தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 8 January 2015

இந்தியாவை வேட்டைக்காடாக அறிவிக்கின்ற அரசியல்வாதிகளை சொல்லவா ? அவர்களை மட்டும் செமையாக கவனித்துவிட்டு இந்திய உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சிச்செல்லும் முதலாளிகளைச் சொல்லவா ? அவர்களுக்காக காவடி தூக்கும் அப்பாவிகளைச் சொல்லவா ?

ஏமாந்த சோனகிரிகளா நாம்?
அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் நமது அரசுகள், துவங்கும் போது பல சலுகைகளை அளிக்கின்றன.அவை கோடிக்கணக்கான ரூபாய்களை லாபமாக சம்பாதித்து விட்டு, பறந்து போன பின்பு, மௌனமாய் வேடிக்கை பார்க்கின்றன. நகர்ப்புறங்களில்,திடீர் திடீரென்று முளைக்கும் சில சீட்டுக் கம்பெனிகள், பணம் கட்டி 6 மாதங்களில் இரட்டிப்பு மடங்கு பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றும்.மக்கள் ஏமாந்து நிற்பார்கள்.அதற்குப் பிறகு தான் தமிழ்சினிமா மாதிரி போலீஸ் எல்லாம் வரும். 
நோக்கியாவைத் தொடர்ந்து பாக்ஸ்கான் கம்பெனியும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கம்பி நீட்டுகிறது.
இது செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனி.2006 இல் தொடங்கப் பட்டது.
ப்ளஸ் டூ படித்த மாணவர்களைக் கூட வேலைகளுக்கு எடுத்தார்கள்.பெரிய பன்னாட்டு கம்பெனி..எதிர்காலத்தில் நல்ல சம்பளம் கிடைக்கும் என நினைத்து 18 வயதிலேயே தொழிலாளர்களாய் சேர்ந்தனர்.மேற்படிப்பை துறந்து விட்டு, 3000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தனர்.ஆனால் இன்றோ, இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.
எல்லா சலுகைகளையும் அனுபவித்து விட்டு,கோடி கோடியாய் லாபம் ஈட்டி விட்டு நோக்கியா ஓடி விட்டது.அதைக் காரணம் காட்டி, இப்போது பாக்ஸ்கானும் ஓடப் பார்க்கிறது.உண்மையில் இது நோக்கியாவை விட மிகப் பெரிய பன்னாட்டுக் கம்பெனி.உலகம் முழுவதும் இதற்கு 6 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.தற்போது 1700 தொழிலாளர்கள் மட்டுமே இங்கே பணி புரிகின்றனர்.
இவர்கள் இஷ்டத்திற்கு தொழிற்சாலையை மூடக் கூடாது என தொழிலாளர் நலத்துறை சொல்லி வருகிறது.ஆனால், ஆலை வாசல் மூடிக் கிடக்கிறதே?
அரசு என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா?
58 வயது வரை வேலை உறுதி என்று சொல்லி விட்டு, 25 வயசிலேயே வீட்டிற்குப் போ என்று சொல்கிறதே? ஒரு நியாயம் வேண்டாமா?
இந்த 1700 தொழிலாளர்களுக்காக CITU, LPF உள்ளிட்ட சங்கங்கள் போராடிக் கொண்டு இருக்கின்றன.
இது போன்ற செய்திகளை முன்னணி செய்தித்தாள்கள் தருவதில்லை.
நாளைக்கு, நம் வீட்டுக் குழந்தைகள் வேலை பார்க்கும் பன்னாட்டுக் கம்பெனியும் இதே போல செய்யாது என்பது என்ன நிச்சயம்?

No comments:

Post a Comment