தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday, 1 October 2013

முதியோர் தினம் - அக்டோபர் 1



முதுமை என்பது வெகு
தொலைவில் இல்லை,
நம்மை வந்து அரவணைப்பதற்கு..

தள்ளாமை என்பது
வயோதிகத்தின் வெளிப்பாடு.

நம்மை அரவணைத்த
கைகளை நாம் அரவணைக்க
வேண்டிய நேரம்
பிறப்பில் இருந்து வாலிப
வயதுவரை நம்மை
செம்மைப் படுத்திய
அவர்களது வாழ்வை
சீரழிய விடலாமா ?

பாசத்திற்காக ஏங்குபவர்கள்
உடம்பு தளர்ந்தாலும்
மனதை தளர விடாதவர்கள்

தன்னிடம் உள்ள அனைத்தையும்
உன்னிடம் தந்தவர்கள், தனக்காக
எதுவும் வைத்துக்கொள்ளாமல்.

அவர்களுக்கு வசதி வாய்ப்பை
கொடுக்க முடியாவிட்டாலும்
உன் அருகில் வைத்துக் கொள்
அதுவே அவர்களுக்குள் யானை
பலம் வந்தது போல் தோன்றும்.

 
நீ ஜனித்த பொழுது அவர்கள்
அடைந்த ஆனந்தத்திற்கு
அளவே இல்லை.

இப்பொழுது அவர்கள்
குழந்தைகளுக்கு சமம்.

கவனித்துக் கொள்ள வேண்டியது
நம் கடமை அல்லவா?
முதுமையை போற்றுவோம்
முதியவர்களுக்கு துணையாய் இருப்போம்


காங்கிரஸ் எம்பிக்குச் சிறை



எம்.பி.பி.எஸ் இடங்கள் முறைகேட்டு வழக்கில் சிக்கியுள்ள காங்கிரஸ் எம்பி ரஷித் மசூதுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி சி.பி.. நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இவரது எம்.பி. பதவி பறிபோகிறது.

எம்.பி.பி.எஸ் சேர்க்கை இடங்களில் மாநிலங்களவை உறுப்பினரான ரஷீத் மசூத் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அவருடைய வயது காரணமாக அவருக்கு குறைந்தபட்ச தண்டனையோ விடுவிப்போ எதிர்நோக்குவதாக அவருடைய வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். கடந்த 19ம் தேதி தில்லி சி.பி. நீதிமன்றம் மசூத்தை குற்றவாளி என அறிவித்தது.

அதை தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி சி.பி. நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

லாலு குற்றவாளி



கால்நடை தீவன ஊழல் வழக்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிறப்பு சி.பி.. நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்தது.

லாலு பிரசாத் தவிர மூன்று முறை பிகார் மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன்னாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி. ஜெகதீஷ் சர்மா, நான்கு ..எஸ். அதிகாரிகள் உள்பட 44 பேர் குற்றவாளி என்றும் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள வீர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெகன்னாத் மிஸ்ரா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்மேலும் படிக்க>>>