தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 9 January 2015


மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த 

 விஜய்மல்லையா


ரூ. ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு டாட்டா காட்டி விமானத்தில் பறக்கிறார். கடன் கொடுத்த வங்கியாளர்கள் நமக்கென்ன ரிசர்வ் வங்கியிடம் கடன் காரங்க லிஸ்ட் கொடுத்தாச்சு. அடுத்த டார்கெட்டுக்கு ஆள்பிடிப்போமென புது தொழிலதிபருக்கு கடன் கொடுக்கிற வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள்.அந்த கடனைக் கொடுக்கச் சொல்லி வங்கிகளுக்கு உத்தரவு போட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம் எங்க ஆட்சியிலதான் அதிகமான தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்திருக் கோம் என மார்தட்டி பேட்டி கொடுத்துட்டு போறாரு. ஆனால் நமக்கெல்லாம் சோறுபோடும் கோவணம் கட்டிய ஏழை விவ சாயி சில ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான் என்ற கோபக்குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.வங்கிகளில் கடனை வாங்கிக் கொண்டு ஏமாற்றித் திரியும் தொழிலதி பர்களில் முக்கிய இடத்தை வகிப்பவர் தொழிலதிபர் திருவாளர் விஜய் மல்லைய் யாதான்.
ஒரு கையில் மதுக்கோப்பை, மறுகையில் போஸ் கொடுக்கும் மாடல் கள் சகிதமாக உலாவரும் சாராய சாம் ராஜ்ய சக்கரவர்த்தி மல்லையாவின் தயாரிப்பான சாராயத்தை அடித்துவிட்டு தள் ளாடும் குடிமகன்கள் போல் இவரது கிங் பிஷர் விமான ப்போக்குவரத்து நிறுவனமும் தள்ளாடித் தள்ளாடி கீழே விழுந்துவிட்டது. இருந்தபோதிலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தில்லாக உலகை வலம் வருகிறார்.கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண் டவர் மல்லையாவின் தந்தைவிட்டல். 20 தொழில்கள் அடங்கிய பிசினஸ் சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டு 1983ல் மறைந்த போது மல்லையாவுக்கு வயது 27, ஆனா லும் 10கோடி டாலர்களாக இருந்த சொத்தை பல்வேறு தகிடு தத்தங்களை செய்து 400 கோடி டாலர்களாக உயர்த்தினார் மல்லையா.
1984ல் மல்லையா “யுனைட்டெட் புரூவரிஸ்” தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இது உலகிலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம். மதுபானப் பிரியர்களின் சில முக்கிய பிராண்ட்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளே. மல்லையா மேலும் பல முக்கியமான மதுபான நிறுவனங்களை வாங்கி யுனைட்டெட் ப்ரூவரிஸ் உடன் இணைத்துக் கொண்டார். தற்போது இந்நிறுவனத்தின் ஆண்டு சாராய விற்பனை 20 ஆயிரம் கோடிக்கும் மேல்.விமானபோக்குவரத்து தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட பிறகு கடந்த 2003ல் `கிங்பிஷர் ஏர்லைன்ஸை‘ தொடங்கினார் மல்லையா. அது ஒரு காலத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக 64 விமானங் களை இயக்கியது. 2007ல் சிறிய விமானங்களை இயக்கும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான `ஏர்டெக்கானை’ வாங்கிய மல்லையா அதை `கிங் பிஷர் ரெட்’ என பெயர் மாற்றி இயக்கினார். பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக 2011ல் `கிங்பிஷர் ரெட்’ மூடு விழாகண்டது.
பணம்குவிக்கும் சகுனியாட்டத் தில் மட்டுமின்றி நிஜமான விளையாட்டி லும் மல்லையாவுக்கு ஆர்வம் அதிகம்.2007ல் இவரும் ஒரு ஆலந்து குடும்ப மும் இணைந்து ஸ்பைக்கர் பார்முலா ஒன் கார் பந்தய டீமை 88 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கினார். அதற்கு போர்ஸ் இண்டியா என்ற பெயரை சூட்டி னார். கொல்கத்தாவை சேர்ந்த கால்பந்து கிளப்புகளான மோகன்பகான் மற்றும் ஈஸ்ட் பெங்காலில் மல்லையா பெரும் முதலீடுகளை செய்தார். கவர்ச்சியும், பரபரப்புமாகத் தொடங்கப்பட்ட ஐபிஎல்கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ் சர்ஸ் அணியை 111.6 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். கிரிக்கெட் உலகின்சூப்பர் ஸ்டார்கள் பலர் அடங்கிய இந்த அணி சில ஆண்டுகளுக்கு முன் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால் கடந்த ஆண்டில் படுதோல்வியை சந்தித்தது.குதிரைப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான மல்லையா கர்நாடகத்தில் 400 ஏக்கரில் பரந்துவிரிந்த `குனிகால்’ குதிரைப் பண்ணைக்கு சொந்தக்காரர். இந்தப் பண்ணையை கர்நாடக மாநில அரசுக்கே குத்தகைக்கு விட்டுள்ளார் மல்லையா.மல்லையாவிற்கு உலகம் முழுக்க 26 இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன.
