தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 6 March 2014

செய்தித் துளிகள்



EPF  வட்டி 8.75%
ஊழியர்கள் வைப்பு நிதிக்கு 9.5% வட்டி வழங்க வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன. ஆனால், வட்டி விகிதத்தை 8.5%ல் இருந்து 8.75% ஆக மட்டுமே அதிகரிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
               
வங்கிகளுக்கான வாராக் கடன் ரூ.2.36 லட்சம் கோடி (236000,0000000)
பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் இரண்டு லட்சத்து முப்பத்தாறாயிரம் கோடியைத் தாண்டி விட்டதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வாராக் கடனில் முதன்மை கார்ப்பொரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைகள் தான் அதிகம். கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் அளித்து வரும் பல்வேறு சலுகைகள் போதாதென்று அவர்களிடம் இருந்து வாரக்கடனை வசூலிப்பதிலும் மெத்தனம் காட்டப்படுகின்றது. ஆனால், சாதாரண மக்களின் சில ஆயிரம் கடன் பாக்கிக்கே ஜப்தி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வர்க்க பேத வேற்றுமையே இதற்கான முழுமுதல் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
 
பணம் கட்டாமல் மருத்துவ வசதி -  நிறுத்தம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு CGHS வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் பணம் கட்டாமல் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஏற்பாடு இருந்தது. மருத்துவச் செலவுக்காக அந்த மருத்துவ மனைகளுக்கு வழங்க வேண்டிய கட்டணம் 200 கோடிக்கும் மேலாக நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் மருத்துவ மனைகள் இந்த ஏற்பாட்டை தொடர முடியாது என்று மறுத்து விட்டன. இதன் காரணமாக 50 லட்சம் ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

Saturday, 1 March 2014


இந்தியன் ஆயில் பங்கு விற்பனையில் இறுதி முடிவு: ரூ. 5,300 கோடி திரட்ட வாய்ப்பு



இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (..சி.) 10 சதவீத அளவுப் பங்குகளை பொதுத் துறை நிறுவனங்களுக்கு சலுகை விலையில் விற்பது தொடர்பாக மத்திய அமைச்சர் குழு கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 5,300 கோடி திரட்ட இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

..சி.யின் 10 சதவீத அளவுப் பங்குகளை விற்பது குறித்து அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர் குழுவின் சிறப்பு கூட்டம் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் .சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எண்ணெய்-இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பங்கு விற்பனை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத அளவுப் பங்குகளை (சுமார் 24.27 கோடி பங்குகள்), பொதுத் துறையைச் சேர்ந்த .என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இரு நிறுவனங்களும் தலா 5 சதவீத பங்குகளைப் பெறும். ..சி.யின் பங்கு விலையில் 10 சதவீத அளவு தள்ளுபடி விலையில் பங்குகளை அளிப்பது பற்றிய முக்கிய முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை காலையில் ..சி. பங்கின் விலை ரூ. 249 என்ற நிலையில் இருந்தது. இதையடுத்து, நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ. 60,456 கோடியாக உள்ளது.

சந்தை விலையை விட ஒரு சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ பங்கு விலையை நிர்ணயிக்கலாம் என்று ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், .என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களில் ..சி. பங்கின் சராசரி விலையை மதிப்பிட்டு, பங்குகளை வாங்குவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இதையடுத்து, சந்தையில் நிலவும் பங்கு விலையில் 10 சதவீத தள்ளுபடி அளிக்க அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர் குழு தீர்மானித்தது. இந்த விற்பனை மூலம் ரூ. 5,300 கோடி திரட்ட இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்: தினமணி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு



பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்ளூர் விற்பனை வரி, மதிப்புக் கூட்டு (வாட்) வரிகளுடன் சேர்த்து சென்னையில் பெட்ரோல் விலை 77 பைசாவும், டீசல் விலை 61 பைசாவும் அதிரிக்கிறது.

உள்ளூர் விற்பனை வரிகளுக்கேற்ப பிற நகரங்களிலும் சிறிய மாறுபாடுகளுடன் இந்த விலையேற்றம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடைசி முறையாக கடந்த ஜனவரி 4-ஆம் தேதிதான் பெட்ரோல் விலை 91 பைசா அதிகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பெட்ரோலிய நிறுவனங்களின் மானிய இழப்புகளை சரிக்கட்டுவதற்காக மாதந்தோறும் டீசல் விலையில் 50 பைசா அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவின்படி, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டீசலின் விலையில் 50 பைசா உயர்த்தப்பட்டது. ஆனால் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

எனினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதன் காரணமாக தற்போது பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.