தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday, 23 March 2015




 விசாகப்பட்டனத்தில் 22-03-2001ல் துவங்கிய BSNL ஊழியர் சங்கம் இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த BSNL,ஊழியர்கள் அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்து வருகிறது, மாவட்ட  சங்கம் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிறது

இன்று பகத்சிங் நினைவு தினம்

Tuesday, 17 March 2015

முதல் தனியார் விமான நிலையம் அடுத்த மாதம் திறப்பு . . .

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளதுர்காபூர் நகரில் வரும் ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்க இருப்பதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.
துர்காபூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில போக்குவரத்து செயலாளர் அலாபன் பண்டோபத்யாய்விமானநிலையத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும்விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இறுதிஉரிமம் இன்னும் ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும்தெரிவித்தார்.பெங்கால் ஏரோட்ரோபோலிஸ் ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தால் துவங்கப்படவுள்ள இந்த விமானநிலையத்திற்காண அனைத்து நடைமுறைகளும் குறித்த நேரத்தில் நடந்து முடிந்தால் வங்காள நாட்காட்டியின் முதல்நாளான ஏப்ரல் 14 அன்று இந்த விமான நிலையம் திறக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்