இரண்டு மாதங்களாக சம்பளம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள்
திருநெல்வேலி, ஜன. 22-பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருநெல்வேலி ஸ்ரீபுரம் பி.எஸ்.என்.எல்.கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடுதொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்யு மாவட்ட உதவிச் செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் கனகமணி, சுவாமிநாதன்,பிச்சுமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுந்தர்ராஜன், சேவியர், திவ்யா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment