தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 29 August 2013


ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி : வசதி படைத்தவர்களுக்கு சலுகைகளை நிறுத்துக!



வசதி படைத்தவர்கள் அந்நிய கரன்சியில் முதலீடு செய்து வருவதும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை மேலும் உயரும் என்று அபாய சங்கு ஊதப்படுகிறது.
இந்நிலையில் புதுதில்லி யில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சீத்தாராம் யெச்சூரி, இந்திய நாட்டில் உள்ள வசதிபடைத்தவர்கள் அந்நிய கரன்சியில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தின் மீது அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இதற்கு காரணம் இந்திய பொருளாதாரத்தின் உள் நாட்டுத் தேவை உயராததே ஆகும் என்று கூறினார்.இப்போதைய உடனடி நடவடிக்கையாக வசதி படைத்தவர்களுக்குத் தரும் சலுகையை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வரிச்சலுகை என்ற பெயரில் வசதிபடைத்தவர்களுக்கு ஐந்து லட்சம் கோடி அளவிற்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. வசதி படைத்தவர்கள் தங்களது பணத்தை தங்கம், பங்குச் சந்தை, நில வணிகம் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் சலுகையைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவோ, வேலைவாய்பை அதிகரிக்கவோ அவர்கள் முயலவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், நாட்டில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ் நிலைமையை சமாளிக்க மத்திய அரசிடம் அரசியல் உறுதி இல்லை என்று குற்றம்சாட்டினார். பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மன்மோகன் சிங் அரசு இந்தியப் பொருளாதாரத்தை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்துள்ளது என்றார். பாஜகவின் மற்றொரு தலை வரான ஜஸ்வந்த் சின்கா கூறுகையில், நிலைமையை சீர்செய்ய முடியவில்லை என்றால் மன்மோகன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இதனிடையே மத்திய நிதி அமைச்சகம் நிலைமை தானாகவே சீராகிவிடும். மக்கள் பீதியடையவேண்டாம் என்று கூறியுள்ளது. பொருளாதார ஆலோசகர் அரவிந்த் மாயாராம் கூறு கையில், சமச்சீரற்ற உணர்ச் சிக் கொந்தளிப்பும் இப் போதுள்ள நிலைமைக்கு காரணமாகும். யாரும் பீதியடைய வேண்டியதில்லை. இது தானாகவே சரியாகி விடும் என்றார்.

மேலும் சரிவு : இதனிடையே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதனன்று மேலும் சரிவடைந்து ரூ.68 ஆக குறைந்தது. வங்கிகள் அந்நிய செலாவணி பரிவர்த்தனை (பாரக்ஸ்) சந்தையில் முந்தைய தினம் ரூபாயின் மதிப்பு 66.24ஆக இருந்தது. அது மேலும் சரிவடைந்து ரூ. 68 என்ற மிக மோசமான நிலையை எட்டியது. 1.8 சதவீதம் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

Wednesday, 28 August 2013

மாநிலச் சங்க சுற்றறிக்கை




26.8.13 அன்று மத்தியச் செயலகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்



பொருளாதாரச் சுனாமி காத்திருக்கிறது மக்களவையில் இடதுசாரிகள் எச்சரிக்கை



மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றிவரும் மோசமானக் கொள்கைகளே நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு காரணம் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதிகாரத்திலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியேற்றுவதே, நாட்டின் பொருளாதார நிலை மை சீரடைய வழி என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாடினர்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் மிகக்கடுமையாக அதிகரித்துவரும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்திக்கத் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் பல்வேறு கட்சிகளது உறுப்பினர்கள் திங்களன்று பிரச்சனை எழுப்பினர். 1991ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித் தனர்.
நாட்டின் நிலைமை நாளுக்கு நாள்மோசமாகி வரும் நிலையிலும் கூட, எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று மழுப்பிவரும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நிதியமைச்சர் .சிதம்பரத்தையும் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் விமர்சித்தனர். பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை அரசு இழந்துவிட்டது என்று விவாதத்தில் பேசிய பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
நாடு மிகப்பெரிய அழிவை நோக்கிச் சென்று கொண் டிருக்கிறது என்றும், ஒரு பெரிய பொருளாதாரச் சுனாமி காத்திருக்கிறது என்றும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப் பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் கூட்டணி அரசின் நாசகரக் கொள்கைகளே இதற்குக் காரணம் என்றும் சாடினர். சமாஜ்வாதி உறுப்பினர் சைலேந்திர குமார் பேசுகையில், 1991ல் ஏற்பட்ட நெருக்கடிச் சூழல் நிகழ்ந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது எனக்கூறினார்.
யாரும் பதற்றப் படத்தேவையில்லை என்று நிதியமைச்சர் சிதம்பரம் மீண்டும் மீண்டும் கூறிவருவதை சுட்டிக்காட்டிய அவர், சிதம்பரத்தின் வார்த்தைகளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்றும் குறிப்பிட்டார். நாடு கடுமையான நெருக்கடியை சந்திக்கும் போதிலும் பிரதமரும் நிதியமைச்சரும் அமெரிக்காவின் நெருக்கடியை தீர்ப்பதற்கே முயற்சிக்கிறார்கள் என்று சிபிஐ தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.