தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday, 30 December 2015

Friday, 25 December 2015

தொழிலாளர் நல அதிகாரியுடன் பேட்டி 


   மதுரையில் 22.12.2015 அன்று தொழிலாளர் நல அதிகாரியுடன் ஒரு பேட்டி  நடைபெற்றது .

      BSNLEU சங்கம்  சார்பாக  தோழர். மகாலிங்கம்,  NFTE(BSNL)  சங்கம்  சார்பாக  தோழர். மாரி,   TNTCWU சங்கம்  சார்பாக தோழர்கள் பழனிச்சாமி மற்றும்  அந்தோணிச்சாமி, TMTCLU சங்கம்  சார்பாக  தோழர்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     வேலையை  வாங்கிக் கொண்டு சம்பளம் தர மறுக்கும் போக்கு, எதற்குப்  பிடிக்கிறோம் என்று சொல்லாமலே சம்பளத்தைப் பிடிக்கும் போக்கு மற்றும் ESI CARD, WAGE SLIP, ID CARD, UAN வழங்குதல் மற்றும் ஒப்பந்த தொழிலாளி சந்திக்கிற அனைத்து பிரச்சனைகளும் வாதிடப்பட்டன.

    உரிய நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர் நல அதிகாரி கூறி யுள்ளார். அவரது அணுகு முறையில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இதிலும் விடியவில்லை என்றால் ...

நமது அடுத்த நடவடிக்கை...

    திருச்சி சென்று நமது G.M அவர்களிடம் கூட்டாக முறையிடுவது. 





Tuesday, 22 December 2015



ஒய்வு பெற்றோருக்காக ஒரு ஆர்ப்பாட்டம்

இன்று  FORUM சார்பில் காரைக்குடி BSNL, G.M அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது . ஐம்பதுக்கும் மேற்கண்ட  தோழர்கள்  கலந்துகொண்டு  சிறப்பித்தனர் 


ஜனவரி -2007 முதல் மே-2013 வரை ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் 78.2 % DA வை  அடிப்படையாக வைத்து நிர்ணயக்கப்பட்ட பென்ஷன் வழங்கவேண்டும் என DOT யை  வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது .




Saturday, 19 December 2015


பென்ஷந்தாரர்களுக்கும்  78.2 சதமானம் கோரி 
                                                   ஆர்ப்பாட்டம் - 22.12.2015


ஜனவரி 31, 2007 லிருந்து மே 31, 2013 வரை உள்ள காலகட்டத்தில் பணி ஒய்வு பெற்ற பென்ஷந்தாரர்களுக்கு 78.2 சதமான அகவிலைப்படியை அடிப்படையாகக் கொண்டு சம்பள நிர்ணயம் செய்யும் பணி இன்னும் முடிந்தபாடில்லை .
BSNL நிர்வாகம், எதாவது ஒரு காரணம் கேட்டு, பதில் வாங்கி...   காரணம் கேட்டு, பதில் வாங்கி  மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் கதையாக இருக்கிறதே தவிர விடிந்தபாடில்லை.
இழுத்தடிக்கும் போக்கைக் கண்டித்து ...
உடனடியாக பண பட்டுவாடாவிற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி 
FORUM அறைகூவலுக்கு இணங்க 

22.12.2015 அன்று காரைக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மாலை 5.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் 

அனைவரும் வருக!

தோழமையுடன் 
பொ.மகாலிங்கம் 
convenor, FORUM
KARAIKUDI
 

Thursday, 17 December 2015

மகத்தான பணி 




WATERWORLD Scenes from a water-logged Mount Road (above) and Chetpet ...





சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பகுதிகள் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் கூட, சுத்தமும் சுகாதாரமும்   
இயல்பு நிலைக்குத் திரும்ப ஏராளமான மனிதர்களின் உழைப்புத் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு நமது மானிலச் சங்கமும் ஒப்பந்த ஊழியர்கள்  சங்கமும் களத்தில் இறங்கி  தூய்மைப்பணியாற்றியது 

மகத்தான பணி  - காலம் 
மறக்காத  பணி - எளிய 
மக்களை நினைக்காத - தனி 
மனிதனோ 
நிறுவனமோ 
சிறக்காது இனி