதத்திலும் தார்மீக நெறியற்றது என்றும் நீதியற்றது என்றும் குறிப்பிட்டுள்ள அவர்கள், வேலை பறிக்கப்படும் ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரும் லாபம் அடைவதற்காக இடைவிடாமல் தங்களது உழைப்பை செலுத்தியவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர். டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ள சிஐடியு, அவர்களுக்காக அனைத்து தொழிற்சங்கங்களும் குரல் எழுப்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது
Friday, 9 January 2015
மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த
விஜய்மல்லையா
ரூ. ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு டாட்டா காட்டி விமானத்தில் பறக்கிறார். கடன் கொடுத்த வங்கியாளர்கள் நமக்கென்ன ரிசர்வ் வங்கியிடம் கடன் காரங்க லிஸ்ட் கொடுத்தாச்சு. அடுத்த டார்கெட்டுக்கு ஆள்பிடிப்போமென புது தொழிலதிபருக்கு கடன் கொடுக்கிற வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள்.அந்த கடனைக் கொடுக்கச் சொல்லி வங்கிகளுக்கு உத்தரவு போட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம் எங்க ஆட்சியிலதான் அதிகமான தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்திருக் கோம் என மார்தட்டி பேட்டி கொடுத்துட்டு போறாரு. ஆனால் நமக்கெல்லாம் சோறுபோடும் கோவணம் கட்டிய ஏழை விவ சாயி சில ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான் என்ற கோபக்குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.வங்கிகளில் கடனை வாங்கிக் கொண்டு ஏமாற்றித் திரியும் தொழிலதி பர்களில் முக்கிய இடத்தை வகிப்பவர் தொழிலதிபர் திருவாளர் விஜய் மல்லைய் யாதான்.
ஒரு கையில் மதுக்கோப்பை, மறுகையில் போஸ் கொடுக்கும் மாடல் கள் சகிதமாக உலாவரும் சாராய சாம் ராஜ்ய சக்கரவர்த்தி மல்லையாவின் தயாரிப்பான சாராயத்தை அடித்துவிட்டு தள் ளாடும் குடிமகன்கள் போல் இவரது கிங் பிஷர் விமான ப்போக்குவரத்து நிறுவனமும் தள்ளாடித் தள்ளாடி கீழே விழுந்துவிட்டது. இருந்தபோதிலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தில்லாக உலகை வலம் வருகிறார்.கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண் டவர் மல்லையாவின் தந்தைவிட்டல். 20 தொழில்கள் அடங்கிய பிசினஸ் சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டு 1983ல் மறைந்த போது மல்லையாவுக்கு வயது 27, ஆனா லும் 10கோடி டாலர்களாக இருந்த சொத்தை பல்வேறு தகிடு தத்தங்களை செய்து 400 கோடி டாலர்களாக உயர்த்தினார் மல்லையா.
1984ல் மல்லையா “யுனைட்டெட் புரூவரிஸ்” தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இது உலகிலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம். மதுபானப் பிரியர்களின் சில முக்கிய பிராண்ட்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளே. மல்லையா மேலும் பல முக்கியமான மதுபான நிறுவனங்களை வாங்கி யுனைட்டெட் ப்ரூவரிஸ் உடன் இணைத்துக் கொண்டார். தற்போது இந்நிறுவனத்தின் ஆண்டு சாராய விற்பனை 20 ஆயிரம் கோடிக்கும் மேல்.விமானபோக்குவரத்து தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட பிறகு கடந்த 2003ல் `கிங்பிஷர் ஏர்லைன்ஸை‘ தொடங்கினார் மல்லையா. அது ஒரு காலத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக 64 விமானங் களை இயக்கியது. 2007ல் சிறிய விமானங்களை இயக்கும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான `ஏர்டெக்கானை’ வாங்கிய மல்லையா அதை `கிங் பிஷர் ரெட்’ என பெயர் மாற்றி இயக்கினார். பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக 2011ல் `கிங்பிஷர் ரெட்’ மூடு விழாகண்டது.
பணம்குவிக்கும் சகுனியாட்டத் தில் மட்டுமின்றி நிஜமான விளையாட்டி லும் மல்லையாவுக்கு ஆர்வம் அதிகம்.2007ல் இவரும் ஒரு ஆலந்து குடும்ப மும் இணைந்து ஸ்பைக்கர் பார்முலா ஒன் கார் பந்தய டீமை 88 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கினார். அதற்கு போர்ஸ் இண்டியா என்ற பெயரை சூட்டி னார். கொல்கத்தாவை சேர்ந்த கால்பந்து கிளப்புகளான மோகன்பகான் மற்றும் ஈஸ்ட் பெங்காலில் மல்லையா பெரும் முதலீடுகளை செய்தார். கவர்ச்சியும், பரபரப்புமாகத் தொடங்கப்பட்ட ஐபிஎல்கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ் சர்ஸ் அணியை 111.6 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். கிரிக்கெட் உலகின்சூப்பர் ஸ்டார்கள் பலர் அடங்கிய இந்த அணி சில ஆண்டுகளுக்கு முன் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால் கடந்த ஆண்டில் படுதோல்வியை சந்தித்தது.குதிரைப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான மல்லையா கர்நாடகத்தில் 400 ஏக்கரில் பரந்துவிரிந்த `குனிகால்’ குதிரைப் பண்ணைக்கு சொந்தக்காரர். இந்தப் பண்ணையை கர்நாடக மாநில அரசுக்கே குத்தகைக்கு விட்டுள்ளார் மல்லையா.மல்லையாவிற்கு உலகம் முழுக்க 26 இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன.
