தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 21 May 2014

தனியார்மய முடிவை எதிர்த்து மே 23ல் வங்கி ஊழியர்கள் பேரணி

புதுதில்லி,மே 20-பொதுத்துறை வங்கிகளில் தனியார் கார்ப்பரேட் நிர்வாகத்தை கொண்டுவர வேண்டும் என்று பி.ஜே.நாயக் குழு பரிந்துரை செய்திருப்பதை கண்டித்து அகில இந்திய அளவில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மே 23ம் தேதி பேரணி நடத்துகிறார்கள்.


பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்கும் கீழே குறைக்க வேண்டும் என்று கடந்த வாரம் நாயக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆக்சிஸ் வங்கியின் தலைவர் பி.ஜே.நாயக் தலைமையிலான ஆர்பிஐ செயற்குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கமாட்டோம் என்று பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்களின் ஐந்து அகில இந்திய அமைப்புகள் பேரணி நடத்துகின்றன. இந்த அமைப்புகளில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம். இந்திய தேசிய வங்கி ஊழியர்சம்மேளனம், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் இந்த கண்டனப் பேரணிக்கு அறைகூவல் விடுத்துள்ளன.

No comments:

Post a Comment