செயற்குழுவும் சிறப்புக்கூட்டமும்
-------------------------------
தோழர்களே !
பிப்ரவரி 13ந்தேதி ராமநாதபுரம் தொலைபேசி
நிலையத்தில் செயற்குழுவும் மாலையில் சிறப்புக்கூட்டமும் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் தோழர். மு.பூமிநாதன் அவர்கள்
தலைமை வகித்தார். மாநிலச் செயலர் தோழர்.அ. பாபுராதாகிருஷ்ணன் அவர்களின்
வழிகாட்டுதல், செயற்குழுவை செழுமை அடையச் செய்தது.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
ü மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மாற்றல்கள் மற்றும் சில
உறுப்பினர்களின் சம்பள முரண்பாடு ஆகியவற்றை நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட
கால கட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்துவது. நிறைவேற வில்லை எனில் போராட்ட திட்டம் வகுப்பது
கால கட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்துவது. நிறைவேற வில்லை எனில் போராட்ட திட்டம் வகுப்பது
ü மாவட்ட செயலர், தலைவர் மற்றும் பொருளாளர் ஆகிய மூவரும் கிளைகளுக்குச் சென்று
கிளைக் கூட்டங்களை தவறாமல் நடத்தச் செய்வது
ü மார்ச் 17 முதல் நடைபெற உள்ள காலவரை
அற்ற போராட்டத்தில் அனைவரும்
பங்குபெற்று முழுமையாக வெற்றி அடையச் செய்வது
உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
தோழமையுடன்
பொ.
மகாலிங்கம்
மாவட்ட
செயலர்
No comments:
Post a Comment