அவற்றில் மொக்கோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலுள்ள மாளிகைகளும், பெங்களூருவில் உள்ள பரம்பரை வீடும்அடங்கும். மிகுந்த ஆன்மீக நம்பிக்கை? கொண்டவர் மல்லையா ராகுகாலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. கடந்த காலங் களில் புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்ட பிறகுதான் பறக்கவே அனுமதிப்பார். திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.975 கோடி செலவில் தங்கத்தேர் ஒன்றையும் அன்பளிப்பாக அளித்துள்ளார் திருவாளர் மல்லையா. அந்த அளவுக்கு ஆன்மீகத் தில் நம்பிக்கை.இவர் தனது பொக்கிஷங்களாக கருதிகாத்து வருவது விலையுயர்ந்த கார்கள்,கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகள்தான். 2004ல் லண் டனில் நடந்த ஏலத்தில் திப்புசுல்தானின் வாளை ஒரு லட்சத்து 75 ஆயிரம் பவுண்டு கள் கொடுத்து ஏலம் எடுத்தார். 2009ல் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியின் கடிதத்தை 1.8 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தார்.மல்லையாவுக்குச் சொந்தமான `இண்டியன் எம்பரர்ஸ்’ என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று.
கலிஸ்மா என்ற 48 மீட்டர் நீள மோட்டார் படகும் மல்லையாவுக்குச் சொந்தம்.இத்தனை ஆடம்பரத்திற்கும், ஊதாரிதனத்திற்கு சொந்தக்காரராக இருக்கும் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிக் குவித்த கடன்கள் எவ்வளவு தெரியுமா? இதோ பட்டியல்.
எஸ்பிஐ கேபிட்டல் வங்கி ரூ.1,600 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.870 கோடி
பாங்க் ஆப் இந்தியா ரூ.650கோடி
பாங்க் ஆப் பரோடா ரூ.550 கோடி
யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா ரூ.430 கோடி
சென்ட்ரல் பாங்க் இந்தியா ரூ.410 கோடி
யூசிஓ வங்கி ரூ.320கோடி
கார்ப்பரேஷன் வங்கி ரூ.310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் ரூ.150 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.140கோடி
பெடரல் பேங்க் ரூ.90கோடி
பஞ்சாப் மற்றும் சிந்துபேங்க் ரூ.60கோடி
ஆக்சிஸ் பேங்க் ரூ.50 கோடி
ஜம்மு-காஷ்மீர் வங்கி ரூ.80கோடி
ஒரியன்டல் பாங்க் ஆப் கமர்ஸ் ரூ.50கோடி
எஸ்.ஆர்.இ.ஐ. உள்கட்டுமான பைனான்ஸ் நிறுவனம் ரூ.430கோடி
இவரது கடன் பட்டியலை படிக்கும் போதே கண்ணைக் கட்டுகிறது இல்லையா? இவ்வளவு கடன்களையும் வாங்கிக் கொண்டுதான் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துள்ளார் மல்லையா.யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் மல்லையா வேண்டுமென்றே தான் வாங்கிய கடனைக் கட்டாமல் பிடிவாதம் பிடிக்கிறார் என குற்றம்சாட்டி உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் இவருக்கோ, இவர் சார்ந்த நிறுவனங்களுக் கோ வங்கி சார்பில் எந்த கடனும் கொடுக் கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.
மேலும் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவும் இவ்வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் விஜய்மல்லையா, ரவி நெடுங்காடி, அனில் குமார் கங்குலி, சுபாஷ்குப்தே ஆகியோரை கடன் ஏய்ப்பாளர்களாக இவ்வங்கியின் ஜி.ஆர்.பி. அமைப்பு அறிவித்துள்ளது. மல்லையாவின் இந்தச் செயல்குறித்து மத்திய நிதிஅமைச்சகம், ரிசர்வ் வங்கி,செபி ஆகியவற்றுக்கு தெரிவிக்கப்பட் டுள்ளதாக கடன் கொடுத்த வங்கிகள் அறிவித்துள்ளன. ஏற்கெனவே மல் லையாவை மாபெரும் கடன் ஏய்ப்பாளராக அறிவிக்கலாம் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கிங் பிஷர் நிறுவனத்தையும் மல்லையா உள்ளிட்ட அதன் 4 இயக்குநர்களையும் கடன் ஏய்ப்பாளர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எல்லா வங்கி நிர்வாகங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவ்வளவு கடன்களையும் வாங்கிக் கொண்டு மது சூது, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென எந்தக் கூச்சமுமின்றி உலா வருகிறார் மல்லையா. சாதாரண நபர்கள் ஒரு இலட்சம், இரண்டு லட்சம் கடன் வாங்கினால் வீடுகள், தொழில் நிறுவனங்களை கையகப்படுத்துவதும், தங்களது பிள்ளைகளின் கல்விக் கடனை செலுத்த முடியாமல் இருக்கும் பெற்றோர்களின் பெயர்களை கடன் செலுத்தாதோர் பட்டியலில் வைத்து அசிங்கப்படுத்தும் வங்கி நிர்வாகங்கள், மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு திரியும் மல்லையா மீது என்ன நட வடிக்கை எடுக்கப் போகிறார்கள். வங்கித் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி என்ன செய்யப் போகிறார்?
Subscribe to:
Posts (Atom)









