தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday, 29 January 2014


பார்சிலோனாவில் தோழர் V A N நம்பூதிரி



அனைத்துலக ஓய்வூதியர்களின் கூட்டம், ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரில் பிப்ரவரி 5, 6 தேதிகளில் நடைபெற உள்ளது. சர்வதேச ஓய்வூதியர்கள் தொழிற்சங்கத்தைக் கட்டமைப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. உலகத்தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் சில  ஓய்வூதியர்கள் அமைப்பும் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.
BSNLEU வின் அகில இந்தியத்தலைவரும்,
AIBDPA ஆலோசகருமான
தோழர். V A N நம்பூதிரி அவர்கள் கலந்து கொள்கிறார்.


கனரா வங்கிக் கடன் 31.12.2014 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது


சொசைட்டி தேர்தல்



சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
மனு தாக்கல் : பிப்ரவரி 19 முதல் 21 வரை.
தகுதியுள்ளவர்கள் அறிவிப்பு: பிப்ரவரி 24
மனு திரும்ப பெற கடைசி நாள்: பிப்ரவரி 25 முதல் 27 வரை.
போட்டி இருந்தால் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு: பிப்ரவரி28.
தேர்தல் மார்ச் மாதத்தில் இருக்கும்.

Saturday, 25 January 2014



செய்தித் துளிகள் . . .



டில்லி அரசின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுகிறார்கள்
டில்லி அரசின் கீழ் பணிபுரியும் ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான 13 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஒரு மாத காலத்திற்குள் தனது பரிந்துரையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள்.
BSNL உட்பட நாடெங்கும் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த முடிவு ஒரு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

மும்பை, டில்லி MTNL ரோமிங் கட்டணம் ரத்து
டில்லி, மும்பை நகரங்களின் தொலைத் தொடர்பு வசதியை MTNL நிறுவனம் நிர்வகித்து வருகிறது. டில்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு இடையேயான உள் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணம் 26.01.2014 முதல் ரத்து செய்யப்படுகிறது.

தபால் துறை ATM சேவையை துவக்குகிறது
தபால் துறை வங்கிச் சேவைக்கான அனுமதிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து இருக்கிறது. 5.2.2014 முதல் அடிம் சேவையை தபால் துறை துவக்க உள்ளதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், திரு.கபில் சிபல் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு 1000 ATMகளும் அடுத்த ஆண்டு 2000 ATMகளும் திறக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
மகா சம்மேளனம் கோரிய ஊதியக்குழுவுக்கான குறிப்புகளை ஏற்க வேண்டும், தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய மாற்றம் மற்றும் பணி நிரந்தரம், பரிவு அடிப்படையாலான பணிநியமனத்தில் உள்ள தடைகளை அகற்றுதல், 5கட்ட பதவி உயர்வு போன்ற கோரிக்களுக்காக, பிப்ரவரி 12, 13 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது.
போராட்டம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்!

Thursday, 23 January 2014

செய்தித் துளிகள் . . .



வாங்கும் ஊதியத்தில் ஓய்வூதியப் பங்குத் தொகை கட்டப் படவேண்டும்
BSNL ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பங்குத் தொகையை (PENSION CONTRIBUTION) அரசுக்கு BSNL நிறுவனம் மாதந்தோறும் கட்டி வருகிறது. ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் உச்ச பட்ச ஊதியத்திற்கான பங்குத் தொகையை தற்போது BSNL கட்டி வருகிறது.
ஓய்வூதியப் பங்குத் தொகையாக
2011 – 12 ஆம் ஆண்டு ரூ.1179.65 கோடியும்
2012 -13 ஆம் ஆண்டு ரூ.916.41 கோடியும்
அரசுக்கு BSNL நிறுவனம் கட்டியுள்ளது.
இது சரியல்ல, ஊழியர்கள் அவ்வப்போது வாங்குகின்ற ஊதியத்தின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக நமது சங்கமும் ஃபோரமும் போராடி வருகிறது.

ஹரியானா மாநில அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஹரியானா மாநிலத்தில் போக்குவரத்துத் துறையில் தனியார் மயத்தை எதிர்த்தும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரியும் அம்மாநில அரசு ஊழியர்கள் ஜனவரி 21ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கினர். அரசின் அடக்குமுறைகளையும் மீறி தொடர்ந்து 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

தாவோஸில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் கூட்டம்
உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் நான்கு நாட்கள் கூட்டம் தாவோஸில் இன்று துவங்குகிறது. நூறு தேசங்களின் வர்த்தகப் புள்ளிகளும் அரசுப் பிரதிநிதிகளுமாக 2500 பேர் கலந்து கொள்கின்றனர். இது, உலகவங்கி மற்றும் சர்வதேச நிதி மையம் போன்ற முதலாளித்துவ பிரதிநிதித்துவ அமைப்பு ஆகும். வளர்ச்சி அடையாத, வளர்கின்ற நாடுகளைக் குறிவைத்தே இதன் முடிவுகள் இருக்கும்.

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள், 31.3.2014 வரை மட்டுமே செல்லும்
2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் 31.03.2014க்குப் பிறகு செல்லத்தக்கதல்ல என்றும் 01.04.2014க்குப் பிறகு அந்த நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளது.