தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 13 September 2016


காரைக்குடியில் மாவட்ட மாநாடு 

இன்று (13.09.2016) காரைக்குடியில், காரைக்குடி SSA வின் மாவட்ட மாநாடு 
நடைபெற்றது.
   தோழர்கள்  M.முருகையா, மாநில உதவி தலைவர்  TNTCWU  மற்றும் A. பாபு ராதாகிருஷ்ணன் மாநில செயலர்  BSNLEU ஆகியோர் முறையே தேசியக்கொடி மற்றும் சங்க கொடியினை விண்ணதிரும் கோஷங்களுக்கு  இடையே  ஏற்றிவைத்தனர்
   மாவட்ட  தலைவர் தோழர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலர்  தோழர் மகாலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.  
    BSNLEU வின்  மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
   வாழ்த்துரையில், தோழர்கள் வி. சுப்ரமணியன் AGM (Retd.), AIBDPA மற்றும் நிர்வாகம் சார்பில் திரு. ஸ்ரீதர் DGM(CFA) அவர்களும் பேசினர்.

   மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்தலை மாநில செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் நடத்தி வைத்தார் .

   தோழர்கள் P.மகாலிங்கம், M.பூமிநாதன் மற்றும் R.செழியன் ஆகியோர் முறையே தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
   மாநாட்டில், அகில இந்திய மாநாட்டு நன்கொடையாக முதல் தவணையாக ரூபாய் பத்தாயிரமும்,  AIBDPA சார்பில் ரூபாய் ஓராயிரம் வழங்கப்பட்டது 
   புதிய மாவட்ட    செயலர் தோழர். M.பூமிநாதன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

மாநில  செயலர் கௌரவிக்கப்படுகிறார்

மாநில  செயலர் சிறப்புரை ஆற்றினார். 

DGM(CFA) Sri. SRIDHAR

மாநாட்டில்  கலந்து  கொண்டோர்



  

No comments:

Post a Comment