தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday, 29 August 2015

செப் -2 வேலைநிறுத்த விளக்க கூட்டம் 

------------------------------------------------------------------------------------------------------------

   ராமநாதபுரத்தில் 31-08-2015 திங்கள் மாலை 4 மணிக்கு தொலைபேசி நிலையத்தில் நடைபெறுகிறது . நமது மாநில அமைப்புச் செயலர் தோழர் மெய்யப்பன் கிறிஸ்டோபர் சிறப்புரை ஆற்றுகிறார் .

Wednesday, 26 August 2015

Friday, 21 August 2015

Tuesday, 18 August 2015

Nationwide Trade Unions Strike:

Nationwide strike
Nationwide strike
The 11 central trade unions have called for a nationwide strike on September 2 against the anti-worker policies of the government against the attempt of the government to address the issues of trade unions through an inter-ministerial committee comprising of the five key ministers of the Narendra Modi government.
This is a big blow to the series of labour reforms of the BJP led NDA government as the trade unions have agreed upon more such frequent strikes unless the government takes back it’s decision on the recent labour law amendments, opening up of FDI in key sectors.
Trade Union Strike
Trade Union Strike
This call from trade unions representing 47 crore of the country’s workforce, comes on the first anniversary of the government which claims to be working on the towards welfare of the workers.

Wednesday, 12 August 2015

DEMONSTRATION AT GM OFFICE, KKD

FORUM சார்பில் இன்று ( 12.8.2015) மாலை 05.30 மணிக்கு காரைக்குடி GM அலுவலகம் முன்பாக செல் கோபுரங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை  எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தோழர் . முருகன் NFTE தலைமை தாங்கினார் . AIBSNLEA வின் மாவட்ட செயலர் தோழர் .  மோகன்தாஸ் CAO , SNEA வின் மாவட்ட செயலர் தோழர் .பிரான்சிஸ் AGM, AIBSNLOA வைச் சேர்ந்த தோழர் குமார் DE, BSNLEU வின் தலைவர் தோழர் . பூமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். AITUC யைச் சேர்ந்த தோழர் .P.L. ராமச்சந்திரன் , Sep -2 ல் நடக்கவுள்ள பொது வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.  BSNLEU வின் மாவட்ட செயலர்  தோழர். மகாலிங்கம், தோழர். நாகேஸ்வரன் (ஒய்வு)
NFTE ஆகியோர் கோஷங்களை முழக்கினர். தோழர்.ராமனாதன் SDE,  AIBSNLOA நன்றி கூறி முடித்து வைத்தார் .

Tuesday, 11 August 2015

இன்று (10.08.2015) காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் போஸ்டு கார்டு இயக்கம் துவங்கப்பட்டது அனைவரும் ஆர்வமாக கையெழுத்திட்டனர்

Monday, 10 August 2015

கண்டன ஆர்ப்பாட்டம்

12-08-2015 அன்று நமது BSNL நிறுவனத்திடம் இருந்து டவர்களை பிரித்து புதிய துணை நிறுவனம் அமைக்கும் திட்டதிற்கு மத்திய அமைச்சரவை நேற்று இரவு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து FORUM சார்பாக சக்தி மிகுந்த ஆர்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .கிளை செயலர்கள் ஸ்தல மட்டங்களில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் சந்தித்து போராட்டத்தை வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது

Thursday, 6 August 2015

நமது  TNTCWU மாநில சங்கம் , வழககு தொடுத்ததன் பலனாக ஓப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தில்   நிலுவை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது . இந்த நிலுவைத்தொகையை கணக்கிட்டு தாமதமின்றி வழங்கவேண்டுமென மாநில நிர்வாகம் அனைத்து பொது மேலாளர்களுக்கும் கடிதம் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நாமும் மாவட்ட நிர்வாகத்துக்கு தாமதமின்றி நிலுவைத் தொகை பட்டுவாடா விற்கு ஏற்பாடு செய்யும்படி கடிதம் கொடுத்துள்ளோம் .இது விரைவில் கிடைப்பதற்க்கான சாத்தியம் உள்ளது.   

அருமைத் தோழர்களே ! அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து பொதுவான கோரிக்கைக்காக நடத்தவுள்ள செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை நமது BSNL பகுதியிலும் முழுமையாக வெற்றிகரமாக்கிட ஊழியர்கள் மற்றும் மக்களிடம் விரிவடைந்த பிரச்சாரத்தை கொண்டு செல்ல   வேண்டியுள்ளது....

Wednesday, 29 July 2015

Saturday, 20 June 2015

அருமைத் தோழர்களே ! ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள டல்ஹௌசியில் கடந்த 16.06.15 முதல் 18.06.15 வரை நடைபெற்ற நமது BSNLEU மத்தியசெயற்குழு எடுத்துள்ள சில முக்கிய முடிவுகள்:
1. அனைத்து மத்திய சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தமான, 02.09.2015 ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தபோராட்டத்தில் BSNLEU சங்கமும் பங்கேற்பது.
2. Nonexecutive ஊழியர்களின் தீராத பிரச்சனைகளுக்கு JAC மூலமாக தேவைப்படும்போராட்டங்களை  நடத்த CHQ நடவடிக்கை எடுக்கும் .
3. FORUM எடுத்த முடிவின் படி ஒரு மாத கால BSNL இன் புதிய திட்டங்களை விளக்கிபிரச்சார இயக்கத்தை அனைத்து மாநில,   மாவட்டங்களில் தீவிரமாக நடத்துவது .
4.மாநில, மாவட்ட கவுன்சில் கூட்டம் நடைபெறாத இடங்களில்,கவுன்சில்கூட்டம்உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
5.மாவட்டமட்டத்தில்ஒர்க்ஸ்கமிட்டி  கூட்டம் முறையாக நடைபெறுவதை மாவட்ட செயலர்கள் உத்தரவாத படுத்தவேண்டும்.
6. K .Gபோஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக தொழிற் சங்க வகுப்புகள் நடத்தவேண்டும்
7.TELECRUSADER"பத்திரிக்கை தேவையான  எண்ணிகையை மாவட்ட செயலர்கள் மத்திய சங்கத்துக்கு தெரிவிக்கவேண்டும்

8.தமிழ்  மாநில சங்க முன்மொழிவின்படி, அடுத்த அகில இந்திய மாநாட்டை  தமிழ் மாநிலத்தில் நடத்துவதற்கு மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது

Wednesday, 27 May 2015

ஒப்பந்த ஊழியர்களின்  ஏப்ரல்  மாத சம்பளத்தை
மே 27 தேதி ஆன பின்புகூட
  கொடுக்காமல் பட்டினி போட்டு இழுத்தடிக்கும் காரைக்குடி மாவட்ட BSNL 
 நிர்வாகத்தை கண்டித்து 02.06.2015 செவ்வாய் கிழமைஅன்று பொது   மேலாளர் அலுவலகம் முன்பு  உண்ணாவிரத போராட்டம் தோழர் மகாலிங்கம் தலைமையில் நடைபெறும் 

Image result for workers struggle

Thursday, 21 May 2015

Thursday, 14 May 2015

Wednesday, 6 May 2015

நமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி . . .

RLC conciliation to take place today, on the demands of the JAC.
The Regional Labour Commissioner will hold a conciliation meeting today the 06.05.2015, between the JAC and the BSNL Management, on the demands of the one day strike that took place on 27.11.2014.
JAC meeting to be held on 12.05.2015.
A meeting of the Joint Action Committee of the Unions and Associations of the Non-Executives will be held at 1600 hrs on 12.05.2015, at the BSNLMS office. The meeting will review the status of the issues and will decide about the future course of action.
அருமைத் தோழர்களே !  நமது JAC கடந்த 27.11.2014 அன்று நடத்திய போராட்டத்தின் கோரிக்கைகள் மீது, இன்று 6.5.15 பேச்சு வாரத்தை The Regional Labour Commissioner உடன் நடைபெறும் என நமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி தெரிவித்துள்ளது.
அதேபோன்று நமது JAC  எதிர்வரும் 12.05.15 அன்று மாலை மணிக்கு டெல்லி BSNLMSஅலுவலகத்தில் கூடி ஊழியர்களின் சமிபத்திய நிலைகள் குறித்து ஆய்ந்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்ட மிட உள்ளது.