அவற்றில் மொக்கோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலுள்ள மாளிகைகளும், பெங்களூருவில் உள்ள பரம்பரை வீடும்அடங்கும். மிகுந்த ஆன்மீக நம்பிக்கை? கொண்டவர் மல்லையா ராகுகாலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. கடந்த காலங் களில் புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்ட பிறகுதான் பறக்கவே அனுமதிப்பார். திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.975 கோடி செலவில் தங்கத்தேர் ஒன்றையும் அன்பளிப்பாக அளித்துள்ளார் திருவாளர் மல்லையா. அந்த அளவுக்கு ஆன்மீகத் தில் நம்பிக்கை.இவர் தனது பொக்கிஷங்களாக கருதிகாத்து வருவது விலையுயர்ந்த கார்கள்,கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகள்தான். 2004ல் லண் டனில் நடந்த ஏலத்தில் திப்புசுல்தானின் வாளை ஒரு லட்சத்து 75 ஆயிரம் பவுண்டு கள் கொடுத்து ஏலம் எடுத்தார். 2009ல் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியின் கடிதத்தை 1.8 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தார்.மல்லையாவுக்குச் சொந்தமான `இண்டியன் எம்பரர்ஸ்’ என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று.
கலிஸ்மா என்ற 48 மீட்டர் நீள மோட்டார் படகும் மல்லையாவுக்குச் சொந்தம்.இத்தனை ஆடம்பரத்திற்கும், ஊதாரிதனத்திற்கு சொந்தக்காரராக இருக்கும் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிக் குவித்த கடன்கள் எவ்வளவு தெரியுமா? இதோ பட்டியல்.
எஸ்பிஐ கேபிட்டல் வங்கி ரூ.1,600 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.870 கோடி
பாங்க் ஆப் இந்தியா ரூ.650கோடி
பாங்க் ஆப் பரோடா ரூ.550 கோடி
யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா ரூ.430 கோடி
சென்ட்ரல் பாங்க் இந்தியா ரூ.410 கோடி
யூசிஓ வங்கி ரூ.320கோடி
கார்ப்பரேஷன் வங்கி ரூ.310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் ரூ.150 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.140கோடி
பெடரல் பேங்க் ரூ.90கோடி
பஞ்சாப் மற்றும் சிந்துபேங்க் ரூ.60கோடி
ஆக்சிஸ் பேங்க் ரூ.50 கோடி
ஜம்மு-காஷ்மீர் வங்கி ரூ.80கோடி
ஒரியன்டல் பாங்க் ஆப் கமர்ஸ் ரூ.50கோடி
எஸ்.ஆர்.இ.ஐ. உள்கட்டுமான பைனான்ஸ் நிறுவனம் ரூ.430கோடி
இவரது கடன் பட்டியலை படிக்கும் போதே கண்ணைக் கட்டுகிறது இல்லையா? இவ்வளவு கடன்களையும் வாங்கிக் கொண்டுதான் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துள்ளார் மல்லையா.யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் மல்லையா வேண்டுமென்றே தான் வாங்கிய கடனைக் கட்டாமல் பிடிவாதம் பிடிக்கிறார் என குற்றம்சாட்டி உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் இவருக்கோ, இவர் சார்ந்த நிறுவனங்களுக் கோ வங்கி சார்பில் எந்த கடனும் கொடுக் கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.
மேலும் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவும் இவ்வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் விஜய்மல்லையா, ரவி நெடுங்காடி, அனில் குமார் கங்குலி, சுபாஷ்குப்தே ஆகியோரை கடன் ஏய்ப்பாளர்களாக இவ்வங்கியின் ஜி.ஆர்.பி. அமைப்பு அறிவித்துள்ளது. மல்லையாவின் இந்தச் செயல்குறித்து மத்திய நிதிஅமைச்சகம், ரிசர்வ் வங்கி,செபி ஆகியவற்றுக்கு தெரிவிக்கப்பட் டுள்ளதாக கடன் கொடுத்த வங்கிகள் அறிவித்துள்ளன. ஏற்கெனவே மல் லையாவை மாபெரும் கடன் ஏய்ப்பாளராக அறிவிக்கலாம் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கிங் பிஷர் நிறுவனத்தையும் மல்லையா உள்ளிட்ட அதன் 4 இயக்குநர்களையும் கடன் ஏய்ப்பாளர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எல்லா வங்கி நிர்வாகங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவ்வளவு கடன்களையும் வாங்கிக் கொண்டு மது சூது, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென எந்தக் கூச்சமுமின்றி உலா வருகிறார் மல்லையா. சாதாரண நபர்கள் ஒரு இலட்சம், இரண்டு லட்சம் கடன் வாங்கினால் வீடுகள், தொழில் நிறுவனங்களை கையகப்படுத்துவதும், தங்களது பிள்ளைகளின் கல்விக் கடனை செலுத்த முடியாமல் இருக்கும் பெற்றோர்களின் பெயர்களை கடன் செலுத்தாதோர் பட்டியலில் வைத்து அசிங்கப்படுத்தும் வங்கி நிர்வாகங்கள், மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு திரியும் மல்லையா மீது என்ன நட வடிக்கை எடுக்கப் போகிறார்கள். வங்கித் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி என்ன செய்யப் போகிறார்?

No comments:

Post a Comment