நாடுதழுவிய உண்ணாவிரதம்
20.09.2016
1) 01.01.2017 முதல் அமுலாக்கப்பட வேண்டிய ஊதியமாற்றத்திற்கான
பேச்சுவார்த்தையை உடனே துவங்கிடுக.
2) புதிய PLI பார்முலாவை உருவாக்கு. ஆயுத பூஜாவிற்கு முன்தற்காலிக PLI ஆக குறைந்தபட்சம் ரூ.7,000/- வழங்கிடுக.
3) ஒவ்வொரு ஆண்டும் தேக்கநிலை ஊதியம் வழங்கி ஊதிய தேக்கத்திற்கு முடிவுகட்டிடுக.
4) NEPPயில் நிர்வாகம் உருவாக்கிய சிரமங்களுக்கு தீர்வு கண்டிடுக
5) 01.10.2000 முதல் உள்ள அனாமலிகளை உடனே தீர்வு கண்டிடுக.
6) HRA உள்ளிட்ட அலவன்ஸ்களை 78.2%
IDA அடிப்படையில் வழங்கிடுக.
7) SC/ST ஊழியர்களுக்கு DoP&T உத்தரவுபடி அனைத்து பதவி உயர்வு
தேர்வுகளிலும் தகுதி மதிப்பெண்களை குறைத்திடுக.
8) BSNL நிர்வாகக்குழுவால் ஏற்றுக் கொண்ட 01.01.2007க்கு பின் பணியமர்த்தப்பட்டு
விடுபட்ட கேடர்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு தொகை, நேரடி நியமன ஊழியர்களுக்கான
ஓய்வூதிய பங்கு, E1 ஊதிய விகிதம் மற்றும் காசுவல் ஊழியர்களுக்கு பணிக்கொடை
ஆகியவற்றை உடனே ஏற்றுக்கொள்க.
9) விடுபட்ட கேடர்களுக்கான பெயர் மாற்றம்.
10) PLI,
LTC மற்றும்மெடிகல் அலவன்ஸ்களை
மீண்டும் வழங்கிடுக.
11) காலிப்பணியிடங்கள் உள்ள மாநிலங்களில் கார்ப்பரேட் அலுவலக உத்தரவுபடி 2013 JTO மற்றும் சமீபத்தில் நடைபெற்ற
JTO/JAO,TTA/TM LICE தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்திடுக.
12) SC/ST
BACKLOG காலிப்பணியிடங்களை
உடனடியாக நிரப்பிடுக.
13) டெலிகாம் ஃபேக்டரிகளை புத்தாக்கம் செய்திடுக.
14) JTO/JAO/JE/TT தேர்வுகளை எழுதுவதற்கு நிர்ணயித்துள்ள
தகுதிக்கட்டுப்பாடுகளை தளர்த்துக.
15) 01.01.2007
முதல் 09.06.2013
வரையிலானகாலத்திற்கான 78.2%
IDA இணைப்பு நிலுவையினை உடனே
வழங்குக.
16) DOTயில் பயிற்சியை துவங்கி BSNLல் முடித்த தோழர்களுக்கு
ஜனாதிபத்திய உத்தரவை உடனே வழங்குக.
17) தகுதியான ஊழியர்களை MT தேர்வு எழுத அனுமதித்திடுக.
18) Sr.TOA
/TM/ Driver உள்ளிட்ட கேடர்களுக்கு ஊதியவிகிதத்தை மாற்றிக்கொடு. அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியை புனரமைத்திடுக.
19) கால்செண்டர்களை BSNL ஊழியர்களை கொண்டே நிர்வகிக்க
வேண்டும். OUTSOURCING தேவையில்லை.
20) விடுபட்ட காசுவல் மஸ்தூர்களையும், TSM களையும், ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரம்செய்க.
21) காசுவல்மஸ்தூர், TSMமற்றும் ஒப்பந்த ஊழியர்களின்
ஊதியத்தை அவர்கள் செய்யும் பணிகளை செய்யக்கூடிய நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக உயர்த்திக் கொடுத்திடுக.
22) குறைந்தபட்ச ஊதியம், EPF, ESI உள்ளிட்ட தொழிலாளர் நலசட்டங்களை காசுவல் மஸ்தூர், TSM மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அமுல்படுத்துக.
23) IDA ஊதியவிகிதத்தின் அடிப்படையில்
காசுவல் மஸ்தூர், TSM மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்க.
24) புதியதாக ஆளெடுப்பு நடத்துக.
No comments:
Post a Comment