தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday, 23 February 2015

TTA DIST.CADRE

நடக்கவிருக்கிற இலாகா ஊழியர்களுக்கான TTA போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறும் TTA க்கள் மாநிலக் கேடர்களாக மாறிவிடுவார்கள் என்கிறது நிர்வாகம்.அவ்வாறு மாற்றக்கூடாது, மாவட்ட கேடர்களாகவே நீடிக்கவேண்டும். அதற்கான உத்தரவு வெளியான பிறகே தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என நமது சங்கம் கோரியுள்ளது.

Monday, 16 February 2015

செயற்குழுவும் சிறப்புக்கூட்டமும்
-------------------------------
தோழர்களே !
பிப்ரவரி 13ந்தேதி ராமநாதபுரம் தொலைபேசி நிலையத்தில் செயற்குழுவும் மாலையில் சிறப்புக்கூட்டமும் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் தோழர். மு.பூமிநாதன் அவர்கள்
தலைமை வகித்தார். மாநிலச் செயலர் தோழர்.அ. பாபுராதாகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதல், செயற்குழுவை செழுமை அடையச் செய்தது.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

ü மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மாற்றல்கள் மற்றும் சில உறுப்பினர்களின் சம்பள முரண்பாடு ஆகியவற்றை நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட
கால கட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்துவது. நிறைவேற வில்லை எனில் போராட்ட திட்டம் வகுப்பது
ü மாவட்ட செயலர், தலைவர் மற்றும் பொருளாளர் ஆகிய மூவரும் கிளைகளுக்குச் சென்று கிளைக் கூட்டங்களை தவறாமல் நடத்தச் செய்வது
ü மார்ச் 17 முதல் நடைபெற உள்ள காலவரை
அற்ற போராட்டத்தில் அனைவரும் பங்குபெற்று முழுமையாக வெற்றி அடையச் செய்வது
   உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன
                               தோழமையுடன்
                              பொ. மகாலிங்கம்

                              மாவட்ட செயலர்
TNTCWU காரைக்குடி மாவட்ட சங்கத்தில் காலியாக இருந்த பதவிகளில் கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டனர்

மாவட்டத்தலைவர் தோழர்        ஆறுமுகம்  CLR இராமநாதபுரம்
துணைத்தலைவர்                              தவசி 
செயலர்                                                   அந்தோணிசாமி CLR முதுகுளத்தூர் 
துணை செயலர்                                   பூமிநாதன் SS (o) காரைக்குடி
பொருளர்                                                பாபு CLR ராமநாதபுரம்

அமைப்பு செயலர்                              சரவணன்  CLR பரமக்குடி

Monday, 9 February 2015

BSNL எம்ப்ளாயீஸ் யூனியன்
காரைக்குடி

மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பிதழ்
  
   வருகிற 13.02.2015 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 02.00 மணிக்கு ராமநாதபுரம் தொலைபேசி நிலையத்தில் நமது மாவட்ட தலைவர் தோழர்.M.பூமிநாதன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு நடைபெறும்.நமது மாநிலச்செயலர் தோழர்.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் செயற்குழுவைத் துவக்கி வைக்கிறார். மாவட்டச் சங்க நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன்.

ஆய்படுபொருள்: 1) கையெழுத்து இயக்கம்
                2) அமைப்பு நிலை
                                3) இன்ன பிற தலைவர்   
                               அனுமதியுடன்
மாலை 5 மணி : மார்ச் – 17, கால வரையற்ற வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்.
தலைமை   : தோழர். M. பூமிநாதன்       
                                  மாவட்ட தலைவர்
வரவேற்புரை:  தோழர். P.மகாலிங்கம்
                                   மாவட்ட செயலர்
சிறப்புரை:
        தோழர். A.பாபுராதாகிருஷ்ணன்              
                 மாநிலச் செயலர் BSNLEU

நன்றியுரை: தோழர்.  M. லோகநாதன்,
                                                கிளைச் செயலர்/Ramnad

                                                                                        தோழமையுடன்
                                                   P.மகாலிங்கம்                                          மாவட்ட செயலர்

Wednesday, 4 February 2015