Tuesday, 5 May 2015

கனவாக இருந்த சோசலிசத்தை அறிவியலாக மாற்றினார் மாமேதை மார்க்ஸ்


எல்லாக் காலங்களுக்கும் நிலைத்திருக்கின்ற பெரும் புகழ்மிக்க, அருஞ்செயல்கள் புரிந்த மாபெரும் மனிதர்களுக்கு மத்தியில் பாட்டாளி வர்க்கத்தின் மிகச்சிறப்பான தத்துவ ஆசிரியரும் தலைவருமான கார்ல் மார்க்ஸ் தனிச்சிறப்பான இடத்தை வகிக்கிறார்.இயற்கை, சமூகம் மற்றும் மனித சிந்தனையின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற பொது விதிகளைப் பற்றி இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற போதனையைப் படைத்து அதன் மூலம் உலகத்தை இன்னும் சிறப்பான முறையில் அறிந்து கொள்வதுடன், அதைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கும் வழி காட்டியதனால் மார்க்ஸ் வரலாற்றுக்கு மிகப்பெரும் சேவை செய்திருக்கிறார்.
முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் கம்யூனிஸ்ட் சமூகத்தின் வெற்றியும் தவிர்க்க முடியாதவை என்று விஞ்ஞான ரீதியாக நிரூபித்துக் காட்டியதன் மூலம், மனித குலத்துக்கு இன்னும் சிறப்புமிக்க எதிர்காலத்தைப் பற்றி அதுவரையிலும் தெளிவில்லாத கனவாக மட்டுமே இருந்த சோஷலிசத்தை மார்க்ஸ் ஒரு விஞ்ஞானமாக மாற்றியமைத்தார். மார்க்ஸ் தன்னுடைய நண்பரான பிரடெரிக் ஏங்கல்சுடன் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்றுப் பாத்திரத்தை விஞ்ஞான ரீதியாக நிறுவினார். அதுவே மிகவும் வளர்ச்சியடைந்த, முற்றிலும் முரணில்லாத புரட்சிகரமான வர்க்கம், அது தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் ஒவ்வொரு வடிவத்திலிருந்தும் மனித குலம் அனைத்தையும் விடுவிக்கும் என்பதை எடுத்துக் காட்டினார்.
பாட்டாளி வர்க்கப் புரட்சி மற்றும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலமாக சோஷலிச சமூகத்துக்கு முன்னேறும் பாதையை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைப் பற்றிய போதனை மார்க்சியத்தின் அடிப்படையான பகுதியாகும். பாட்டாளி வர்க்கம் தன்னுடைய சொந்தப் பாட்டாளி வர்க்கக் கட்சியை அமைத்துக் கொண்டாலொழிய, முதலாளி வர்க்கத்துக்குச் சவக்குழி தோண்டுவது மற்றும் புதிய சமூகத்தை நிர்மாணிப்பது என்ற வரலாற்றுக் கடமையை அது நிறைவேற்ற முடியாது என்பதை மார்க்சிய மூலவர்கள் போதித்தார்கள்.மார்க்சின் போதனையே தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம், அதன் அடிப்படை நலன்களின் தத்துவ ரீதியான வெளியீடு; அது உலகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கின்ற விஞ்ஞானம்.மார்க்ஸ் வாழ்ந்த, பாடுபட்டுழைத்த, போராடிய காலத்தையும் நம்மையும் பிரிக்கின்ற வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தால், புரட்சிகரமான வர்க்கப் போராட்ட நிகழ்வுப் போக்கில் பெருந்திரளான உழைக்கும் மக்கள் மீது அவருடைய போதனையின் தாக்கம் எப்படி வளர்ச்சியடைந்து வருகிறது என்பதை நாம் தெளிவாகக் காண முடியும்.உழைக்கின்ற, ஒடுக்கப்பட்டிருக்கின்ற பெருந்திரளான மக்கள் அனைவருக்கும் தலைமை தாங்குகின்ற மிக வளர்ச்சியடைந்த வர்க்கமான தொழிலாளி வர்க்கம் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் மென்மேலும் அதிகரிக்கின்ற தாக்கத்தைக் கொண்டிருக்கிறது; மார்க்சினால் கண்டுபிடிக்கப்பட்டு லெனினால் மேலும் விரிந்துரைக்கப்பட்ட சமூக வளர்ச்சி பற்றிய புறநிலை விதிகளை வழிகாட்டியாகக் கொண்டு உலகத்தை அதிகத் தீவிரமாக உணர்வுப்பூர்வமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
லெனினால் வளர்க்கப்பட்டு, உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளால் படைப்பாற்றலுடன் கையாளப்பட்டு, தொடர்ச்சியாகச் செழுமைப்படுத்தப்பட்டு, சோவியத் யூனியனிலும் மற்ற சோசலிச நாடுகளிலும் சோசலிச நிர்மாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மார்க்சின் போதனை அதன் மிகச்சிறப்பான தகுதியை மென்மேலும் நம்பிக்கையூட்டுகின்ற முறையில் நிரூபித்து வருகிறது.
எ.ஸ்தெபனோவா(1985)
- கார்ல்மார்க்ஸ் வாழ்க்கைச் சுருக்கம் நூலின் முன்னுரை

மே 5 காரல் மார்க்ஸின் 198-வது பிறந்த நாள்

Wednesday, 29 April 2015

Monday, 20 April 2015

தோழர் V.வெங்கட்ராமனின் தாயார் காலமானார்.


BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில 

துணைத்தலைவர் தோழர் V.வெங்கட்ராமன், 

கோவை அவர்களின் தாயார் இன்று (20.04.2015) 

அதிகாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் 

தெரிவித்துக் கொள்கிறோம். அவரது 

குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை 

உரித்தாக்கிக் கொள்கிறோம்

Saturday, 18 April 2015

2 day strike
on 21st and 22nd April, 2015.

Demanding immediate steps for the revival of BSNL
Mobilise each and every employee to participate in the strike.
Make the strike 100% success